நிலவேம்பு – மருத்துவ பயன்கள்

.


நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும்வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால்நீர்க்கோவைமயக்கம் போன்றவை குணமாகும்புத்தி தெளிவு உண்டாகும்;மலமிளக்கும்தாதுக்களைப் பலப்படுத்தும்.
நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்பசி உண்டாக்கும்உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.


நிலவேம்பு மலர்கள்கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.
நிலவேம்பு காய்கள் வெடிக்கும் தன்மையானவை. விதைகள் சிறியவைமஞ்சள் நிறமானவை. நிலவேம்பு பெரியாநங்கைசிறியாநங்கைமிளகாய் நங்கைகுருந்து,கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. அரிதாக சில இடங்களில் பயிர் செய்யப்படுகின்றது.
நிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான தாவரங்களில் நிலவேம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. இந்தத் தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகின்றது.
காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்து 2வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.
நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
கிராம் அளவு நிலவேம்பு இலைத் தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும் அல்லது பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போதுதேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடிசொறிசிரங்கு போன்றவை குணமாகும்.
நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்.
நிலவேம்புச் செடியை வளர்த்தால் அந்த வளர்ப்பிடத்திற்கு பாம்புகள் வருவதில்லை. பாம்புக் கடி விஷத்தை இந்தச் செடி முறிக்கும் என்பது போன்ற நம்பிக்கைகள் கிராம மக்களிடம் பரவலாக காணப்பட்ட போதிலும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது உண்ணமையில்லை என்பது தெரியவந்துள்ளது.
விஷப் பாம்புகளினால் கடி பட்டவர்கள் நிலவேம்புச் செடியை உபயோகித்து குணம் காண முடியாது. இருப்பினும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை இந்த தாவரத்திற்கு உண்டு.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும்,டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நில வேம்பு – சர்க்கரை நோய்க்கு அருமருந்து
Posted on April 4, 2015 by Ramganesh
440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்.
என் தாய்க்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள்லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா. இருக்கிறது. என் அம்மாவிற்க்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.
எங்களது ஒரு குடும்ப நண்பரின் ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை எனது தாயார் தினமும் சாப்பிட்டு வந்தாங்க. என் அம்மாவிற்க்கு மட்டும் அல்லாமல் எனது அத்தைகளும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை.உடல் வலிமைகுடல் பூச்சிகள் அழியடெங்குபன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்புடெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில்அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்புவெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லிகிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும்.15 கிராம்க்கு மேல் போட்டால்ஓவர் டோஸ்அவர்அவர் வயதுஉடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம்குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்துபத்து கிராம் என்பது சிறுவர்பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம்கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டுமூணு நாள் முன்னபின்ன ஆலாம். 

No comments: