நா.முத்துக்குமாருக்கு துயரோடு ஆழ்ந்த அனுதாபங்கள் - செ.பாஸ்கரன்

.
Image may contain: 1 person , beard and closeup
ஆனந்த யாழை மீட்டிய அந்தக் கவிஞன் மறைந்து விட்டான்
அழகிய கவியாய் உலவிய அவனை இறைவன்பறித்துவிட்டான்
பூக்களின்நறுமணம், சுவாசமாய் தந்தவன்
மூச்சை நிறுத்திவிட்டான்
உயிர்க் கூட்டினை விட்டுவிடுதலையாகி
கூவிப் பறந்துவிட்டான்


மரணம் பற்றிய வதந்தி ( நா.மு வின் கவிவரிகள் )

திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்
எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
"இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!
நா.முத்துக்குமார



தூர்
—-

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள் 
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த 
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

No comments: