.
இவ்வாறு வெப்தளங்களில் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் இறுதி வாரிசு லியோனித் குலினோஸ்கி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் , அவர் பேரப்பிள்ளை எனக் கருதக்கூடிய சிறுவனுடனும் செல்ல நாயுடனும் புல்லுத் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதி ரஷ்ய சக்கரவர்த்தியின் பூட்டப்பிள்ளை அவுஸ்திரேலியாவில் மரமொன்றின் கீழ் அநாதையாக மரணம்
முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து
ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியின் போது ரஷ்ய சாம்ராஜ்யத்தை
ஆண்ட ஸார் சக்கரவர்த்தியாகிய 3 ஆம் அலெக்சாண்டர் உயிரிழந்ததுடன்
ஸார் அரச குடும்பத்தினர்
பலர் கொல்லப்பட்டதுடன் உயிர்த் தப்பியவர்கள் இரகசியமாக
ரஷ்ய எல்லையைக் கடந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பியோடியிருந்தனர்.
இவ்வாறு உயிர் தப்பியவர்கள்
பின்னர் பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கு நாடுகளுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறு அண்மைக் காலம் வரை அவுஸ்திரேலியாவில்
ஒரு சாதாரண பாமரனாக வாழ்ந்து வந்த இறுதி ரஷ்ய சக்கரவர்த்தி
3 ஆம் அலெக்சாண்டரின்
பூட்டப் பிள்ளையும் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் இறுதி வாரிசுமான லியோனித் குலினோஸ்கி அவர் வசித்து வந்த பிரதேசத்தில்
மரமொன்றின் கீழ் அண்மையில் உயிரிழந்துள்ளார்.
லியோனித் குலினோஸ்கி
ரஷ்யப் புரட்சியின் போது கொல்லப்பட்ட இறுதி ஸார் சக்கரவர்த்தியாகிய
3 ஆம் அலெக்சாண்டரின்
மகள் ஒல்காவின் மகன் குரியின் மகனாவார். புல்வெளிப் பிரதேசமொன்றில் சிறிய வசிப்பிடத்தில்
வசித்து வந்த இவர் தன் பேரப்பிள்ளையுடனும் நாயுடனும்
சென்று கொண்டிருக்கும் போது மாரடைப்பு
நோயின் திடீர் தாக்கத்தால் மரமொன்றின் கீழ் விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்
பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் ரஷ்ய சாம்ராஜ்யத்தை
முதலாம் உலகப் போர் முடிவுவரை ஆண்ட அலெக்சாண்டர்
அரச பரம்பரையின் இறுதி வாரிசாகக் கருதப்படும்
லியோனித் குலோனோஸ்கி இவ்வாறு அநாதரவாக வாழ்ந்து அநாதை போல் உயிரிழந்ததையிட்டு அவுஸ்திரேலிய ஊடகங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.
லியோனித் குலோனோஸ்கி உயிரிழக்கும்
போது அவருக்கு வயது 72 ஆகும். இவ்வாறு அவுஸ்திரேலியாவில்
வாழ்ந்த லியோனித் ரஷ்ய சக்கரவர்த்தி
மூன்றாம் அலெக்சாண்டரின் பூட்டப் பிள்ளையாக இருந்த போதும், அது பற்றி அதிகம் வெளியுலகத்துக்கு பேசவோ அல்லது ரஷ்ய ஸார் பரம்பரையின்
சார்பில் உரிமை கோரவோ இல்லை.
இதனால் அவரைப் பற்றிய தகவல்கள் வெளியுலகத்துக்கு விபரமாகத் தெரிந்திருக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்த போது அவரைப் பற்றிய உறுதியான தகவல்களை அவுஸ்திரேலிய பொலிஸ் தரப்பினர்
அறிந்திருக்கவில்லை.
அவருடைய உடலை அடையாளம் காட்டவோ பொறுப்பெடுக்கவோ யாரும் இல்லாத காரணத்தால்
பொலிஸார் அவரைப் பற்றிய உறுதியான தகவல்களை விசாரணைகள்
மூலம் அறிந்து வெளியிடும் வரையில் சுமார் இரண்டு மாதங்களாக
லியோனித்தின் உடல் உயிரிழந்த உடல்கள் வைக்கப்படும் அறையிலேயே வைக்கப்பட்டிருந்ததாக
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவுஸ்திரேலிய
பொலிஸ் தரப்பிலிருந்து லியோனிக் யாரென்று உறுதியான தகவல்கள் வெளியிடப்பட்ட
பின்னரே ஊடகங்களிலும் வெப் தளங்களிலும்
அவரைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வெப்தளங்களில் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் இறுதி வாரிசு லியோனித் குலினோஸ்கி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் , அவர் பேரப்பிள்ளை எனக் கருதக்கூடிய சிறுவனுடனும் செல்ல நாயுடனும் புல்லுத் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
மாபெரும் ரஷ்ய சாம்ராஜ்யத்தை ஆண்ட உலகறிந்த மூன்றாம் அலெக்சாண்டர் சக்கரவர்த்தியின்
பூட்டப்பிள்ளை உலகறியாமலே வாழ்ந்து இறுதியில்
புல்லுத் தரையில் ஒரு மரத்தின் கீழ் மாரடைப்பால் அநாதை போல் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
(நன்றி: தினக்குரல்)
No comments:
Post a Comment