உறவினுள் பாலியல் வன்முறை எனும் பயங்கரம் - லலிதா ப்ரூடி (Lalitha Brodie)

INCEST & SEXUAL ABUSE 

ஐந்து வயது முதல் தனது சொந்த தந்தையின் பாலியல் வன்முறைக்குள் அகப்பட்டு திண்டாடிய தமிழீழப் பெண், பதின்மப்பிராயத்தில் வெளியேறி தனது பெயரை  Jenny Starke என மாற்றி, தனது கதையை 2015ம் ஆண்டு இணையத்தளத்தில் DIARY OF A MAD TAMIL WOMAN என்ற தலைப்பில் பிரசுரித்து சரித்திரம் படைத்தார். (இதை Google பண்ணி வாசிக்கவும்) Jenny Starke M.S.W., R.S.W. தன் நண்பி தர்ஷினி இளாங்கீரன் M.A RP உடன் இணைந்து 10 - 04 - 2016 நடாத்திய கருத்தரங்கிற்கு நான் சென்றிருந்தேன்.    மிக்க ஆர்வமும் தன்னம்பிக்கையும் கொண்ட இரு இளம் யுவதிகளின், கருத்தரங்கிற்கு சுமார் நூறு தமிழீழப் பெண்கள் சில வாலிபர்கள், சில வேற்றின மக்களும் வந்திருந்தினர். வந்தவர்கள் அனைவரும் மிக்க ஆர்வத்துடன் பங்குபற்றி    Jennyம் தர்ஷினியும் உருவாக்கிய அன்பு ANBU = ABUSE NEVER BECOMES US, எனும் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.
முன்பு ஒருவராலும் பேசப்படாத இந்த INCEST உறவினுள் பாலியல் வன்முறையைப் பற்றி, தற்போது உலகளாவிய ரீதியில் சகல சமுதாயங்களும் வெளிப்படையாகப் பேசவும் எழுதவும், ஊடகங்களைப் பயன்படுத்தி வருமுன் தடுப்பதைப் பற்றி ஆராயவும் ஆரம்பித்திருக்கின்றது. ஒரு நல்ல மாற்றம்.


INCEST உறவினுள் பாலியல் வன்முறை என்பது குடும்ப உறவுக்கள் சிறுவர் நிறுமியர் தம் தந்தை, பேரன், மாமா சகோதரன் போன்றவர்களால் இக் கொடிய துன்புறுத்தலுக்கு உட்படுவது தான். இத்தகைய அனுபவத்திற்கு உள்ளாகும் சிறுவர் சிறுமியரின் ஆரோக்கிய உள்ள, உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு சிதைக்கப் படுகிறது. அவர்கள் பிறர்மேல் நம்பிக்கை வைக்க முடியாமல், பிறரை அன்புடன் நேசிக்க முடியாமல், குடும்ப உறவுகளை உருவாக்க முடியாதவர்களாகி விடுவார்கள். தான் ஊன் இத்துன்புறுத்தலை தடுத்தி நிறுத்த முயற்சிக்கவில்லை, பிறரிடம் இதைப்பற்றி ஏன் சொல்லவில்லை என்ற குற்ற உணர்வு இப்பிள்ளைகளை வருத்திக்கொண்டேயிருக்கும். இப்படி தனக்கு நடப்பது, தான் செய்த தவறினாலா? என்னால் அன்பைப் பரிமாறி பகிர்ந்து கொள்ள முடியாதிருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு அவர்களை வருத்தும். வடுப்பட்ட மனதும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான பாலியல் உறவையும், இன்பத்தையும் அநுபவிக்க முடியாத இயலாமையும் இவர்களை வாட்டும். இந்த இயலாமையால் பல திருமணங்கள் விவாகரத்தில் போய் முடியும். துர்ப்பாக்கியம் நேரலாம். தற்கொலையும் நடக்கலாம்.
இணையதளத்தில் இவை போன்ற பல சம்பவங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பற்றி Google செய்து சகலரும் வாசித்து அறிந்து கொள் வேண்டும். முக்கியமாக பெற்றோர், தமது பிள்ளைகளுக்கு இத்தகைய பாலியல் வன்முறை பற்றியும், இவற்றிற்கு ஆளாகாமல் எப்படி தம்மை பாதுகாப்பது, வருமுன் தடுப்பது என்பதைப் பற்றி கற்றுக் கொடுத்தல் அவசியம். Jenny Starke நடாத்திய அந்த கருத்தரங்கிற்கு வந்திருந்த பெண் ஒருவர், ஒரு நான்கு வயதுச்சிறுமி ஒருவரிடம், “என்னை தொட வேண்டாம்” என்று சொல்வதைக் கேட்டு தான் ஆச்சரியப் பட்டதாக விவரித்தார். வருமுன் காப்பதற்காக அச்சிறுமியின் தாய், அவ்வாறு சொல்ல தனது மகளிற்கு கற்பித்திருக்க வேண்டும். ஆகவே, சகல பெற்றோரும் தம்பிள்ளைகளுக்கு இவ்வாறான வருமுன் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போது பிள்ளைகளும் தமது பாதுகாப்பில் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.
பாலியல் துஷ்பிரயோகததால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அநுபவங்களை மனதிற்குள் மூடி மறைத்து மௌனமாகப் புழுங்கி வேதனைப்படாமல், நண்பர், உளவளத்துணையாளர் சமய ஆசாரியர்கள், வைத்தியர்கள் போன்ற தகுதி வாய்ற்தவர்களிடம் பேச வேண்டும். இவ்வாறு மனம் திறந்து பேசுவதால், மனப்பராம் குறைந்து மனவுளைச்சல் வருவதையும் தடுக்கலாம். மேலும் பாதிக்கப்பட்டவரின் மௌனத்தையும் தனிமையையும் இது குறைக்கும். தனக்கு ஆதரவும் அன்பும் இருக்கின்றன. தான் தனிமையாக இல்லை என்பதை பாதிக்கப்பட்டவருக்கு உணர்த்தி அவரைக் குணப்படுத்தும். தாம் வெவ்வேறு முறைகளில் எவ்வாறு தமது மனவுளைச்சலைக் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம் என்பதையும் கற்பிக்கும்.
பாதிக்கப்பட்டவர் ஒவ்வொருவருக்கும் பிறரின் உதவி கட்டாயம் தேவை என்பதை சகலரும் உணர வேண்டும். அவர்கள் மனம் திறந்து தமது பிரச்சனையை பிறருடன் பகிர்வது, வேறு வழிமுறைகளில் தமது பிரச்சனையை தீர்க்கக்கூடிய சாத்தியகூறுகளை ஆராய்ந்து செயல்படவும் அவர்களுக்கு உதவுகிறது. ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள் தமது பிரச்சனையை தீர்ப்பதற்கு தமக்கு விருப்பமான வெவ்வேறு வழிமுறைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

No comments: