ஒரே நாளில் 120 மாணவர்கள் மேடையேறினர், நாடகம் செய்தனர், தம் திறன் காட்டினர்

.
மாணவர்களின்   பல்வேறு  திறன்களையும்  வளர்த்து ஆளுமையுடயோராக   ஆக்கும்   அரங்கியல்  கல்வி


மட்டக்களப்பு கல்வித்திணக்களத்தின் அழகியல் பிரிவு ஒரு பெரும் திட்டமொன்றை   அமுல்படுத்துகிறது.  இதற்குப்பொறுப்பாளராக அழ்கியல் கல்விப்பணிப்பாளர் ஜெயசிறிபவன்  மட்டக்களப்புக் கல்விப்பணிப்பாளர் திரு.பாஸ்கரன் ஆலோசனையுடன் செயற்படுகிறார்.
 நாடகக் கல்வி மூலம் மாணவர்களின் ஆழுமையை வளர்த்தெடுத்தலே இதன் பிரதான நோக்கம் ஆகும்
இப்பயிற்சி நெறியை நடத்தும் பொறுப்பு அனுபவம் மிக்க  பேராசிரியர் மௌனகுருவிடம் கையளிக்கப் பட்டுள்ளது. அவர் தனது மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் துணையுடன்  இதனை நடத்துகிறார்

இப்பயிற்சி நெறிபற்றி பேராசிரியர் மௌன்குருவிடம் நாம் உரையாடிய போது அவர் பின்வருமாறு கூறினார்
.”நாடகக்கல்வியானது1.மனதைஒருநிலைப்படுத்தல்,2.அவதானித்தல்,3.,கற்பனை செய்தல்4.தெளிவாக உச்ச்சரித்தல்,5.ஏற்ற இறக்கங்களோடு பேசல்,6.கம்பீரமாக நிற்றல்7.கம்பீரமாக,நடத்தல்.8.கம்பீரமாக அசைதல்,9.பிரச்ச்சனைகளை தைரியமாக
எதிர்கொள்ளல் 10.சபைப்பயமின்மை 11.சமூகமயமாதல்,12.பிரச்சனைகளை எதிர் கொள்ளல்13.தலை மைதாங்குதல்14.நிர்வகித்தல்15.மற்றவர்களின் நடத்தைகளை அவர்கள் உடல் மொழிமூலம் புரிந்து கொள்லல், 16.மற்றவர்களின் குணாம்சங்களை அவர்கள் பேச்சுகள் மூலம் புரிந்து கொள்ளல், 17.கூட்டாச் செயற்படல், 18மற்றவர்க்கும் இடம் கொடுத்தல்,19.அழ்கியலுணர்வு20.தெரிவு செய்தல்  21.இனம்காணுதல்  22.ஓவியம்,சிற்பம் ,இலக்கியம் ஆகியகலைகளூடனான பரிட்சயம்  23.ஒலி ஒளி பற்றிய ஞானம் 24.நேரம் காலம் தவறாமை25ஒழுங்கு முதலான 40க்கு மேற்பட்ட    திறன்களை  வளர்க்கிறது



இக்கல்வி மூலம் மணவர்களை வெகு இலகுவாக ஆளுமையுள்ள மாணவர்களாக உருவாக்கலாம்அதற்குத் தேவை பொறுமையும்,கடும் உழைப்பும்,சோர்வடையா மனமும் ஆகும்.கல்வித் திணைக்களம் 10 பின் தங்கிய பாடசாலைகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 120 மாணவர்களை என்னிடம் ஒப்படைத்து அவர்களுக்கு 16 நாட்கள் பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டிக்கொண்டது16 நாட்கள் எனின் 16x8= 128 மணித்தியாலங்களாகும்
இதுவரை 11பட்டறைகள் நடந்து விட்டன.பயிற்சிகள் காலை 8.00 தொடக்கம் மாலை 4.00 வரை நடைபெறுகிறது.அவர்களுக்கு காலைச் சிற்றுண்டி,மத்தியானச் சாப்பாடு,பின்னேரம் சிற்றுண்டி என்பன வழங் கப் படுகின்றன இப்பயிற்சிப்பட்டறையை,கல்வி அதிகாரிகள் பலர் வந்து பார்வையிடுகின்றனர்.கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு .நிசாம்,மட்டக்களப்புக் கல்வித்திணைக்களப் பணிப்பாளர் பாஸ்கரன்கல்விப்பணிப்பாளர்களான சுகுமாரன்  ஆகியோரும்,மாத்தளைக் கார்த்திகேசு முதலான நாடகப் பழம் கலைஞர்களும்  பார்வையிட்டுச் சென்றதுடன்மாணவர்களீடம்தமதுதமதுவாழ்த்துக்களையும்,அபிப்பிராயங்களையும்  பகிர்ந்து கொண்டனர்


. நாடகத்தை ஒரு கல்வி நெறியாகக் கொண்டு மாணவர்களின் ஆழுமை விருத்தியை ஏற்படுத்துதலே இப் பயிற்சிப்பட்டறையின் நோக்காகும்
120 மாணவர்களும் தவறாது நூற்றுக்கு நூறு வீதம் மிகுந்த ஆர்வமுடன் பங்களிக்கின்றனர்120 பேரும் பங்கு கொள்ளும் வகையிலும் அவர்கள் திறன்கள் யாவும் வெளிப்படும் வகையிலும் 6 நாடகங்கள் தயாரிப்பதே எமது குறிக்கோளாகும்

இவ்வருடத்துக்கான 11 பட்டறைகளின் இறுதி நாளன்று(21.12.2015)  6 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 120 மாணவர்களும் 6 நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டினர்
பிள்ளைஅழுதகண்ணீர் ( ஜெயசங்கர்)
,புதியதொருவீடு (மஹாகவி)
,இராவணேசன் (மௌனகுரு),
சங்காரம்( மௌனகுரு),
மழை (மௌனகுரு),
அக்கினிக்குஞ்சு(பாரதியார்)

ஆகிய ஆறு நாடகங்களிருந்த பகுதிகளே ஆற்றுகை  செய்யப்பட்டன.இவற்றில் மிகப் பெரும்பாலானவை நாடகம் அரங்கியல் பாடத்திட்டத்தில் உள்ள  நாடகங்களாகும்”.
இவ்வாற்றுகைகளை அரங்க ஆய்வுகூட மாணவர்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்து  நெறியாள்கை செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது..இதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப் பட்டன.
மணவர்களின் ஆற்றுகை பலரையும் கவர்ந்தது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்விப்பணிப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டார்.
ஆற்றுகையைப் பெற்றோர்களும் வந்திருந்து பார்த்து ரசித்தனர்.மாணவர்களுள் பொதிந்து கிடந்த திறமைகள் வெளிப்பட்டன.அதனை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமொன்றை இது அவர்களுக்கு அளித்திருந்தது
இந் நாடகங்கள் அடுத்தவருடம் நடைபெறவுள்ள மீதி 7 பயிற்சிப்பட்டறைகளிலும் மெருகூட்டப்பட்டு மார்ச் மாதம் மாணவ நாடகப் பெருவிழாவாக நடைபெரும் என அறிகிறோம்.
விடுமுறை நாளைப் பிர்யோசனமகக் கழிக்க வழி செய்த கல்வித் திணைக்களம் பாராட்டுக்குரியது.
---0---