தமிழ் சினிமா - நமது




நமது - Cineulagam
தரமான சில படங்கள் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. அதற்கு முக்கிய காரணம் படம் நன்றாக இருந்தாலும், முகம் தெரியாத சில நடிகர்களால் அந்த படம் பெரிதும் பெயர் வாங்காமல் செல்லும், ஆனால், மலையாள இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் மோகன் லால், கௌதமி என முன்னணி மற்றும் பிரபலமான நடிகர், நடிகைகள் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள படம் நமது.

கதைக்களம்

மோகன் லால் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேனேஜராக பணியாற்றுகிறார், வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என போராடுகிறார், அதேபோல் கௌதமி, கல்லூரி மாணவர் அபிராம், பள்ளி மாணவி மஹிதா ஆகியோர் அவர்கள் வாழ்க்கையில் எது முக்கியமோ அதை நோக்கி பயணிக்கின்றனர்.
இந்த 4 பேரையும் ஒரே ஒரு விஷயம் ஒன்றிணைத்து இவர்கள் வாழ்க்கையை திருப்பி போடுகின்றது, அந்த விஷயம் என்ன, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மோகன் லால் எல்லோருக்குமே தெரியும், அவர் ஒரு கம்ப்ளீட் ஆக்டர் என்று, இந்த படத்திலும் தன் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.
கௌதமியும் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்தாலும், சிறப்பாகவே நடித்துள்ளார், அதிலும் குடும்பத்தலைவியாக இவர் பல பெண்களின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வருகிறார்.
இந்த படத்தின் கதை மிகவும் எளிது தான், ஆனால் சந்திரசேகர் தன் திரைக்கதை மூலம் இதற்கு பலம் சேர்த்துள்ளார், 4 கதாபாத்திரங்களை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வரும் காட்சிகள் சூப்பர்.
மகேஷ் சங்கர் இசை மென்மையாக இருக்கின்றது, ஆனால் ஒளிப்பதிவு ஏதோ நாடகம் பார்ப்பது போலான மனநிலையை கொடுத்துவிடுகின்றது.

க்ளாப்ஸ்

மோகன் லால், கௌதமியின் யதார்த்த நடிப்பு, மஹிதி, அபிராமும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

பல்ப்ஸ்

மிகவும் மெதுவாக நகரும் காட்சியமைப்புக்கள், கமர்ஷியல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
மொத்தத்தில் இந்த பயணத்தில் நாமும் பங்கேற்கலாம்.

ரேட்டிங்- 2.75/5   நன்றி  cineulagam 


No comments: