.
என்னயிந்த வாழ்க்கையென்று
அலுத்துக்கொள்ளும் நேரங்களில்,
நம்பிக்கைதரும் நிகழ்வுகள்சில
என்கண் முன்பே!
அணைத்தகைக் குழந்தையோடு,
அழுக்கடைந்த உடையோடு,
அடுத்தவீட்டு வாசலில்,
அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி!
வாழ்க்கை வாழ்வதற்கேவென நம்பிக்கை கொடுத்தாள்!
கல்லூரியில் படிக்கும்மகனை,
காலையில் எழுப்பும்போது,
கனமான எதிர்காலம்குறித்து,
கலக்கம் எனக்குள்!
திறந்தபாடப் புத்தகத்தோடு,
தெருவிளக்கின் கீழே,
தேர்விற்காகப் படிக்கும்
திண்ணைவீட்டுப் பையன்!
வாழ்வில் நம்பிக்கை
உணர்த்திக் காண்பித்தான்!
போராட்டமில்லாத களமேது?
போராடாமல் வெற்றியேது?
மாற்றம்பிறந்திடும் உறுதியே
மாய்த்திடவேண்டாம் உயிர்களை!
காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா

No comments:
Post a Comment