புது வெளிச்சம் ! " இலக்கியப் பூக்கள் 2016 "

.
   
                                                   

 
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டால் யாவருக்கும் புது வெளிச்சம் வரும்
என்றொரு நம்பிக்கை மனதில் வருவது இயல்புதானே ? எந்த வருடம் ஆனாலும் அந்த வருடம் நன்மைகளை அள்ளிக் கொண்டு வரவேண்டும் என்பதில் யாவருமே ஒரே அணியில்தானே இருப்போம் ! அந்த வகையில்
தமிழ் அன்பரும் எழுத்தாளருமான ஆவூரான் என்னும் சந்திரனின் முயற்சி
யினால் யாவரது மனமும் புதுவருடத்தில் மகிழ்ச்சி அடையும் நோக்கத்தோடு
தமிழ் இலக்கியப் பாதையில் ஒரு " புது வெளிச்சம் " ஏற்பட வழிவகுத்திருக்
கிறது.
      " இலக்கியப் பூக்கள் 2016 " என்னும் ஒரு புது நிகழ்ச்சியினை அவர் 
நிகழ்த்தி யாவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கின்றார்.03ஃ01ஃ2016
ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு லின்புறூக் கொம்யூனிற்றி
மண்டபத்தில் புது வெளிச்சமாக இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப் பட்டது.
    அடக்கமான மண்டபம். மண்டபம் நிறைந்த தமிழ் அன்பர்கள்.குழந்தை
கள் கூட நிறையப் பேர் குதூகலமாகக் கலந்து கொண்டார்கள்.
        மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி தொடங்கப் பட்டது.மெளன அஞ்சலியைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர் பட்டாளத்தால் தமிழ் வாழ்த்து
பாடப்பட்டது.வாழ்த்து வழமையான வாழ்த்தினை விடச் சிறப்பானதாக 
இருந்தது. பாடிய அத்தனைபேருமே இனிமை ததும்பப் பாடி சபையினரை
தம்வசப் படுத்திவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
        வரவேற்புரையினை திரு. ராஜேஸ் அவர்கள் மிகவும்சுருக்கமாகவும் அதேவேளை  அனைவரையும் கவரும் வண்ணம் தனது கம்பீரமான குரலில்
வழங்கி நின்றார்.வரவேற்புரையினைத் தொடர்ந்து தலைமை உரையினை
திரு. ஜெயராமசர்மா அவர்கள் வழங்கினார்.





  "  இலக்கியப் பூக்கள் " என்றால் என்ன ? பூக்களுக்கும் தமிழுக்குமான
தொடர்புகள் எத்தகையன? இந்த நிகழ்ச்சி எந்தவகையில் முக்கியத்துவம்
மிக்கதாக விளங்குகிறது ? என்பதையெல்லாம் சுவைபட எடுத்துக் கூறினார்.
இப்படி ஒரு தரமான நிகழ்ச்சி நிரலினை உருவாக்கிய திரு சந்திரன் அவர்கள்
மிகவும் பாராட்டுக்கு உரியவர் என்று சுட்டிக்காட்டியதோடு அவருடன் பக்க
பலமாக நின்றவர்களையும் வாழ்த்தித் தனது தலைமை உரையினை நிறைவு
செய்தார்.
    இந்த விழாவை "புது வெளிச்சம் " என்று குறிப்பிட்டதற்குக் காரணம்
இதன் நிகழ்ச்சி நிரலேயாகும்.கவிதை கேளுங்கள் இ பட்டிமன்ற வாதப்
பிரதி வாதப் பேச்சு இ சிறுகதையும் நாங்களும் இ பெண்களுக்கு இங்கேயும்
பிரச்சனை இ வெட்டிப்பேச்சு இ இவைகள் யாவும் நிகழ்ச்சிகளே !
    தலைப்புகளைப் பார்த்ததும் எங்களுக்குள்ளேயே ஒருவித ஆவல் எழும்பு
கிறதல்லவா ? இப்படியான தலைப்புகளுடன் வேறு எந்த இலக்கிய நிகழ்ச்சி
களும் நடைபெற்றது குறைவு என்றுதான் எண்ணமுடிகிறது.இது இலக்கிய
நிகழ்ச்சிகளில் " புது வெளிச்சம் " என்றுதானே சொல்லவேண்டும் ! இதனை
வடிவமைத்த திரு. சந்திரனைக் கட்டாயம் வாழ்த்தவேண்டும் ! பாராட்டவும்
வேண்டும் ! அவரின் மனதில் உருவான இந்தப் புது வெளிச்சம்தான் 
" இலக்கியப் பூக்கள் 2016 " என மணம் பரப்பி நின்றது எனலாம்.
      இலக்கிய உலகில் பூத்து மணம்பரப்பிய எழுத்தாளர் அருண்விஜயராணி
அவர்களை நினைவு கூரும் முகமாக திரு சந்திரன் அவர்கள் அவரின் படத்துக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்து அவரைப் பற்றிய நினைவுப்
பேருரையினையும் ஆற்றினார்.அவருடன் தனக்கு இருந்த இலக்கிய உறவு
பற்றியும் இ அவரின் நேர்மைபற்றியும் இ பன்முக ஆற்றல்கள் பற்றியும் இ எடுத்துக்
கூறி அவரின் இழப்பானது ஈடுசெய்ய முடியாததும்  .. ஆகிவிட்டது என மிகவும்
உருக்கமாக எடுத்துச் சொன்னார்.அவரின் பிரிவின் பின்னர் அவரை நினைவு
கூர்ந்ததும் இந்த விழாவின் முக்கிய அம்சம் எனலாம்.


        துடிப்பான மூன்று இளைஞர்கள் வந்தார்கள் ! வெடித்துச் சிதறியது தமிழ்
அவர்களது நாவிலிருந்து.சபையே கலகலத்தது ! கவிதை கேளுங்கள்தான்
தலைப்பு ! கொட்டியது கவிதைமழை ! தட்டினார்கள் சபையோர்கள் தமது
கரத்தை ! நிகழ்ச்சி முடிந்து விட்டதா ? எனும் ஏக்கமே மேலிட இளைஞர்கள்
தமது பணியினை நிறைவு செய்தார்கள் !
      ஆச்சாரியார் சிறி ஆத்மன் இளம் பையன். ஆனால் அவரின் உள் அடக்கமோ மிகவும் பெரியது.நிதானமாக அதேவேளை ஆழ்ந்த கருத்துக்
களையெல்லாம் அனைவருக்கும் என்றும் பயன்படும் விதத்தில் யோகக்
கலை பற்றி எடுத்து விளக்கினார்.இலக்கியப் பூக்கள் நிகழ்ச்சியில்  இது
வித்தியாசமாயும் யாவரையும் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வைப்பதாகவும் 
அமைந்திருந்தது.
    பட்டிமன்றத்தை எப்படிச் செய்தால் அது சுவை பயக்கும் ? என்பதைப்
பலகோணங்களில் இந்த நிகழ்ச்சி காட்டியது. இதில் கலந்து கொண்டவர்களின் அலசல்கள் அனைவரையும் அந்தநிகழ்ச்சியினுள்
உள்ளிளுத்துக் கொண்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த
அளவுக்கு மிகவும் சுவாரிசயமாய் இருந்தது.இதுவும் இலக்கியப் பூக்கள்
நிகழ்ச்சியின் புது நோக்கே எனலாம் !
    இளம் பெண்களும் இகல்விபயிலும் மாணவர்களும் இகலந்து சிறப்பித்த
நிகழ்ச்சியாக சிறுகதையும் நாங்களும் இருந்தது.ஆங்கிலத்தில் கல்வி
பயிலும் மாணவர்கள் தமிழ்ச் சிறுகதை பற்றித் தமது விமர்சனங்களை இங்கு
முன் வைத்தமை சபையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றுதான் எண்ண
வேண்டியிருக்கிறது !அவர்களுடன் இளம் பெண்களையும் இணைத்து அவர்
களின் அழகு தமிழைக் கேட்க வைத்த இந்த நிகழ்ச்சியை அனைவருமே
வெகுவாகப் பாராட்டினார்கள்.



        திருமதி அபிராமி அவர்கள்  ... பெண்களின் பிரச்சனை புலம்பெயர் நாடுகளில் எப்படி என்பது பற்றிய தனது கருத்துக்களை .. பெண்களுக்கு
இங்கேயும் பிரச்சனை என்னும் தலைப்பில் தெரிவித்தார். கம்பீரமான
குரலும் இ காத்திரமான கருத்துக்களும் யாவரையும் விரும்பிக் கேட்கச் 
செய்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
      கீர்தனா இ நிருதன் இ இருவரும் சேர்ந்து வெட்டிப்பேச்சு நிகழ்த்திச் சபையை வயிறு குலுங்கச் செய்துவிட்டார்கள் ! இலக்கியப் பூக்களின்
நிறைவு நிகழ்ச்சியாக இது அமைந்தாலும் நிறைவான நிகழ்ச்சி என்று
யாவருமே பாராட்டினார்கள் !இந்த நிகழ்ச்சி போல் எந்த இலக்கிய
விழாக்களிலும் நடைபெறவில்லை எனப் பலரும் பேசிக்கொண்டார்கள் !
    மாலை மூன்று மணிக்கு ஆரம்பமான இலக்கியப் பூக்கள் 2016 இரவு
எட்டரை மணிக்கு நிறைவு பெற்றது. வந்திருந்த அனைவரும் விழா நிறைவு
வரை இருந்தமை விழாவின் பெரு வெற்றி எனலாம்.பெயருக்கு ஏற்றாற்போல்
ஒவ்வொரு நிகழ்ச்சியும் புத்தம் புது மலராகவே இருந்தது.அந்தப் புது மலர்கள்
அத்தனையும் சேர்ந்து இலக்கியப் பூங்கொத்தாகி யாவருக்கும் இனிய உணர்
வையும் இ மனமகிழ்வையும் இ புத்துணர்வையும் இ ஊட்டியதென்றே சொல்ல
வேண்டும்! இப்படி யெல்லாம் பல புதுமைகளுக்கு வித்திட்ட காரணத்தால்
இந்த நிகழ்ச்சியை " புது வெளிச்சம் " என்று அழைப்பதே மிகப் பொருத்தமாகும் !