உலகச் செய்திகள்


பாப்பரசர் முத்தமிட்டு ஆசீர்வதித்ததையடுத்து மூளைக் கட்டியால் 

ரஷ்ய ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி: இரு நாடுகளிடையே பதற்றம்

ரஷ்ய விமான விபத்து : புலன் விசாரணையில் புதிய தகவல்

பராசூட்டில் இறங்கிய ரஷ்ய விமானிகளை சுட்டு வீழ்த்தும் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி அடித்துக்கொலை

சுவிட்சர்லாந்தில் பர்தா அணிவதற்கு தடை

உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை : விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒலிப்பதிவு வெளியீடு

ரஷ்யாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: ஹெலிகொப்டர் விபத்து : 15 பேர் பலி
பாப்பரசர் முத்தமிட்டு ஆசீர்வதித்ததையடுத்து மூளைக் கட்டியால்


23/11/2015 அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையொன்றுக்கு  ஏற்பட்டிருந்த உயிராபத்தான மூளைக் கட்டி  பாப்பரசர் பிரான்சிஸ்  தலையில்   முத்தமிட்டு ஆசீர்வாதமளித்ததையடுத்து அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த  செப்டெம்பர் மாதம் அமெரிக்க  பிலடெல்பியா பிராந்தியத்துக்கு விஜயம் செய்து ஊர்வலமாக சென்ற போது குறிப்பிட்ட கியன்னா என்ற சிறுமியின் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்திருந்தார்.
இந்நிலையில்  கடந்த ஆகஸ்ட் மாதம் பாப்பரசர் வருவதற்கு முன்பு  மேற்படி குழந்தையின் மூளையை எம்.ஆர்.ஐ.  ஊடுகாட்டும் கருவி பரிசோதனைக்கு உட்படுத்திய போது எடுக்கபட்ட படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த  நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட படங்களில் அந்தக் குழந்தையின் மூளைக் கட்டியின் அளவு கணிசமான அளவில் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அந்தக் குழந்தையின் உடல் நலம் ஆரோக்கிய நிலைக்கு திரும்பியுள்ளதாக அந்தக் குழந்தையின் தாயான கிறிஸ்டன் மஸ்சியன்தோனியோவும் தந்தையான ஜோயும் தெரிவித்தனர்.
பாப்பரசர் தமது குழந்தையின் தலையில் முத்தமிட்டதாலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கியன்னாவுக்கு ஏற்பட்டிருந்த மூளைக் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவது சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

ரஷ்ய ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி: இரு நாடுகளிடையே பதற்றம்


24/11/2015 துருக்கி-சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய நாட்டு இராணுவ போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த சம்பவத்தால் ரஷ்யா-துருக்கி இடையே மோதல் போக்கு உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ எடுத்து ஒளிபரப்பியுள்ளது. 
ரஷ்ய நாட்டு இராணுவத்தின் சுகோய்-24 வகை விமானம் தீப்பிடித்து எரிந்தபடி கீழே விழுவது அந்த காட்சிகளில் உள்ளது. 
துருக்கி வான் எல்லைக்குள் குறித்த விமானம் அத்துமீறி நுழைந்ததாகவும், எனவே துருக்கி இராணுவம், அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 
விமானம் வீழ்த்தப்பட்டபோது, விமானி தப்பிவிட்டதாக  தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ள போதிலும், அதில் இன்னும் உறுதியற்ற நிலை காணப்படுகிறது. 
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் எந்த நாட்டுடையது என்பது முதலில் மர்மமாக இருந்தது. சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாட்டு படைகளும் போர் புரிந்துவருகின்றன. 
எனவே இது எந்த நாட்டு போர்விமானமாக இருக்கலாம் என்ற குழப்பம் நீடித்திருந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அது தங்கள் நாட்டு விமானம் என்று அறிவித்துள்ளது. 
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சு கூறுகையில், "துருக்கி இராணுவத்தால் வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் சுகோய்-24 வகை போர் விமானம். ரஷ்யா அத்துமீறி துருக்கி எல்லைக்குள் நுழையவில்லை. விமானம் சுடப்பட்டபோது, ரஷ்ய விமானம், 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் இருந்த விமானிகள் கீழே குதித்துவிட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை"   நன்றி வீரகேசரி 

ரஷ்ய விமான விபத்து : புலன் விசாரணையில் புதிய தகவல்

25/11/2015  எகிப்­துக்கு மேலாக கடந்த ஒக்­டோபர் மாதம் 31 ஆம் திகதி வெடித்துச் சித­றிய ரஷ்ய ஜெட் விமா­னத்தில் 15 வயது சிறு­மி­யொ­ருவர் அமர்ந்­தி­ருந்த ஆச­னத்தின் கீழ் குண்டு மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­வ­தாக மேற்­படி விமான அனர்த்தம் தொடர்­பான புலன்­வி­சா­ர­ணை­களில் ஈடு­பட்­டுள்ள விசா­ர­ணை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அந்த ஏ321 விமானம் வெடித்துச் சித­றி­யதில் அதில் பய­ணித்த 224 பேரும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
இந்­நி­லையில் அந்த விமான அனர்த்­தத்­துக்கு கார­ண­மான ஒரு கிலோ­கிராம் நிறை­யு­டைய குண்டு மரியா ஐவ்­லெவா என்ற குறிப்­பிட்ட 15 வயதுச் சிறுமி அமர்ந்­தி­ருந்த 31ஏ ஆச­னத்தின் கீழே­யோ அல்­லது அவ­ருக்கு எதிரில் 77 வய­தான நடெ­ஸஹ்டா பஷ­கொவா அமர்ந்­தி­ருந்த 30 ஏ ஆச­னத்தின் கீழே­யோ பொருத்தி வைத்­தி­ருந்து வெடிக்­க­ வைக்­கப்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­வ­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.
அதனால் அந்தக் குண்டு வெடித்ததும் அந்தச் சிறுமியும் வயோதிபருமே உடனடியாக உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.    நன்றி வீரகேசரி 

பராசூட்டில் இறங்கிய ரஷ்ய விமானிகளை சுட்டு வீழ்த்தும் அதிர்ச்சி வீடியோ வெளியீடு25/11/2015 சிரிய எல்­லையில் ரஷ்ய இரா­ணுவ விமா­ன­மொன்றை துருக்­கிய போர் விமா­னங்கள் நேற்று சுட்டு வீழ்த்­தி­யதையடுத்து   ரஷ்ய இரா­ணுவ விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பராசூட் மூலம் தரைக்கு இறங்கி கொண்டிருந்த போது சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
ரஷ்ய இரா­ணுவ விமா­ன விமா­னத்தில் பய­ணித்த இரு விமா­னி­களும் தன்­னி­யக்க முறையில் விமா­னத்­தி­லி­ருந்து வெளித்­தள்­ளப்­பட்­டு பராசூட் மூலம் தரையிறங்கிய போதே இவ்வாறு   சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியை அண்மித்துள்ள சிரியாவில், நான்கு ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா உட்பட பல நாடுகள் ராணுவ உதவி செய்து வருகின்றன. 

இந்நிலையில், சிரியாவின் அண்டை நாடான துருக்கியின் வான்வெளியில் பறந்த ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக, அந் நாட்டு வட்டாரங்கள் கூறியதாவது: எங்கள் நாடான துருக்கியின் வான்வெளிக்குள், ரஷ்யாவின், 'எஸ்யு-26' ரக போர் விமானம் ஊடுருவியது. அதாவது, ஐந்து நிமிடத்தில், 10 முறை ஊடுருவியது. இதுபற்றி பல முறை எச்சரித்தும் பலனில்லை. அதனால், வேறு வழியின்றி, ரஷ்ய போர் விமானத்தை, எங்கள் இராணுவம் சுட்டது. அதிலிருந்த இரு விமானிகளும் பராசூட் மூலம் தப்பினர்; அவர்களில் ஒருவரை, சிரியா கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்துள்ளனர்.
சிரியா ஜனாதிபதி டொயீட் எர்டோரகனிடம், இதுபற்றி தலைமை தளபதி எடுத்துரைத்தார். நடந்த சம்பவம் பற்றி நேட்டோ மற்றும் ஐ.நா., சபை அதிகாரிகளிடமும், பிரதமர் அகமது டவ்டாகலு பேசியுள்ளார். இவ்வாறு துருக்கி ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஷ்யா மறுப்பு: 
இதற்கிடையில், 'ரஷ்ய போர் விமானம் ஒன்று சிரியாவில் விழுந்துள்ளது. துருக்கி பகுதியில் இருந்து சுடப்பட்டதால் தான், விமானம் விழுந்துள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த போது, சிரிய வான்வெளி பகுதியில் தான், ரஷ்ய விமானம் பறந்து கொண்டிருந்தது என்பதை நாங்கள் நிரூபிக்க முடியும். இது சாதாரண விடயமல்ல' என, ரஷ்ய இராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.புடீன் கண்டனம்: 
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீன் கூறியதாவது:
துருக்கியின் இந்த செயல், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 
பயங்கரவாதிகளின் கூட்டாளிகள், எங்கள் முதுகில் குத்தியுள்ளனர். இதை, சாதாரணமாக ஏற்று கொள்ள முடியாது. இது பற்றி, முழுமையாக விசாரணை நடத்துவோம்.
சிரியா வான்வெளி பகுதியில் தான், ரஷ்ய விமானம் பறந்துள்ளது. துருக்கிக்கு ரஷ்ய விமானிகளோ, விமானமோ, எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. துருக்கியிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளி, சிரியா எல்லையில் தான், விமானம் விழுந்துள்ளது.


சிரியாவில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு, துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. அதனால் தான், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள ரஷ்ய விமானத்தை, துருக்கி இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரியவந்து உள்ளது.    நன்றி வீரகேசரி


ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி அடித்துக்கொலை

25/11/2015   ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது.  
ஐ.எஸ்.ஐ.எஸ்.  தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்  விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.  ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.  

உலக நாடுகளின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மிக கொடூரமான தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் போஸ்னிய பெண் சம்ரா கெசினோவிச் (வயது 17)  இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். இவரது தோழி சபினா செலிமோவிச்(15) ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டை விட்டு வெளியேறி சிரியா சென்றனர். 
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து போராடப் போவதாக அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றார்கள். ராக்கா நகரை அடைந்த அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தனர்.
சம்ரா மற்றும் சபினா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இரு ஜோடிகளும் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர். பின்னர் சபினா தனது கணவருடன் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சிரியாவில் இருந்து தப்பியோட சம்ரா முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை பிடித்த தீவிரவாதிகள் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த செய்தி ஆஸ்திரியாவைச் சேர்ந்த பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரியாவில் இருந்து சிரியா சென்ற 2 சிறுமிகளில் ஒருவர் பலியாகிவிட்டதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் வகையில் வெளியான போஸ்டர்களில் சம்ராவும், சபினாவும் கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகளுடன் காணப்பட்டனர். 
இந்நிலையில் தப்பியோட முயற்சித்த சம்ரா கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் சிரியாவில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சபினா தெரிவித்துள்ளார்   நன்றி வீரகேசரிசுவிட்சர்லாந்தில் பர்தா அணிவதற்கு தடை

26/11/2015  தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும்படி பர்தா அல்லது நிகாப் அணிந்து வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த தடையை மீறி பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு 6500 ஸ்ரேலிங் பவுன் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.     நன்றி வீரகேசரிஉக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை : விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒலிப்பதிவு வெளியீடு

26/11/2015  உக்ரைன் வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பறக்க உக்ரைன் தடை விதித்துள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல்கள் இருந்து வருகிறது.
இந் நிலையில் துருக்கி வான் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து தங்கள் வான் பகுதியில் ரஷ்யாவின் பயணிகள் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பறக்க தடை விதிக்கப்படுவதாக உக்ரேன் அறிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் பிரதம் ஆர்செனிக்யாட் சென்யுக், அமைச்சரவை கூட்டத்தில் கூறுகையில், பதற்றத்தை தூண்டுவதற்காக உக்ரைன் வான் பகுதியை ரஷ்யா பயன்படுத்தக் கூடும்.
இது உக்ரைனின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம். பூகோள மற்றும் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ரஷ்ய போர் விமானத்திற்கு விடுக்கபட்ட எச்சரிக்க ஒலிப் பதிவை துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ளது.
ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று முன்தினம் துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. இதன்போது குறித்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.
தங்களது வான் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்த தால்தான் ரஷியாவில் போர் விமானம் சுட்டு வீழ்த் தப்பட்டதாக துருக்கி தெரிவித்தது. எச்சரிக்கை விடுத் தும் அத்துமீறி பறந்த தால் சுடப்பட்டதாக கூறியது.

ரஷிய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது. துருக்கி தங்களை முதுகில் குத்தி விட்டது. என கூறி உள்ளார்
ரஷிய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் 
ரஷிய விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் 10-முறை எச்சரிக்கை விடுத்தோம்... துருக்கியின் எல்லையை தாண்டிய 5 நிமிடங்கள் எச்சரிக்கை நீடித்தது என்று துருக்கி தெரிவித்தது. இந்நிலையில் எச்சரிக்கை விடுத்தோம் என்ற துருக்கியின் கூற்றை, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து உயிர் தப்பிய விமானி மறுத்து உள்ளார்.

இந்த நிலையில்   துருக்கி ராணுவம்  ரஷ்யன் போர்விமானத்திற்கு எச்சரிக்கை விடுத்த ஒலிப் பதிவை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த ஒலிப் பதிவில் ' உங்கள் இலக்கை மாற்றுங்கள்' என கேட்டு கொள்ளபட்டு உள்ளது.  நன்றி வீரகேசரி

ரஷ்யாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: ஹெலிகொப்டர் விபத்து : 15 பேர் பலி

26/11/2015   ரஷ்யாவை சேர்ந்த ஹெலிகொப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகொப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் உள்நாட்டு போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற எம்.ஐ.-8 ஹெலிகொப்டர் மேற்கு சைபீரியாவின் ஐகர்கா நகரம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள். 
10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 2800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர் பறக்கத் தொடங்கிய 15 நிமிடத்திலேயே கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், இதனால் ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது விபத்து நடந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகொப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.   நன்றி வீரகேசரி


No comments: