பிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான மேஜர் பசீலனின் சகோதரனுமான கணேஸ் காலமாகியுள்ளார்.
அண்மைக் காலமாக மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் காலமாகியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய பண்டாரவன்னியன், கோவலன் கண்ணகி போன்ற வரலாற்று புகழ்மிக்க நாட்டுக்கூத்துக்களில் சிறந்த நடிகனாக இவர் வலம்வந்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் போராட்ட காலங்களில் இவரின் குடும்பம் பல அளப்பரிய சேவைகளை செய்துள்ளதுடன், கணேஸ் கலையின் வெளிப்பாடாக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவராக காணப்படும் இவர், 2009 ஆம் ஆண்டு போரின் போது தனது ஒரு காலினை இழந்தபோதும்,  தனது கலையினை தனது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து வளர்த்துவந்துள்ளார்.
அதற்கமைய இவரின் பிள்ளைகள் தற்பொழுதும் கலைப்பயணத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
nantri athavannews

No comments: