இலங்கைச் செய்திகள்

.

புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின் மக்கள் தீர்ப்பிற்காக விடப்படும் - அரசாங்கம் 

“குமார் சங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் அல்ல” 

ஜனாதிபதி  வேட்பாளர்  தொடர்பில்   இதுரையில்  தீர்மானம்   எடுக்கவில்லை - பொதுஜன   பெரமுன .

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. 
அரசியல் அமைப்புக்கான வரைபு அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. 
ஆகவே இந்த புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அனைவரினதும் நிலைபாட்டினையும் பெற்று பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையை நரூபித்ததன் பின்னர் மக்கள் தீர்ப்பினூடாகவே நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். 
அலரிமாளிகையில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான பாரிய விமர்சனங்கள் தற்போது தேவையற்றதாகும். 
புதிய அரசியல் அமைப்பை உருவாக்கம் நடவடிக்கைகள் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டும் இல்லை.
 2015 ஆம் ஆண்டே புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன. 
2015 அம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரே அரசியல் அமைப்புசபையினூடாக அதன் வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார். 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxகுமார் சங்காகார சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே என்னிடம் கலந்துரையாடினார்.மேலும்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் குமார் சங்ககாரவுக்கும் தனக்கும் இடையில்  எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே இருவரும் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். 
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் குமார் சங்கக்காரவுக்கும் இடையில் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 
இன்று புதன்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஜனாதிபதி  வேட்பாளர்  தொடர்பில்   இதுரையில்  தீர்மானம்   எடுக்கவில்லை - பொதுஜன   பெரமுன 


பொதுஜன பெரனமுன  முன்னணியின்  ஜனாதிபதி  வேட்பாளர்  மற்றும்   சுதந்திர  கட்சியினுடனான புதிய  கூட்டணி  தொடர்பில்   இதுரையில்  எவ்விதமான  தீர்க்கமான தீர்மானங்களையும்   எடுக்கவில்லை.    
இரு தரப்பினரும்   தங்களின் தனிப்பட்ட  கருத்துக்களையே   குறிப்பிடுகின்றனர்.   தனிப்பட்ட   கருத்துக்கள்    கட்சிக்குள்  பாரிய   பிளவினையையும்,  எதிர்கால அரசியல்  திட்டங்களுக்கும்   பாரிய   விளைவுகளை    ஏற்படுத்தும் . 
ஆகவே   இவ்விடயங்களுக்கு பொதுஜன  பெரமுன முன்னணி   விரைவில்   மாற்று  நடவடிக்கையினை முன்னெடுக்கும்  என     பொதுஜன   பெரமுன முன்னணியின்  பொதுச்செயலாளர்  சாகர   காரியவசம்  தெரிவித்தார்.
 ஜனாதிபதி    வேட்பாளர்   தொடர்பில்     பொதுஜன  பெரமுன   முன்னணியினர்  மத்தியில்  காணப்படுகின்ற  கருத்து     வேறுப்பாடுகள்  தொடர்பில்  வினவிய    போதே  அவர்    மேற்கண்டவாறு    குறிப்பிட்டார்.
அவர்   மேலும்  குறிப்பிடுகையில், 
முரண்படுகின்ற    கருத்துக்களுக்கு  விரைவில்  ஒரு  தீர்வு   முன்வைக்கப்படும்.      சுதந்திர   கட்சியும்,  பொதுஜன   பெரமுன   முன்னணியும்   இணைந்து  செயற்படுவது  வரவேற்கத்தக்கது.    
எவ்வாறு  இருப்பினும் ஒருபோதும்   நாங்கள்  புதிய  கூட்டணி   விடயத்தில்  தொடர்ந்து  குறிப்பிட்டு  வருகின்ற   விடயங்களை  ஒருபோதும்   எவருக்காகவும்  விட்டுக்  கொடுக்கமாட்டோம்.   இவ்விடயத்தில்  பொதுஜன  பெரமுன   முன்னணியின்  உறுப்பினர்கள்  அனைவரும்   உறுதியாகவே  உள்ளோம்  என்றார்.

No comments: