தென் ஆப்ரிக்காவில் மூன்றாவது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2016

.
மூன்றாவது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2016 கடந்த 5-7 நாட்களில் தென் ஆப்ரிக்கா , டர்பன். மா நகரில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.


மலேசிய திருமுருக திருவாக்கு திருபீடம் , தென் ஆபிரிக்கா. முருக பக்தி மையத்துடன் இணைந்து பல் நோக்குப் பார்வையில் முருக தத்துவம் என்ற பரந்த தலைப்பின் கீழ் உலகின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான  முருக பக்தர்கள் , அறிஞர்கள்,கல்வியாளர்கள் மற்றும் சான்றோர்களும் ஆன்றோர்களும் கலந்து கொண்டு கட்டுரை படைத்தும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் , ஆன்மீக உரையாற்றியும் சிறப்பித்தனர்.


மலேசிய திருமுருக திருவாக்கு திருப்பீட பீடாதிபதி தவத்திரு பாலயோகி சுவாமிகள் , தென் ஆபிரிக்கா. முருக பக்தி மையத்தின் தலைவர் டாக்டர் சரஸ்வதி படையாச்சி ஆகியோர் தங்கள் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்த மூன்று நாள் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.விழாவில் பல் நோக்குப் பார்வையில் முருக தத்துவம் என்ற  தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரு ஆய்வுக் கட்டுரைத்.  தொகுப்புக்கள். வெளியிடப்பட்டன.


இறுதி நாள் விழாவில் , நான்காவது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2018 இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டு இலங்கையை சேர்ந்த  இந்து மீள் குடியேற்றம். புனர் வாழ்வமைப்பு ராஜாங்கஅமைச்சின் பிரதிநிதிகள் திருமதி சாந்தி நாவுக்கரசன்,  திரு உமாமகேஸ்வரன், யாழ் பல்கலைக் கழக சமஸ்கிருத துறை தலைவர் பத்மநாபன்,, சிறப்பு அழைப்பாளர்கள் யாழ் பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன், கலா நிதி சந்திரிகா சுப்ரமண்யன்  ஆகியோர் வசம் செங்கோல். ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் தஞ்சை பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் ஜி பாஸ்கரன், இந்திய நாடாளுமன்ற ஆலோசகர் முனைவர் பி. ராமசாமி ,ஆன்மீக- பேச்சாளர் மே சிவகுமாரன், திரு உமாமகேஸ்வரன், யாழ் பல்கலைக் கழக சமஸ்கிருத துறை தலைவர் பத்மநாபன், சிறப்பு அழைப்பாளர்கள் யாழ் பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன், கலா நிதி சந்திரிகா சுப்ரமண்யன், கலாநிதி நித்யானந்தன் , திருமதி சாந்தி நாவுக்கரசன் , முனைவர் சபாபதி, முனைவர் திலகவதி, முனைவர் கார்த்திகேசு பொன்னையா, ஆகியோர் கலந்து கொண்டு கட்டுரை படைத்தும் சிறப்பு சொற்பொழிவாற்றியும் சிறப்பித்தனர்.

 கலா நிதி சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய  Lord of Dance என்ற  நூலும் , முருகன் புகழ் மாலை இறுவெட்டும் வெளியிடப் பட்டன.சுவிட்சர்லாந்திலிருந்து சென்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமிகள் ஆலய தலைவர் வே.கணேசகுமார் ,  தலைமையிலான பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.,No comments: