இலங்கைச் செய்திகள்

இந்தியாவில் அகதிகளாக ஒரு இலட்சம் இலங்கையர்கள் 

அட்டன் யாழ்ப்பாணம் பஸ்சேவையை நிறுத்துமாறு அச்சுறுத்தல்

இலங்கை வந்தார் பாகிஸ்தான் பிரதமர்

''ஐ.எஸ்.அமை­ப்பில்36 இலங்­கை­யர்கள் ' புல­னாய்வு தக­வ­லுக்கு அமைய விசா­ரணை 

இலங்கையை வந்தடைந்தது  எயார்பஸ் A340..!

பரராஜசிங்கம், எக்னெலிகொட விவகாரம்  இரு இராணுவ புலனாய்வாளர் கைது

வவுனியாவில் 27 பேர் இடம்பெயர்வு

மட்டு. மாவட்டத்தில் கடும் மழை

பஷில் ராஜபக்ஷ நிதி மோசடி குற்றப்பிரிவில் ஆஜர்

இலங்கையை வந்தடைந்தார் போர்ஜ் 

மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் அகதிகளாக ஒரு இலட்சம் இலங்கையர்கள் 04/01/2016 இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்களாகியுள்ள போதும், ஒரு இலட்சத்து 22 ஆயிரம் இலங்கையர்கள் இந்தியாவில் இன்னமும் அகதிகளாக இருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகம் தெரிவித்துள்ளது.
மேலும் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஏனைய நாடுகளில் அகதிளாக இருப்பதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகம் சுட்டிகாட்டியுள்ளது.   நன்றி வீரகேசரி 


அட்டன் யாழ்ப்பாணம் பஸ்சேவையை நிறுத்துமாறு அச்சுறுத்தல்

04/01/2016 இலங்கை போக்குவரத்துச் சபை கம்பளை கிளையினால் அட்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பஸ் சேவையினை நிறுத்துமாறு கண்டியைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதிகள் சிலர். அச்சுறுத்தல் விடுத்து வருவது தொடர்பாக மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
அட்டன் யாழ்ப்பாணம் பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபை கம்பளை கிளையின் முகாமையாளரினால் ஜனவரி முதலாம் திகதி கம்பளை பஸ் நிலையத்தில் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பஸ் சேவையினை உடனடியாக நிறுத்துமாறு கண்டிக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் குறித்த பஸ்ஸின் சாரதிக்கும் நடத்துனருக்கும் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து குறித்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது குறித்த பஸ்வண்டி மாத்தளை பகுதியினூடாக பயணித்துக் கொண்டிருந்த சமயம் பொல்லு கத்திகளுடன் கெப்ரக வாகனமொன்றில் வந்த ஒரு குழுவினர் குறித்த பஸ்ஸினை இடைமறித்து அதன் சாரதியினையும் நடத்துனரையும் தாக்க முற்பட்ட சமயம் உடனடியாக பஸ் வண்டி மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கு திருப்பப்பட்டு அங்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.   நன்றி வீரகேசரி


இலங்கை வந்தார் பாகிஸ்தான் பிரதமர்


04/01/2016  இலங்கைக்கான 3 நாட்கள் உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவருடன் 9 பிரதி நிதிகளும் 2 அமைச்சர்களும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி

''ஐ.எஸ்.அமை­ப்பில்36 இலங்­கை­யர்கள் ' புல­னாய்வு தக­வ­லுக்கு அமைய விசா­ரணை 

05/01/2016 இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் நபர்கள் 36 பேர் ஐ.எஸ். அமைப்பில் சென்று இணைந்­து கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் விவகாரம் தொடர்பில் புல­னாய்வு அதி­கா­ரிகளின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமைய சரி­யான வகை யில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்போம். எவ்­வாறு இருப்­பினும் உறு­தி­யான வகையில் இந்த தக­வல்கள் கிடைக்­காத நிலையில் அவை தொடர்பில் ஆராய்ந்தே தீர்­மானம் எடுக்க முடியும் என பாது­காப்பு இரா­ஜாங்க  அமைச்சர் ருவான் விஜே­ய­வர்­த்தன தெரி­வித்தார்.

இந்த விவ­காரம் தொடர்பில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன மேலும் தகவல் தரு­கையில்
கடந்த வாரமும் இந்த முறைப்­பா­டுகள் எமக்கு கிடைத்­தி­ருந்­தன. தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான வகையில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் அலட்­சி­ய­மாக செயற்­பட முடி­யாது. மேலும் கடந்த காலத்­திலும் ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பின் கூட்­ட­ணியில் இலங்­கையை சேர்ந்த நபர்கள் உள்­ள­தாக தக­வல்கள் வெளி­வந்­தன.
இப்­போதும் புல­னாய்வு பிரிவின் தக­வல்கள் அவ்­வாறு வெளி­யிட்­டுள்­ள­தாக தெரி­விக்கப் படு­கின்­றது. ஆகவே இந்த விவ­காரம் தொடர்பில் நாட்டில் புல­னாய்வு அதி­கா­ரி­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமைய சரி­யான வகையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்போம். எவ்­வாறு இருப்­பினும் உறு­தி­யான வகையில் இந்த தக­வல்கள் கிடைக்­காத நிலையில் அவை தொடர்பில் ஆராய்ந்தே தீர்­மானம் எடுக்க முடியும் எனக் குறிப்­பிட்டார்.
இந்­நி­லையில் இந்த விவ­காரம் தொடர்பில் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்­கிய செவ்வி ஒன்றில் இலங்கை பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­ராச்சி குறிப்­பி­டு­கையில்,
இலங்­கையில் முஸ்லிம் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக சர்­வ­தேச நாடு­களின் புல­னாய்வு தக­வல்கள் எமக்கு கிடைத்­துள்­ளன. அதற்­க­மைய நாமும் ஆராய்ந்து வரு­கின்றோம். எனினும் அண்­மையில் இலங்­கையை சேர்ந்த 36 முஸ்லிம் நபர்கள் இர­க­சி­ய­மாக சிரி­யாவை சென்­ற­டைந்­துள்­ளனர். அவர்­களில் பலர் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பில் இணைந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைக்­க­பெற்­றுள்­ளன. அதேபோல் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு இஸ்­லா­மிய புனித பயணம் மேற்­கொண்டு செல்­வ­தாக கூறிக் சிறு­வர்­களும், பெண்­களும், வய­தா­ன­வர்­களும் இவ்­வாறு பயங்­க­ர­வாத குழுக்­களை சென்­ற­டை­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன.
எனினும் இவர்கள் அனை­வரும் ஒன்­றாக பய­னித்­தார்­களா, அல்­லது தனித்­த­னி­யாக பய­ணித்­தார்­களா என்­பது தொடர்பில் எமக்கு தெளி­வான தகவல் கிடைக்­க­வில்லை என குறிப்­பிட்டார்.
எவ்­வாறு இருப்­பினும் கடந்த காலங்­களில் சர்­வ­தேச அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு இலங்­கையை தள­மாக இலங்­கையில் 9 குடும்­பங்­களை சேர்ந்த 45 நபர்கள் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்பு வைத்­துள்­ள­தா­கவும் கிழக்கில் மட்டுமில்லாது குருநாகல், கண்டி, கொலன்னாவை, தெகிவளை பகுதிகளை சேர்ந்த நபர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவில் தொடர்புகொண்டுள்ளதாகவும் கடந்த வாரம் புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டதாக தெரிவிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி  


இலங்கையை வந்தடைந்தது  எயார்பஸ் A340..!

07/01/2016 இலங்கை விமானச் சேவைக்கு சொந்தமான எயார்பஸ் A340 தனது கடைசி பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான எயார்பஸ் A340 விமானத்தை இன்றுடன் தமது சேவையில் இருந்து நிறுத்திக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று தனது கடைசி பிரயாணத்தை மதுராசியில் இருந்து இலங்கைக்கு 11.25 க்கு வந்தடைந்தது.
பிரான்ஸில் தயாரிக்கப்படும் இவ்விமானம் 4 என்ஜின்களில் இயங்குகிறது குறிப்பிடத்தக்கது.
இதில் 300 பயணிகளும் 15 ஊழியர்களும் பயணிக்கலாம். இலங்கைக்கு சொந்தமான இருந்த 6 எயார்பஸ் A340 இல் சேவையிலிருந்த கடைசி எயார்பஸ் A340 என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலாக இனி எயார்பஸ் A330 மற்றும் எயார்பஸ் A300 சேவையில் ஈடுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி  


பரராஜசிங்கம், எக்னெலிகொட விவகாரம்  இரு இராணுவ புலனாய்வாளர் கைது


06/01/2016 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போக  செய்யப்பட்டமை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரால் இந்த இரு இராணுவ புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் சார்ஜன்ட் தர அதிகாரி எனவும்  புலனய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி  

வவுனியாவில் 27 பேர் இடம்பெயர்வு


06/01/2016 வவுனியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 27 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இவர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி  

மட்டு. மாவட்டத்தில் கடும் மழை
06/01/2016 மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. 
இன்று காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையான 3 மணிநேரத்தில் 24.8 மில்லி லீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகரி கே.மூரியகுமார் தெரிவித்தார்.
தொடராக பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 
வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு, ஆரையம்பதி, வாகரை உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் கடும் மழை பெய்துவருவதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணிநேரத்தில் 53.6 மில்லிலீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. 
நன்றி வீரகேசரி  

பஷில் ராஜபக்ஷ நிதி மோசடி குற்றப்பிரிவில் ஆஜர்

06/01/2016 முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வாக்கு மூலம் வழங்குவதற்காக பாரிய நிதி மோசடி குற்றப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.
திவிநெகும நிதி மோசடி தொடர்பிலே இவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி  

இலங்கையை வந்தடைந்தார் போர்ஜ் 

07/01/2016 நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே (Borge Brende) ஒருநாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார். 
இவர் டுபாய் விமானச் சேவைக்கு சொந்தமான ஆளு179 இல் 7 தூதர்களுடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
மேலும் இவர் இன்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்து கொள்ளவார். 
இலங்கை மற்றும் நோர்வேக்கு இடையிலான பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் முகமாக இவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி  


மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

07/01/2016 கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அரசடி மருத்துவ பீடத்திற்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி மட்டக்களப்பு நகர் வரை சென்று மீண்டும் மருத்துவபீடத்தை அடைந்தது.
இலங்கையில் நிறுவியுள்ள தனியார் மருத்துவ கல்லூரியை எதிர்த்தே இவ்ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரார்கள் தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தின் போது தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் மும்மொழிகளிலுமான பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி