உலகச் செய்திகள்

சவுதி ஈரான் இராஜதந்திர உறவு முறிவு

ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையில் வட கொரியா வெற்றி

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் : கண் கலங்கிய ஒபாமா

சட்டம் அனுமதித்தால் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளை சுட்டே கொல்வேன்

சவுதி ஈரான் இராஜதந்திர உறவு முறிவு

04/01/2016 ஷியா இன மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவுகள் மோசமடைந்தன




கடந்த சனிக்கிழமை ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் என்ற ஷியா இனமதகுரு உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறி  அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானுடனான ராஜதந்திர உறவுகள் முறித்துக் கொள்ளப்பட்டதை சவுதியின் வெளியுறவு அமைச்சர் அடேல்-அல்-ஜுபைர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சவுதியிலுள்ள அனைத்து ஈரானிய தூதரக அதிகாரிகள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராஜியத் தலைநகர் தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
நன்றி வீரகேசரி 








ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையில் வட கொரியா வெற்றி


07/01/2016 ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.
இன்று வட கொரியாவின் அணு ஆயுத சோதனைத் தளத்திற்கு அருகில் 5.1 ரிச்டர் அளவு அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பை வட கொரியா அரச தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
குறித்த வெடிகுண்டு ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு என்று வட கொரியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 








அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் : கண் கலங்கிய ஒபாமா

06/01/2016 அமெரிக்காவில் தொடர்ந்து பெருகி வரும் துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று உரையாற்றினார், அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி வன்முறைக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களிடம் ஒபாமா பேசியதாவது:
அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி வன்முறை பெரும் கவலையளிக்கிறது. பெருகி வரும் துப்பாக்கி வன்முறைக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமெரிக்காவில் அடிக்கடி நிகழும் துப்பாக்கி தாக்குதல் சம்பவங்களை தடுப்பதற்காக, பாராளுமன்ற அனுமதியின்றி துப்பாக்கி உரிமத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தால் தவறான நபர்களின் கையில் துப்பாக்கி கிடைப்பதை ஓரளவு தடுக்க முடியும். இதனால் சில உயிர்கள் பலியாவதைத் தடுக்க முடியும்.
அமெரிக்காவில் 3 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பாடசாலை குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது. துப்பாக்கி கலாசாரத்தை குறைக்க அவசரமாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம். 
 இதற்கு மேலும் சாக்கு போக்குகளை சொல்லி சமாளிக்க கூடாது. ஆயுதங்களை தாயாரித்து விற்கும் தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகளை வேண்டுமானால் கைக்குள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்களால் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாது.
இந்த உரையில் பள்ளி குழந்தைகள் பற்றி பேசும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒபாமா கண் கலங்கியமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 









சட்டம் அனுமதித்தால் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளை சுட்டே கொல்வேன்

06/01/2016 இந்­தியச் சட்டம் அனு­ம­தி­ய­ளித்தால் பாலியல் துஷ்­பி­ர­யோக குற்­ற­வா­ளி­களை சம்­பவ இடத்­தி­லேயே சுட்­டுக்­கொல்வேன் என்று டில்லி பொலிஸ் ஆணை­யாளர் பி.எஸ்.பஸ்ஸி தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பெண்கள் பாது­காப்பு குறித்து நாங்கள் எப்­போதும் கவ­லைப்­ப­டு­கிறோம். பாலியல் துஷ்­பி­ர­யோகம் உட்­பட பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோரை, சட்டம் அனு­ம­தித்தால், சம்­பவ இடத்­தி­லேயே துப்­பாக்­கியால் சுடவோ, தூக்­கி­லி­டவோ விரும்­பு­கிறோம். அத்­த­கைய அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்த டில்லி பொலிஸ் தயங்­காது. பெண்கள் தங்­களைத் தாங்­களே தற்­காத்­துக்­கொள்­வது நல்­லது. அதற்­காக நாங்கள் பொறுப்பை தட்­டிக்­க­ழிப்­ப­தாக கரு­தக்­கூ­டாது.
பெண்கள் நல­னுக்­காக முதலைக் கண்ணீர் வடிப்­ப­வர்­களை விட பொலி­ஸா­ரா­கிய நாம் அதி­க­மா­கவே பெண்கள் நல­னுக்­காக நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பொலிஸாரே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்" என்றார்.   நன்றி வீரகேசரி