கேசி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா -2016 17 01 2015

.
தைப்பொங்கலின் சிறப்புக்களை -- தாயகத்தில் ஒவ்வொரு வீடும் விழாக்கோலம் கொண்டு குதூகலிக்கும் பொங்கலை, எம் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டுவதாய் , விக்டோரியா  வாழ்  தமிழர்கள் எம்மின் ஒன்றுகூடலாய்   அமைகின்ற கேசி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா -2016 வருகின்ற 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.கிழே உள்ள இணைப்பில், மேலதிக விபரங்கள் உள்ளன.

இந்நிகழ்வில் தமிழர் கலாச்சாரப்படி பொங்கல் பொங்கி புத்தாண்டை வரவேற்பதுடன் , பொங்கலைத் தொடர்ந்து பிற்பகல் 4:00 மணி வரைக்கும் திறந்த வெளியரங்க நிகழ்ச்சிகள், வணிக அங்காடிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.

உங்கள் அனைவரையும் குடும்ப சகிதமாய் , எம் தமிழ் கலாச்சார உடைகளை அணிந்து வந்து, இக்கொண்டாட்டத்தில் இணைந்து சிறப்பித்து பொங்கலையும் நிகழ்வுகளையும் கண்டு களித்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்விழா குறித்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களையும் இவ்விழாவில் பங்குபற்ற ஊக்குவிக்குமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.


குறிப்பு:
திறந்த வெளியரங்கத்திலே (Open Stage – Outdoor) உங்கள் பிள்ளைகள் தம் முத்தமிழ் சார் திறமைகளை அரங்கேற்றலாம். ஆர்வம் இருப்பின் , அறியத் தரவும்.

இடம் :  Gaelic Park
               324 Perry Road, Keysborough, Dandenong, Victoria 3173

காலம்  : 17th of Jan, 2016 
                9.00 AM to 4.00 PM

தோழமையுடன் 


சிவசுதன்