ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 2 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

தமிழகத்திலே பரதக்கலைக்கு பெரு விருட்சம்போல் விளங்கிவர் பத்மஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்கள்.
ஆடற்கலையில் சிறந்து விளங்கிய நர்த்தகிகளான கமலா லக்ஷ்மணன் வைஜெந்திமாலா மாலி பத்மா சுப்பிரமணியம் சித்திரா விஸ்வேஸ்வரன் போன்றோரை உருவாக்கியவர் ஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்களே. சென்னையில் அவர் வீட்டிலேயே தங்கி பரதத்தைக் கற்றுக்கொண்டேன். எனது குரு நாதருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய ராஷ்ட்டிரபதியால் வழங்கப்பட்ட பொழுது ராஸ்ட்ரபதி பவனில் நடந்தகலை நிகழ்ச்சியில் பரதம் ஆடுவதற்கு எனது குரு நாதர் என்னையே தெரிவு செய்திருந்தார். எனது குருவிற்கு எனது ஆற்றல்மேல் இருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது.
அதை அடுத்து 1967 Febuary 17 இல் எனது பரத நாட்டியம் பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக்கல்லூரி கட்டிட நிதி திரட்டுவதற்காக நடைபெற்றது. பத்மஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்கள் சென்னையில் இருந்து வருகை தந்து நடாத்தி வைத்தார். அவரது நட்டுவாங்கத்துடன் கச்சேரி சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்ச்சியின் பின் பிரமாதமான விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன சிந்தாமணி வார இதழ் 24 02 67 இல் “யோகாவின் விமர்சனம்
கார்த்திகாவின் நாகநிருத்தியத்தில் பிரதிபலித்த ருத்ரபாவமும் சர்ப்பமாக தன் உடலை வளைத்து நளினமாக ஆடியது மனதைவிட்டு அகலாது. கிறஸ்ண ஜயர் கூறியது போன்றே வழுவூராரின் பாணியில் சிலையை வெல்லும் நடன நிலைகளும் சிறப்புப் பயிற்சி மூலமே பெறப்படும்  அங்கக் குழைவும்




துவட்சியும் அக்குழைவாலும் துவட்சியாலும் பெறப்படும் எழிலும் நேர்த்தியும் பரதமுனி கூறும் 108 கரணங்களும் ஒழுங்கே இடம்பெறும் அந்த அழகை அன்று கார்த்திகாவின் ஆடலில் கண்டோம். மொத்தத்தில் ஈழத்திலும் ஒரு கமலா லக்ஷ்மணன் உருவாகி விட்டார் என்ற திருப்தியோடு அன்று ரசிகர் சென்றனர் என்று கூறினால் மிகையாகாது.


Times 20.03.1969 A review = Never a dull moment. S.J


Karthiga’s performance from the invited Alarippu. There is a spectaculorness and robustness about the presentation that makes it unlike the kalakshetra style.
The Jathiswaran was particularly full of a rich variety of adavas and in the sabdum, padams and varnam which followed there were a range of unfamiliar poses of the body.

It was an extremely long and strenuous recital and we could not see all of it unfortunately but when we left Karthiga was dancing with a strength and vigour that shows no signs of flagging. The total effect was certainly spectacular and there was never a dull moment for the audience.


இத்தகைய விமர்சனங்களை நான் பெற்று ஆடியபோது மேடையின் பின் நின்று நடனநிகழ்ச்சி சிறப்புற நடைபெற உழைத்தவர்கள் என் நண்பர்களான  சிவத்தம்பி இவரே ஒவ்வொரு நடன உருப்படிக்கான வர்ணனைகளை எழுதி மேடையின் புறத்தில் நின்று ஒலிபெருக்கியில் கூறியவர். நூடக தயாரிப்பாளரான நா.சுந்தரலிங்கம் ஒளி அமைப்புக்கு பொறுப்பாக இருந்தார். கவிஞர் முருகையன் நிகழ்ச்சி மடலில் பிரசுரிக்க ஒரு கவிதையை எழுதித் தந்தார். அக்கவிதையின் சாராம்சமே நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை உணர்த்துவதபக அமைந்திருந்தது..
ஜமின் தாரின் மாளிகையில்
ததுனி அறைக்குள்
தம்மளவில் தலையாட்டித்
தாளம்போட
அமைவதுதான் பரதம்
என்ற நிலைமை மாறி
ஆண்டுகள் பல ஆயிற்று
ஆனால் ஒன்று
நவ வாழ்வில் ஊன்றி நிற்கும்
உணர்வினொடும்
நம்முடைய பரதக் கலை
உறவு கொண்டால்
சுவையான பல புதிய
படைப்புத் தோன்றும்
சொக்கி நிப்பார் எல்லோரும்
அதுவம் தேவை

எமக்கு எது தேவை என்பதை கவிஞர் முருகையன் எழுதிவிட்டார். பொறுப்பு எனது. அதையே எனது நாட்டிய நாடகங்களாகத் தயாரித்தேன்.
நவ வாழ்வில் ஊன்றிநிற்கும்
உணர்வினொடும்
நம்முடைய பரதக் கலை
உறவு கொண்டால்
சுவையான பல புதிய
படைப்புத் தோன்றும் என்றார் கவிஞர்
நான் படைத்தேன்
சொக்கி நின்றார் பலர்.
ஆக்கக் கலைஞராக அதைச் செய்யும் தகமை பெறுவதற்கு நான் சென்ற பாதை முக்கியமானது. என்னை உருவாக்கிய ஆசான் சுற்றியுள்ள நண்பர்கள் நான் மேற்கொண்ட ஆய்வுகள் கற்நுத் தேர்ந்தவை என பலவுண்டு.
1864இல்
எனது கணவர் சில நண்பர்களுடன் இணைந்து அறிவொளி என்ற விஞ்ஞான சஞ்சிகையை நடாத்திய காலம் அது. எமது வீடு அறிவொளி காரியாலயமாகவே இயங்கியது. அறிவொளி மாணவர்க்கான விஞ்ஞானக் கட்டுரைகளுடன் மக்களை விஞ்ஞான ரீதியில் அறிவார்ந்த வகையில் சிந்திக்கத் தூண்டும் சஞ்சிகை. இதை நண்பர்கள் இணைந்து லாப நோக்கு இன்றி நடாத்தினர். இந்தப் பின்னணியில் எமது வீடு நோக்கி வருபவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக இருந்த சிவத்தம்பி னுச கைலாசபதி னுச இந்திரபாலா எழுத்தாளர்களான இழங்கீரன் நீர்வை பொன்னையன் செ கணேசலிங்கன் . நீர்வை பொன்னையனின் மகள்களான அனுராதாவும் அருணாவும் செ கணேசலிங்கனின் மகளான குந்தவையும் பிற்காலத்தில் என்னிடம் நடனம் கற்றனர். மேலும் கவிஞர் முருகையன் அவர் தம்பி சிவானந்தன் இருவரும் ஒரு கவிஞரே. நாடக தாயாரிப்பாளரான. நூ சுந்தரலிங்கம் என மேலே குறிப்பிட்ட பலரும் நாடக கலைஞர்களே . இவர்கள் என்னிடம் எதிர்பார்த்தவை பல. அதேசமயம் நம்மில் ஒருவர் பரதத்தை முறையாகக் கற்று தேர்ந்தவர் இவரை எமது நாடகங்கட்கு எவ்வாறு பயன்படுத்தலாம் போன்ற சிந்தனைகள் இத்தகைய ஒரு சூழலில் பாதிப்புடனேயே எனது வாழ்வு நகர்ந்தது.

தொடரும்

No comments: