தரிசனம் 2015 – புதிய நிகழ்வு ஒரு பார்வை

.

“கரம் நீட்டி ஒன்றிணைவோம்”
துர்க்கை அம்மன் கோவில் மண்டபத்தில் தரிசனம் கார்த்திகை மாதம்  21ம் திகதி சனி மாலைப் பொழுதில் திட்டமிட்ட நேரத்துக்கு மங்கள விளக்கேற்றலுடன்  ஆரம்பிக்கப்பட்டது.
இது முற்று முழுதாக மலையக தமிழ் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கும்  பிற்படுத்தப்பட்ட  பாடசாலைகளின்   தரத்தினை உயர்த்துவதற்கும் என ஏற்பாடு செய்யப்பட்ட பல்சுவை கதம்ப நிகழ்வு. தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் ஆஸ்திரேலிய தேசிய கீதம் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கப் பட்ட நிகழ்ச்சியின் முதல் கலைநிகழ்ச்சியாகஇ ஸ்ரீமதி புஷ்பா ரமணாவின் ஜனரஞ்சனி  Music Academy   மாணவர்கள் இனிய கருநாடக இசையை வழங்கினார்கள். சிறார்களால் பாடப்பட்ட கருநாடக இசைப் பாடல்களில்  “ஜனனி ஜனனி” குறிப்பிட்டு சொல்லும் படியாக இருந்தது.
இரண்டாவதாக, ஸ்ரீமதி மிருணாளினி ஜெயமோகனின் அபிநயாலயா School of Dance வழங்கிய பரத நாட்டிய நிகழ்வில், மாணவர்களின் நடனம் கண்ணுக்கும் காதுக்கும் சேர்ந்தே விருந்தளித்தது  என்பதை மறுக்க முடியாது.


மூன்றாவதாக மின்மினி நடனக் குழுவினர் வழங்கிய Bollywood  Dance  அரங்கத்தில் எல்லோரையும் ஆர்ப்பரிக்க வைத்தது, குறிப்பிட்டு கூறினால் “மன்மத ராசா” பாடலுக்கான நடனம் Once more  கேட்கும் அளவுக்கு அசத்திய சிறுவர்கள் நிச்சயமாய் பாராட்டுக்குரியவர்கள்.

இடைவேளைக்கு பின்பாக முதன்மை நிகழ்வாக சக்தி படழடியட ளரிநச ளவயச இல் ஆஸ்திரேலியாவை பிரதிநிதிப்படுத்திய உள்ளூர் கலைஞர்களான  கேஷிகா கோபிராம் சாம்பவி விஷ்ணுகருடன்இ ரசிகர்களை ஆச்சரியப் படுத்தும் வகையில்  மலேசிய பிரதிநிதியாக Shastan Kurup,  அறிமுகமின்றியே மேடையில் கலந்து கொண்டார். மலேசியாவிலிருந்து பல மேடைகள் கண்ட அனுபவத்துடன் Keyboard  player ஜெயகுமாரலிங்கம் ஜெயக்குமார் மற்றும் lead guitar  மகேந்திரன் அவர்களும் இன்னிசை வழங்கி தரிசனம் ஐ சிறப்பித்தனர்.

மிகக் குறைந்தகாலப் பயிற்சியோடு அரங்கேறிய சிட்னி தாளவாத்தியக் கலைஞர்களான சாருராம் பிரணவன், பிரவீனன், மகரிஷி, ப்ரமேஷ், Keyboard யதுஷ்ஷன், புல்லாங்குழல் வெங்கடேஷ் மற்றும் bass guitar  ரமணன் ஆகியோரை பாராட்டலாம். இளம் பாடகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் , பார்வையாளர்கள் யாவரையும் திருப்திப்படுத்தும் விதமாக   இசை விருந்து அளிக்கும் நோக்கத்துடனும், Dr.கௌரிபாலன் , Dr.ராஜயோகன், மற்றும் சித்ரா வெங்கட் ஆகியோர் பழைய பாடல்களை வழங்கினார்கள்.
 நிகழ்சியை தொகுத்து நடாத்தித் தருவதற்காக ரகுராம் நவரத்தினம், மற்றும் தர்ஷினி ஸ்ரீசுபாஸ்சந்திரபோஸ்  இருவரும் மேடையில் வழமைக்கு அதிகமான நேரத்தை தமதாக்கியத்தில் தரிசனம் தாமதமாகவே நடந்து முடிந்தது. இதனை தரிசனம்  ஒருக்கிணைப்பாளர்  சாரதா அமிர்தலிங்கம் அவர்கள் அடுத்தவருட தொடர் நிகழ்வில் நினைவில் கொள்வாராக.


மொத்தத்தில் நிகழ்ச்சியில்  ஆடல் பாடல் நிகழ்வுகள் நன்றாக இருந்தாலும், வந்திருந்தோரின் நேரத்தை நிகழ்ச்சியின் நடுநடுவே களவாடியத்தில் பாடல்கள் மொத்தமும் திட்டமிட்டபடி அரங்கேறவில்லை என்கிற வருத்தம் மீந்தது,  உட்பட ஒரு முத்தாய்ப்புடன் முடியாமல் கலவையாக இருந்தது.
ஒலி,ஒளி  அமைப்பில் எந்தக் குறைவும் இருக்கவில்லை.

சிற்றுண்டி வழமை போலவே சுவையாக இருந்தாலும்  இடைவேளைக்கு முன்பாகவே விற்பனை ஆரம்பித்ததில் நிகழ்ச்சியை இடையூறு செய்யுமாறு அரங்கம் கலகலத்தது. நிகழ்ச்சியின் மறக்க முடியாத சில காட்சிகள் புகைப்படமாக உங்கள் பார்வைக்கு தந்த புகைப்படப்பிடிப்பாளருக்கும் நன்றிகள்.

1 comment:

பராசக்தி said...

அன்புடையீர்,
முதற்கண் கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
தரிசனம் 2015- "கரம் நீட்டி இணைவோம்" நிகழ்வில் சக்தி டிவி ஒளி ஒலி பரப்பிய Global Super Star இல் பங்கு பற்றிய ஆஸ்திரேலிய பாடகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் பாராட்டும் விதமாகவும் நடந்தேறிய விழா.
மேற்காணும் கட்டுரை தரிசனம் 2015 புதிய நிகழ்வின் மீதான எனது சொந்தக் கருத்து, இதன் மேல் ஏதாவது குறை நிறை இருப்பின் தயை கூர்ந்து இங்கே உங்கள் அபிப்பிராயங்கள் தெரிவிக்கலாம்.
நன்றிகள் ; இங்ஙனம் பராசக்தி மணிவண்ணன்