.
9 வருடங்களுக்கு முன்னர் என் மகன் அப்போதைய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமைச்
சந்தித்தபோது அதைப் பதிவு செய்தார். நான் அதை மொழிபெயர்த்து அது பிரசுரமானது. இன்று மனித நேயத்தில்
உயர்ந்து நிற்கும் இந்த மாமனிதர் நினைவாக மீண்டும் பதிவிடுகிறேன்.
குரங்குகள்வாங்கும்பென்சன்
முனைவர் எம். சஞ்சயன்
அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக, குடைந்துவைத்ததுபோல
குறைவான வெளிச்சத்தில் இருந்தது. இடுப்பளவு உயரத்தில் இருந்து
சீலிங்வரைக்கும் நீண்ட பிரெஞ்சு யன்னல்கள். பெரும்பாலான
யன்னல்கள் வேலைப்பாடுகள்செய்த வெல்வெட் திரைச்சீலைகளால்
மறைக்கப்பட்டு டில்லியின் சூரியனும், வெக்கையும் உள்ளே வராமல்
தடுத்தன. புறாக்கள் யன்னல் விளிம்புகளில் உட்கார்ந்துசத்தமிட்டன.
அண்மையில் இருந்தமரங்களிலும், கட்டிடங்களிலும் குரங்குகள்
நிறைய சஞ்சரித்தன. இயற்கையான வனப்பிரதேசச் சூழல்யன்னல்
களை அங்காங்கே கறைபடவைத்திருந்தது. எந்த மனிதனுக்கு
இந்தயன்னல்களை கழுவும்பணி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று
நான்யோசித்தேன். அதுவரைஒருபெண்பணியாளரைக்கூட
நான்காணவில்லை.
அந்தஅறையில் எதைஎடுத்தாலும் அதுபிரம்மாண்டமானதாகவே
இருந்தது. பிரம்மாண்டமான சோபாக்கள், தடிப்பானகம்பள
விரிப்புகள், ராட்சத தொங்குவிளக்குகள். அவருடையமெய்க்
காவலர்கள்கூட திடகாத்திரமாகவும், பாரமாகவும் இருந்தார்கள்.
பென்னம்பெரிய கதவுகள் வழியாகவந்து போகும் மிலிட்டரிஉடை
யணிந்த உதவியாளர்கள்கூட கனமான ஆகிருதிகளுடன் காணப்
பட்டார்கள். எல்லாமே பாரியதாக இருந்தது, ஒருமேசையின்
முன்உட்கார்ந்து கம்புயூட்டர் திரையை ம்உற்றுப்பார்த்துக்
கொண்டிருந்த அந்தமனிதரைத் தவிர. அவருடைய சிறியஉடலில்
இருந்து சன்னமாகத்தான் குரல்எழும்பியது. அந்தஅறையின்
பரப்புக்குள் அவர்குரலை கேட்கவேண்டுமென்றால் சுற்றிவர
கடுமையான மௌனம்தேவை. ஆனால் அந்தப்புறாக்கள் அவர்
பேசுவதை மூழ்கடித்தன. எல்எழுத்துப்போல உயர்ந்த மரத்தில்
வடிவமைக்கப்பட்ட அவருடைய தொன்மையான மேசை, ஒரு
தூரத்து மூலையில் தள்ளப்பட்டு, இந்தஆடம்பரங்களுக்கு மன்னிப்பு
கேட்பதுபோல காட்சியளித்தது.
அப்துல் கலாம் ஆட்சிசெலுத்துவது போலவே இல்லை. இந்தப்
பெரியபடாடோபங்களில் அவர் சங்கடப்படுவதுபோலவே தோற்ற
மளித்தார். ஒருகல்விக்கூடத்திலோ, ஒருபல்கலைக்கழகத்திலோ
அவர் இன்னும்கூடுதலான சௌகரியத்துடன் தன்னை
உணர்ந்திருப்பார் என்று எனக்குப் பட்டது. என்னையும் ஒருமாணவர்
போலவே அவர் வரவேற்றார்.
நான் பிபிசிகுழுவுடன் கடந்த ஒருமாதகாலமாகவிவரணப்
படம் ஒன்று எடுப்பதற்காக இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம்
அலைந்திருந்தேன். உலக அழகி ஐஸ்வர்யராயின்பேட்டி அடுத்த
நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்ததால் மூன்றுமாதம் முன்பாகவே
ஒழுங்கு செய்திருந்த ஜனாதிபதியின் பேட்டியிலும் கடைசி நிமிடங்
களில் சிறுமாறுதல் செய்யவேண்டிநேர்ந்தது. ஒருநாட்டின்
ஜனாதிபதியிலும் பார்க்க ஒருநடிகை பிஸியாக இருந்ததைகண்டு
பிபிசி டீம் அதிசயித்தது. நாளையபேட்டியே கடைசி. அத்துடன்
வந்தகாரியம் முடிந்துநான் மறுபடியும் வாஷிங்டனுக்குப் பயணமாகி
விடுவேன்.
பிபிசி குழுவில் நாங்கள் எட்டுப்பேர் இருந்தோம். எல்லாமே
வெள்ளைக்கார முகங்கள், என்னுடையதை தவிர்த்து. பலபாதுகாப்பு
அரண்களை தாண்டி, பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்துவிட்ட
எங்களை ஒருவரவேற்பு அறையில் உட்காரவைத்திருந்தார்கள்.
அதுவே ஒருஜனாதிபதிக்கு தகுதியான கம்பீரத்தோடு இருந்தது.
எங்கள் குழுவின் தலைவர் விவரணப்படக்கலையில் புகழ்
பெற்ற பட்டிஸ்மித் என்பவர். ஜனாதிபதியைப்பார்க்க உள்ளே
போகவேண்டிய நேரம்வந்ததும் இரண்டு பாதுகாவலர்களும்,
ஓர்உயர்அதிகாரியும் எங்களை அழைத்துச்சென்றார்கள். நான்
மட்டுமே ஜனாதிபதியிடம் கைகுலுக்கினேன். மற்றவர்கள் காமிராவுக்கு
பின்னே நின்றுகொண்டார்கள். எங்களை அழைத்துவந்த அதிகாரியின்
முகத்தில் ஆச்சரியத்திலும் பார்க்க ஏமாற்றமேமிஞ்சியிருந்தது.
பாதுகாவலர் படக்கென்று திரும்பி தன்நேரம்வீணாகிவிட்டது
என்பதை அப்பட்டமாகக்காட்டியபடி மறைந்துபோனார்.
ஜனாதிபதிஎன்னை சஞ்சயன் என்றுஉரிமையுடன் அழைத்தார்;
நான்பதிலுக்கு ‘மிஸ்டர்பிரெசிடென்ட்’ என்றேன். எங்கள்
சம்பாசணை தொழில்நுட்பம், இந்தியாவின்எதிர்காலம், சாதாரண
மக்களின் அன்றாட சந்தோசம் இவற்றையெல்லாம் தொட்டது.
இந்தியாவின் ஏவுகணைத்திட்டத்தின் சிருட்டிகர்த்தாவானஒரு
ஜனாதிபதியின் சிந்தனைகள் கவித்துவமாகவேஇருந்தது என்னை
வியப்பிலாழ்த்தியது. ‘இங்கேபாருங்கள்சஞ்சயன், நான்நூறு
கோடி மக்களைச் சிரிக்கவைக்கவிரும்புகிறேன். உங்களுக்குப்புரிகிறதா?
நூறுகோடிமக்கள்சிரிக்கவேண்டும். இதுமுடியும்.’ அவர்அதை
சொன்னவிதம்அறிவைமீறியஒருதேவவாக்குபோலஎன்காதுகளில்
விழுந்தது. என்தலைஎன்னையறிமால்அசைந்தது. அவர்தன்
கனவை சொல்ல ஆரம்பத்தார். இந்தியாவைத் தொடுக்கவேண்டும்.
முக்கோணவடிவமான இந்தியாவை குறுக்கறுத்துஆயிரம் புதுச்
சாலைகள் ஓடவேண்டும்; இணையம்மூலமும், சாட்டிலைட்மூலமும்
இந்தியாமுழுவதையும்இணைக்கவேண்டும். ஒவ்வொருநூறு
கிராமத்துக்கும் ஓர்இணையசேர்வர். அதிலிருந்துஒவ்வொரு
கிராமத்துக்கும் மின்னஞ்சல், இணையதளவசதிகள். ஒருபுதிய
EDUSATஎன்றசெயற்கை கோளை விண்வெளியில் நிறுவுவதற்கான
ரொக்கட்ஒன்றுவிரைவிலேயே ஏவப்படும். உலகத்திலேயே கல்விக்காக
முற்றிலும்அர்ப்பணிக்கப்பட்டஒருசாட்டிலைட் இதுவாகவே
இருக்கும். இதிலிருந்து லட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களுக்கு
கல்வி அறிவுப்போதனைகள் ஒலிபரப்பாகும். போக்குவரத்துநெருக்கடி
களில்அடிக்கடிமாட்டிவிழித்துக்கொண்டு இந்தியாவின் புதிய
நெடுஞ்சாலை திட்டங்களை நாங்கள் ஏற்கனவே பார்த்திருந்தோம்.
அப்துல் கலாம்'ignited minds' என்றார். இளம் மனங்களில்ஒருதீ
பற்றவேண்டும். வெளியேவரத்துடிக்கும் இந்தியஇளைஞர்களின்
உச்சமான திறமைகளை விடுவிக்கவேண்டும். இந்தஅரியமனிதர்
சந்தேகமில்லாமல் தன்பரிவான உள்ளத்தில் கனவுகள்காணும்
ஒருநம்பிக்கைக்காரர்.
தேநீரும் பிஸ்கட்டும் பரிமாறினார்கள். தேநீரைசிறியபீங்கான்
கிண்ணங்களில் பருகியபடி ஜனாதிபதி தன்மாளிகையைப்பற்றி
சொன்னார். ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் காலத்து கட்டிடக்கலைஞர்
களால் நிர்மாணிக்கப்பட்டஅந்தமாளிகையின்முதல்வைஸ்ரோய்
ஏர்வின்; கடைசிவைஸ்ரோய்மவுண்பேட்டன். என்றென்றைக்கும்
அடக்கியாளலாம் என்றஎண்ணத்தில் பிரிட்டிஷார்எழுப்பிய
மாளிகையில் அவர்கள்17 வருடங்கள் மட்டுமேஆட்சிசெலுத்தினர்.
ஜனாதிபதிபேசிக்கொண்டிருந்தபோதுஎனக்குஇன்னொன்று
புலப்பட்டது. இந்தகண்ணைப்பறிக்கும் சோடனைகளும், அலங்கார
தூண்களும், மாளிகையும் அப்துல்கலாமின் மாபெரும்கனவுகளை
தாங்குவதற்குபோதாத ஒருசிறுகுடிசையாகவே எனக்குஅப்போது
தோன்றியது.
நான் விடைபெறுமுன்கேட்டேன். ‘மிகுந்தஅழகுணர்வோடு
பராமரிக்கப்படும் உங்கள்தோட்டத்துக்குபோவீர்களா? குரங்குகள்
தொல்லைப்படுத்துவதில்லையா?’
‘ஓ, குரங்குகள், அவைபெரிதாக என்னைதொந்திரவு செய்வ
தில்லை.’ இப்படிச்சொல்லியவாறேதன்மேசையில்பதித்தசிவப்பு
பொத்தானை ஜனாதிபதிஅழுத்தினார். அந்தப்பொத்தானை
அவருடையமேசையில்ஒருவித ஒளிவுமறைவுமின்றி ஒட்டி
வைத்திருந்தார்கள். அதிலேஇருந்து தாறுமாறாக சென்றவயர்கள்
மேசையின் ஓரத்தில் ஸ்டேப்பிள் செய்யப்பட்டிருந்தன. ஒருவிண்வெளி
விஞ்ஞானியும், மாபெரும்நாட்டின் ஜனாதிபதியுமானஅவருடைய
மேசையிலே ஓடும் வயர்களை மறைத்துவைப்பதுஅவ்வளவு
கடினமானகாரியமா என்றுஎன்னை யோசிக்கவைத்தது.
‘இந்தக்குரங்குகள் எங்களைத் தொந்திரவுசெய்யாமல்பார்த்துக்
கொள்ள சிலஉபாயங்கள் உண்டு’ என்றார். அப்பொழுதுஜனாதிபதி
எழுதியஇரண்டு புத்தகங்களைஅவருடைய உதவியாளர்கொண்டு
வந்துகொடுத்தார். ஆங்கிலப் புத்தகத்தில்கையொப்பமிட்டுஎன்னிடம்
தந்தார். மற்றது தமிழ்புத்தகம். அதில் தமிழில்கையெழுத்து
வைத்துஇதைஎழுத்தாளரானஉங்கள் அப்பாவிடம்கொடுங்கள்
என்றார்.
நான்விட்டஇடத்தைப்பிடித்துக்கொண்டுஎன்ன உபாயங்கள்
என்றேன்.
‘காவல்கார குரங்குகள். எங்களுக்கு ஓயாது தொல்லைதரும்
சிறியகுரங்குகளுக்கு பெயர்லங்கர். பெரியகுரங்குகளின் பெயர்
மக்காக்கி. பயிற்சி கொடுத்த மக்காக்கி குரங்குகளை சங்கிலியில்
கட்டிகாவல்காரர்கள் சுற்றிலும்உலாத்துவார்கள். இவற்றைக்
கண்டதும் சிறியகுரங்குகள் ஓடிவிடும், கிட்டவராது.’ என்முகத்தில்
தோன்றியஆச்சரியத்தைஎன்னால்மறைக்கமுடியவில்லை. ‘நாங்கள்
தோட்டத்துக்குபோகலாமா?’ என்றார்.
‘காவல்காக்கும் பெரியகுரங்குகளுக்கு சம்பளம்உண்டா?’
என்றேன், பாதிநகையுடன்.
‘நிச்சயமாக. ராஷ்டிரபதிபவன் ஊழியர்களின் பட்டியலில்
அவற்றின் பெயர்களும்உண்டே.’ உலகத்தின்ஆகப்பெரியசனநாயகத்
தின் அதிபதிஎன்னுடைய முழங்கையை பிடித்துதன் அற்புதமான
தோட்டத்திற்கு அழைத்துசென்றார். கருணையேஉருவானஅந்த
நல்லமனிதருக்கு என்னுடைய மனக்கிலேசம் எப்படியோ தெரிந்து
விட்டது. ‘அவை ஓய்வுபெற்ற பிறகு அவைக்கு பென்சனும் இருக்கிறது’
என்றார்.
நன்றி http://amuttu.net/
No comments:
Post a Comment