இலங்கைச் செய்திகள்


கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு

"2,218 சிங்களவர்கள் மீள்குடியேற்றம்''

 எயிட்ஸ் நோயால் 357 பேர் மரணம் : யாழில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் : சுகாதார கல்வி பணியகம் அதிர்ச்சி தகவல்

பிள்ளையானின் கைது அரசியல் பழிவாங்கல் : காமினி லொக்குகே

இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் உடன்படிக்கை

பெண்களின் வன்முறைகளுக்கெதிராக கைப்பட்டி போராட்டம்

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 3 மாத விடுமுறை

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா

 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழில் மாணவன் தற்கொலை

இப்போதாவது காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடு : யாழில் ஆர்ப்பாட்டம்





கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு

23/11/2015 கொழும்பின் புற நகர் பகுதியான தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்களின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத் தப்பட்டதாக கூறப்படும் வேனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
காணாமல்போனோர் தொடர்பிலான ஐ.நா.வின் செயற் குழு அண்மையில் திருகோணமலை கடற்படை முகாமிற்கு சென்றிருந்த காலப்பகுதியிலேயே, அந்த முகாமிற் குள் வைத்து குறித்த வேன் அடையாளம் காணப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் உறுதிப்படுத்தின.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் ஆலோசனைக்கு அமைய குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி நிஸாந்த டீ சில்வா தலைமையிலான விசாரணைக் குழுவினரே இந்த வேனை தற்போது கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த வேனானது பல கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், 2010 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் கடற்படையை குறிக்கும் இலக்கத்தகட்டுடன் அது கடற்படையின் தேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வேனை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுக்க சென்றுள்ள போது திருகோணமலை கடற்படை முகாமில் அவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பின்னர் கடற்படை தளபதிக்கு விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விரிவாக விளக்கைய பின்னரேயே அதனை கைப்பற்ற முடிந்துள்ளது.
இந்த நிலையில் 5 மாணவர்கள் உள்ளிட்ட கடத்தல்கள் தொடர்பில் விசாரணை செய்துவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது வரை ஒருவரை மட்டுமே அது தொடர்பில் கைது செய்துள்ளனர்.
முன்னாள் கடற்படை வீரரான சம்பத் முனசிங்க என்பவரையே கடற்படையினர் இந்த கடத்தல்கள் தொடர்பில் பிரதான சந்தேக நபராக கைது செய்துள்ள நிலையில் அவர் தற்போது பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வரை புலனாய்வுப் பிரிவினரால் செய்யப்பட்டுள்ள விசாரணைகளில் இக்கடத்தல் விவகாரம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி எதிர்வரும் வெள்ளியன்று கடற்படையின் 5 முக்கிய புள்ளிகளை விசாரணைக்கு உட்படுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
அத்துடன் இந்த கடத்தலின் பின்னர் கடத்தப்பட்டவர்கள் திருமலை இரகசிய முகாமில் வைக்கப்பட்டமை தொடர்பில் ஆதாரங்கள் உள்ளதால், அப்போது கிழக்கு கடற்படையின் கட்டளை தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பகேவிடமும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
முன்னதாக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தனது பாதுகாப்பு அதிகாரியான லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு (சம்பத் முனசிங்க)எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் கீழ் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹிவளை, பெர்னாண்டோ மாவத்தையில் வைத்து ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்களும், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடத்தப்பட்டு திருமலை இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதரங்கள் அந்த விசாரணைப் பிரிவிடம் உள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள புட்டு பம்பு எனும் ரகசிய தடுப்பு இடத்திலும் திருகோணமலை கடற்படை தளத்தின் கன்சைட் எனும் இரகசிய நிலத்தடி சிறைக் கூடத்திலும் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமைக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு சைத்திய வீதியில் 'புட்டு பம்பு' எனும் பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் 'கன்சைட்' எனும் பெயரிலும் கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளமை தொடர்பில் மன்றுக்கும் புலனாய்வு பிரிவு அறிக்கை சமர்பித்துள்ள நிலையிலேயே தற்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெயரில் இரகசிய தடுப்பு முகாம்களை நடத்திச் சென்றமை தொடர்பில் அப்போதைய திருகோணமலை கடற்படையின் கட்டளை தளபதியும் தற்போதைய கடற்படை தலைமையக விநியோக பிரிவு பணிப்பாளராக கடமையாற்றுபவருமான கொமாண்டர் கஸ்ஸப கோத்தாபய போல் உள்ளிட்ட 22 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்துள்ள நிலையில் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேவுக்கும் அறிக்கை சமர்பித்திருந்தனர்.
இந்த விவகாரங்கள் தொடர்பில் அப்போதைய கடற்படை பேச்சாளருடம் சிறப்பு கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயற்பட்ட கெப்டன் தஸநாயக்க உள்ளிட்ட பலரிடம் ஏற்கனவே விசாரணைகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 




"2,218 சிங்களவர்கள் மீள்குடியேற்றம்''

24/11/2015 சட்­ட­வி­ரோத ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரா­கவே நட­வ­டிக்­கைகள் மேற்­
கொள்­ளப்­ப­டு­கின்­றனவே தவிர சட்டரீதி­யான குடி­யேற்­றங்­க­ளுக்கு எதி­ராக எது­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் தெரிவித்தார்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 719 குடும்­பங்­களைச் சேர்ந்த 2,218 சிங்­கள மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் அறிவித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஐ.தே.கட்­சியின் மாத்­தறை மாவட்ட எம்.பி. புத்­திக பத்­தி­ரன எழுப்­பிய கேள்­விக்கு பதில் அளித்­த­போதே அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தன­து­ பதிலில்;
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் மொத்த சனத்தெகை 5 இலட்­சத்து 82 ஆயிரத்து 323 ஆகும்.
இதில் 3 ஆயி­ரத்து 306 பேர் சிங்­கள மக் கள் ஆவார்கள். இவ் எண்­ணிக்­கையில் 961 குடும்­பங்­களைச் சேர்ந்த 3288 பேர் இடம்­பெ­யர்ந்­துள்ள நிலையில் அவர்­களில் 719 குடும்­பங்­களைச் சேர்ந்த 2218 பேர் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.
இம்­மக்­க­ளுக்கு எந்­த­வி­த­மான பாகு­பாடும் இல்­லாமல் அரச உத­விகள், சேவைகள் வழங்­கப்­ப­டு­கி­றது.
சட்­ட­வி­ரோ­த­மான ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரா­கவே நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. சட்ட ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எவ்­வி­த­மான இடை­யூ­று­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. யுத்­தத்தால் வீடு­களை இழந்­த­வர்­களின் தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன.
ஒவ்­வொரு பிர­தேச செய­லக மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­ல­கத்தில் தக­வல்கள் பேணப்­ப­டு­கி­றது.
சுய­வி­ருப்பின் பேரில் மீள் குடி­யேற வந்த இடம்­பெ­யர்ந்த சிங்­கள குடும்­பங்கள் அவர்­களின் நிரந்­தர இடங்­களில் மீள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளன.
இவர்­க­ளுக்கு எவ்­வி­த­மான பார­பட்­சமும் இன்றி அடிப்­படை வச­திகள் படிப்­ப­டி­யாகச் செய்து கொடுக்­கப்­ப­டு­கின்­றது.
அத்­தோடு காணி ஆணை­யா­ள­ரினால் 15.11.2013 ஆம் திக­தி­யன்று வெளி­யி­டப்­பட்ட பத்­தி­ரிகை விளம்­பரம் வழங்­கப்­பட்­டது.
இடம்­பெ­யர்ந்த மக்­களின் காணிப்­பி­ணக்­கு­களைத் தீர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­துடன் சுய­வி­ருப்பின் பேரில் மீள் குடி­யேற விரும்­புவோர் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றனர்.
இங்கு குடி­யேற்­றப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு அரச கொள்­கைக்கு அமைய மீள் குடி­யேற்றக்கொடுப்பனவு உட்பட இதர வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது என்றார்.

அதேவேளை புத்திக பத்திரண எம்.பி. யின் கோரிக்கைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அங்குள்ள தேரருடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 









எயிட்ஸ் நோயால் 357 பேர் மரணம் : யாழில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் : சுகாதார கல்வி பணியகம் அதிர்ச்சி தகவல்


24/11/2015 தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இதுவரை இலங்கையில் 357 பேர் மரணித்துள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ்நோயினை கட்டுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை எமது நாட்டில் 380367 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

ஊடகவியலாளர்களை தெளிவுப்படுத்துவதன் மூலம் மக்களை தெளிவுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்னும் எங்களுடன், சிகிச்சை உண்டு எனும் தொனிப்பொருளில் தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள சுகாதார கல்வி பணியகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய திட்டதின் பணிப்பாளரும் வைத்தியருமான சிசிர லியனகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
எச்.ஐ.வி என்ற வைரஸானது கண்டுப்பிடிக்கப்பட்டு உலக நாடுகள் இவ்வருட முடிவுடன் முப்பது வருடத்தை கடந்துள்ளது. அந்தவகையில் எச்.ஐ.வி என்ற வைரஸ் ஒரு நபரின் சில செயற்பாடுகளினால் இன்னொரு நபருக்கு பரவும் தன்மை கொண்டமையினால் அது எயிட்ஸ் என்ற ரீதியில் பாலியல் நோயாக கண்டறியப்பட்டதோடு இன்று உலக நாடுகள் அனைத்து குறிப்பிட்ட இந்த பாலியல் நோயினை கட்டுப்படுத்தும் முகமாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.

இவ்வாறான நிலையில் எமது நாட்டில் கடந்த காலங்களில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும் இன்று அந்த தொகையானது அதிகரித்த மட்டத்தை கொண்டுள்ளதாக கடந்தகால அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதுவரை இலங்கையில் தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இலங்கையில் 357 பேர் மரணித்துள்ளதோடு மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ்நோயினை கட்டுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை எமது நாட்டில் 380367 பேர் பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எயிட்ஸ்நோய் தொற்றினால் எமது நாட்டில் வாரத்திற்கு 9 பேர் இனங்காணப்படுகின்றனர். அந்தவகையில் இதுவரை நாடளாவிய ரீதியில் 2241 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுகின்றனர்.
எதிர்வரும் மாதம் முதலாம் திகதி தேசிய எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாம் நாடளாவிய ரீதியில் இது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையினால் தற்போது குறித்த நோய்குறித்து  பரிசோதனைகளை செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்திய பரிசோதனைகள் மூலம் உரிய சிகிச்சைகளை தொடர்ச்சியாக பெற்று வரும் நிலையில் அது ஏனைய நபருக்கு பரவுவதை தடுப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதோடு அவரின் குறித்த செயற்பாடு காரணமாக முழு சமூகமே பாதுகாக்கப்படும். மறுபுரம் அவரும் சாதாரண வாழ்கையினை தொடர்வதற்கான சந்தர்ப்பங்களும்காணப்படுகின்றது. எனவே எயிட்ஸ் நோய்குறித்து அனைவரும் மிகவும் தெளிவுடன் செயற்படுவது அவசியமானது என்றார்.
குறித்த செயல்அமர்வின் போது எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று சதாரணமான மனிதர்கள் போல் தனது வாழ்கை கொண்டு நடத்தும் சிலரின் அனுபவங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடதக்கது.  நன்றி வீரகேசரி 










பிள்ளையானின் கைது அரசியல் பழிவாங்கல் : காமினி லொக்குகே

25/11/2015 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) இரகசியப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமைக்காகவே கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இது அரசியல் பழிவாங்கல் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த அணி உறுப்பினர் காமினி லொக்குகே நேற்று சபைியல் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காமினி லொக்குகே எம்.பி இங்கு மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அவர் அவ்வாறு தகவல் வழங்கியமைக்காகவே தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பிள்ளையான் மாத்திரமல்ல கருணாவும் கூட இவ்வாறு தகவல்களை வழங்கியுள்ளார்.
பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தும் அரசாங்கம் முன்னர் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.
காமினி திசாநாயக்க, லக்ஸ்மன் கதிர்காமர், தியாகராஜா மகேஸ்வரன், லலித் அத்துலத் முதலி, ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, நடராஜா ரவிராஜ் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
மேலும் கருணா, கோபி குறித்து ஆளும் கட்சியினர் பேசுகின்றனர். சுமார் ஒருவருடகாலமாக நீங்கள் ஆட்சியில் உள்ளீர்கள். அப்படியானால் நீங்கள் அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்புகிறேன்.
அத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது நிவாரணங்கள் இல்லாத தோல்வியான திட்டமே என்பதையும் கூறிக் கொள்கின்றேன் என்றார்.    நன்றி வீரகேசரி 








இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் உடன்படிக்கை

25/11/2015 இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் பொருளாதார தொழில்நுட்பம் தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என நேற்று சபையில் தெரிவித்த பொருளாதார மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்து கட்டியெழுப்பவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனை தெரிவித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இந்தியாவுடன் பொருளாதார தொழில்நுட்பம் தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கை ஜனவரியில் கையெழுத்திடப்படும்.
பின்னர் இது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து இலங்கைக்கு சாதகமான விதத்திலான ஏற்பாடுகளை செய்து கொண்டு அடுத்த வருட நடுப்பகுதியில் முழுமையான உடன்படிக்கை கையெழுத்திடப்படும்.
இதேபோன்று சீனாவுடனும் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படும். இவ்வாறான உடன்படிக்கைகள் மூலம் நாட்டை பொருளாதாரத்தில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 
இவையனைத்தும் எமது நாட்டின் நன்மைகளை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்படும்.
அத்தோடு அரசு முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச தனியார் துறையுடன் இணைந்து பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறை நிர்வாகத்தை பலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கடன்களை குறைப்பதற்கான விதத்தில் சிறப்பான பொருளாதாரக் கொள்கைகளை அரசு தயாரித்துள்ளது.
ஊழல் மோசடிகள் வீண் விரயங்களை கைவிட்டு இணக்கப்பாட்டு அரசியலுடன் நாட்டில் ஸ்தீரமான நிலைமை ஏற்படுத்தப்பட்டு நாடு அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
அதற்கான மூலோபாயங்களை நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தில் முன்னெடுத்துள்ளார்.
இன, மத மற்றும் அரசியல் பேதங்களை கைவிட்டு நாட்டின் அபிவிருத்தியை இலக்காக வைத்தே அபிவிருத்திகள் முன்னெடுப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 










பெண்களின் வன்முறைகளுக்கெதிராக கைப்பட்டி போராட்டம்

25/11/2015 பெண்களின் வன்முறைகளுக்கெதிரான கைப்பட்டி போராட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றியமான இணையம் காவ்யா பெண்கள் அமைப்புடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.



மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்காவில் ஆரம்பமான போராட்டம் மட்டக்களப்பின் பல இடங்களிலும் நடைபெற்றன. வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் நிறுத்தப்பட்டு அவர்களது கைகளில் பெண்களின் வன்முறைக்கெதிராக செயற்படுவோம் எனும் வாசகம் அடங்கிய கைப்பட்டி அணிவிக்கப்பட்டது.



பெருமளவிலான தமிழ், முஸ்லிம் பெண்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி வீரகேசரி 








சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 3 மாத விடுமுறை
26/11/2015 கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத்துறை தலைமையகத்தில் பயங்கரவpillaiyan_01ாத தடைச்சட்டத்தின் கீழ், தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபையின் தற்போதைய உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 03 மாத காலம் விடுமுறை வழங்குவதற்கு கிழக்கு மாகாணசபை அனுமதியளித்துள்ளது. இம்மாத அமர்வுக்காக பிரதித்  தவிசாளர்; பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் கிழக்கு மாகாணசபை செவ்வாய்க்கிழமை (24)  கூடியபோது, ஐ.ம.சு.முன்னணி உறுப்பினரான கே.புஸ்பகுமார்; (இனியபாரதி) இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்தார். இந்தப் பிரேரணை  தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) வழிமொழிந்ததுடன், அது மாகாணசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடுப்புக்காவல் விசாரணையிலுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 03 மாதகால விடுமுறை  அளிக்கவும் சபை அனுமதியளித்ததாக கே.புஸ்பகுமார்; (இனியபாரதி) தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்;பாக சிவநேசதுரை சந்திரகாந்தன், கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்  விசாரணைக்காக அழைப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தேனீ 












ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா


26/11/2015   முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்கு மூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.    நன்றி வீரகேசரி 













தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழில் மாணவன் தற்கொலை

26/11/2015 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு  அருகில் மாணவன் ஒருவன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பொலிஸார் குறித்த கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.

சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 நன்றி வீரகேசரி







இப்போதாவது காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடு : யாழில் ஆர்ப்பாட்டம்



28/11/2015 காணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கமே இப்போதாவது வெளியிடு என்ற கருப்பொருளில் கோசங்களும், பதாகைளும் தாங்கியவாறு காணாமல் போனவர்களின் உறவுகளால் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.மத்திய பஸ் நிலையத்தில், சமவுரிமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நல்லாட்சி அரசாங்கம் என மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கமே, எங்களுடைய பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகளை என்ன செய்தார்கள்? என்பதை இப்போதாவது கூறு என கண்ணீர்மல்க கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி


No comments: