.
அமரர் ராஜஸ்ரீகாந்தன் ஞாபகார்த்தமாக அட்சரம் நடத்திய குறுந்திரைப்பட போட்டியை முன் வைத்து…..
1 தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, சினிமாக் கலை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத நிலையில், உலக மொழிகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் விரிவாகச் செல்வது என்றால், நமது சகோதர மொழியான சிங்கள மொழிச் சூழலில், சிணிமாக் கலை புரிந்துக் கொள்ளப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுக்கு, தமிழகச் சூழலில் சினிமா புரிந்துக் கொள்ளப்;படாமல் அதுவொரு வணிகத் துறையாக வளர்த்தெ டுக்கப் படுகிறது. இப்படிச் சொல்வது தமிழகச் சூழலில் மாற்றுச் சினிமா அல்லது மீடில் சினிமா முயற்சிகள் நடைபெறவில்லை என்ற அர்த்தமாகாது. அங்கும் அத்தகைய முயற்சிகளில் ஒரு சிலர் ஈடுபட்டாலும், அவர்கள் வெற்றி அடையவில்லை என்றே சொல்லப்பட்டது. இங்கு வெற்றி என்பது வணிக ரீதியான வெற்றியே மனங்கொள்ளப்படுகிறது. அத்தகைய முயற்சிகளில் சில நல்ல சினிமா வெளிப்பாடுகளாக இருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது. மாற்று வழியாகத் தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்பட முயற்சிகள் பரவலாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன.
அவற்றில் முழுநீள தமிழ்த் திரைப்படத்துறை வளர்ச்சி அடையாத நமது நாட்டிலும் தமிழ் பேசும்; இளைஞர்களாலும், புலம்பெயர்ந்த ஈழத்தவர்களாலும்; மேற்கொள்ளப்படும் குறுந்திரைப் பட முயற்சிகளும் அடங்கும். இவ்வாறாக தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்பட முயற்சிகள் பெருகுவதற்கு பல காரணங்கள் உண்டு, அதிக அளவான இளைஞர்கள் திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டமை, அதன் காரணமாக தமிழகம் மற்றும் ஈழத்துச் சூழலில் திரைப்படப் பயிற்சி கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள்; தோற்றம் பெற்றமை, தயாரிப்புச் செலவுக் குறைவாக இருந்தமை, தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாய்ப்பு வசதிகள் அதிகரித்தமை என்பதாக காரணங்களாகச் சொல்லாம். அத்தோடு தமிழக தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் ஒளிப்பரப்பும் இயக்குனர்களை உருவாக்கும் நிகழ்ச்சிகளில்; குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட நாளைய இயக்குனர் எனும் நிகழ்ச்சியில் பல குறுந்திரைப்படங்களைத் தொடர்ந்துப் பார்க்கக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நோக்கமாக இருப்பது நாளைய தமிழக வணிக சினிமா இயக்குனர்களை உருவாகுவதாகவே இருக்கிறது தவிர, நல்ல தரமான இயக்குனர்களை முன்னிலைப்படுத்துவதாக இல்லை என்பது தெரிகிறது. அந்த நிகழ்ச்சியில் தரமான
குறுந்திரைப்படங்களை வழங்குபவர்ளைத்; தேர்ந்தெடுக்காமல் விடுவதில் அந்த நோக்கம் வெளிப்படுகிறது. ஆனால் ஈழத்தில் அத்தகைய நிகழ்ச்சிகள் இல்லாவிடினும் சுயத்தேடலில் பல குறுந்திரைப்ட ஆர்வலர்கள் நல்ல குறுந்திரைப்ட படைப்பாளிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 2 குறுந்திரைப்படம் என்பது ஒரு சிறுகதை அல்லது ஹைக்கூ தரும் அனுபவத்தை பெற்று தரும் தன்மை கொண்டது. அதனால்தான் என்னவோ தமிழ்ச் சூழலில குறுந்திரைப்பட முயற்சிகள் அதனை நன்கு உள்வாங்கிக் கொண்டவர்களின் வழியாக தமிழில் சிறந்த சிறுகதைகள் சிறந்த குறுந்திரைப்படங்களாக நமக்கு கிடைத்து இருக்கிறன.. உதாரணமாக பாலு மகேந்திராவின் கதை நேரம் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடரில் நமக்கு காணக் கிடைத்த குறுந்திரைபப்டங்களைச் சொல்லாம். குறுந்திரைப்படத்திற்கான முதல் நிபந்தனை குறைந்த அளவான காலநீட்சியாகும். குறுகிய நேர கால எல்லைக்குள் எடுத்துக் கொண்ட விடயத்தை தாக்கமான முறையில் முன் வைப்பதே ஒரு குறுந்திரைப்படத்தின்; வெற்றியாகும்; ஒரு கவிதையில் ஏதேனும் ஒரு சொல்லை நீங்கி விட்டால் அக்கவிதை மரணித்து விடும் என நவீன கவிதையைப் பற்றி பேச வருபவர்கள் சொல்வது உண்டு. அதாவது தேவையற்ற ஒரு சொல்லேனும் ஒரு கவிதையில் இருக்கக் கூடாது என்பதுதான் அதன் அர்த்தம். அது போல் ஒரு குறுந்திரைப்படத்தில் தேவையற்ற ஒரு காட்சியேனும் இடம் பெறலாகாது. யதார்த்தமும், அந்த யதார்த்தத்தில் புதைந்துக் கிடக்கும் அபத்தத்தையோ, முரணையோ, உணர்ச்சியினையோ முகத்தில் அறைவது போல், மனதில் அழுத்தமாக இறங்குவது போல் குறுந்திரைப்படம் அமைதல் வேண்டும். அந்தவகையில் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் அமரர் ராஜஸ்ரீகாந்தன் அவர்களின் ஞாபகார்த்தமாக அட்சரம் அமைப்பு நடந்திய குறுந்திரைப்படப் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பெரும் தொகையான குறுந்திரைப்படங்கள் பார்க்கக் கிடைத்தது. அப்படங்களைப் பார்த்தப் பொழுது ஈழத்தில் குறுந்திரைப்படத் துறையில் ஆர்வமிக்க இளைஞர்கள பெரும் தொகையினர் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அத்தோடு இப்போட்டி மூலம் குறுந்திரைப்படக் கலையைச் சரியாக புரிந்துக் கொண்டவர்களின் பல படைப்புக்களை ஒரே சேரப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போட்டியின் பொழுது எழு படங்கள் வெவ்;வேறு துறைக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டன. அந்தவகையில் சிறந்த குறுந்திரைப்படத்திற்கான முதலாவது விருதைப் பெற்றுக் கொண்ட விமல்ராஜின் இயக்கத்தில் உருவான வெள்ளம் சிறந்த குறுந்திரைப்படமாக அமைந்ததோடு, நம் நாட்டிலும், அதிலும்; ஈழத்துத் தமிழ்ச் சூழலில் சிறந்த ஒளிப்பதியாளர்களும்; இருக்கிறார்கள் என்பதை நமக்கு எடுத்துக் காட்டியது.
அடுத்து இரண்டாவது சிறந்த குறுந்திரைப்பட விருதினைப் பெற்றுக் கொண்ட சாஜித் அஹமட்டின் இயக்கித்தில் உருவான கடிநகர் ஒரு தத்;துவ விசாரத்தை மிக எளிமையான முறையிலான காட்சிப்படுத்தலின் மூலம் ஆர்ப்பட்டமின்றி வெளிப்படுத்தி இருக்கிறது. அத்தோடு இப்படம் முழுதும் பயன்படுத்தி இருக்கும் செம்மை நிறம் மூலம்; கிராமத்தின் மண்வாசைனயின் சித்திரிப்பதாக இருக்கிறது. மூன்றாவது சிறந்த குறுந்திரைப்படமாக தெரிவுச் செய்யப்பட்ட மதிசுதாவின் இயக்கத்தில் உருவான தொடரி ஒரு குறுந்திரைப்பட தரவேண்டிய அனுபவத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்கிறது. சமீப காலமாக மதிசுதாவின் குறுந்திரைப்பட முயற்சிகள் கவனத்திற்குரியவையாக அமைவதை காணக் கூடியதாக இருக்கிறது. தொடரி எனும் இக்குறுந்திரைப்படத்தின் காட்சி அமைப்பை பொறுத்தவரை, பேச எடுத்துக் கொண்ட விடயத்திற்கு தேவையானவற்றை மட்டுமே காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவுக்காக கையடக்க தொலைபேசி கேமராவைப் பயன்படுத்தி இருப்பது பரிசோதனை முயற்சி என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக கையடக்க தொலைபேசி கேமராவை பயன்படுத்தும் முறைமை குறுந்திரைப்பட முயற்சிகளில்; பரவலாகிக் கொண்டிருப்பது குறிப்பிடதக்கது. சிறந்த இசைக்கான விருதினைப் பெற்ற ஏன் இந்த இடைவெளி குறுந்திரைப்படத்தில் இசை பேச எடுத்துக் கொண்ட விடயத்துடன் இயைந்து செல்வது சிறப்பாக இருக்கிறது. சிறந்த குழந்தை நட்சத்திற்கானப் பரிசைப் பெற்ற தேவதை குறுந்திரைப்படம் மூலம் நம் நாட்டிலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்பது எடுத்துச் சொல்லியது. அத்துடன் வெள்ளம், கடிநகர், ஏன் இந்த இடைவெளி போன்ற குறுந்;திரைப்படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் கூட அக்கூற்றை மேலும் வலுப்படுத்துகிறார்கள். ஈழத்தில் நடிப்புத்துறையைப் பொறுத்தவரை தொலைக்காட்சி நாடகங்கள், மேடை நாடகங்கள் போன்றவற்றில் நடித்த நடிகர்களிடம் கடந்த காலம் வரை தமிழக வணிக சினிமா நடிகர்களின் தாக்கமே விரவிக் கிடந்தது.. ஆனால் சமீப கால ஈழத்து நாடகங்கள் மற்றும் குறுந்திரைப்பட முயற்சிகளில் சம்மதப்படும் நடிகர்களிடம் மிகவும் தனித்துவமான நடிப்பு வெளிப்பட்டு வருவதை காணக் கூடிதாக இருக்கிறது. அந்த வகையில் மேற்படி போட்டியில் சிறந்த நடிப்புக்கான விருதினைப் பெற்றுக் கொண்ட போலி திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்த மதிசுதாவின் நடிப்பு யதார்த்தமாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது. மதிசுதாவை சிறந்த ஒரு குறும்பட இயக்குனராக மடடு;மே அறிந்து வைத்திருந்த என்னைப் போன்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட என்பது போலி எனும் இக்குறுந்திரைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்தோடு போலி குறுந்திரைப்படத்தின் காட்சிப்படுத்தலில் யதார்த்தம் சிறப்பான முறையில் வெளிப்பட்டுள்ளதை கவனிக்கக் கூடியதாக இருந்தது. மொத்தத்தில் அகரம் நடத்திய குறுந்திரைப்பட போட்டிக்கு வந்த படங்களை ஒரு சேரப் பார்க்கக் கிடைத்தப் பொழுது, ஈழத்து திரைப்படத் துறையானது (அது குறுந்திரைப்படமாக இருப்பினுப் கூட); முற்றும் முழுதுமாக தென்னிந்திய வணிக சினிமாவின் தாக்கத்திருந்து விடுபட்டு விட்டது(குறிப்பாக நடிப்பு, ஒளிப்பதிவு) என்பது தெரிந்துக் கொள்ள முடிந்ததோடு, நம் மத்தியிpலும் சிறந்த இயக்குனர்கள், ஒளிப்திவாளர்கள். நடிகர்கள், குழந்;தை நட்சத்திரங்கள் இருக்கிறர்கள் என்பதை அறிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. மேலும் ஈழத்து தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படக் கலை புரிந்துக் கொள்ளப்பட்டு வளர்ச்சி அடையத் தொடங்கி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. எதிர்காலத்திலும் இத்தகைய போட்டிகள் மற்றும் குறுந்திரைப்பட செயற்பாட்டாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு தலைநகரை மையமாகத்; தமிழ்ச் சூழலில் உருவான குறுந்திரைப்படத்திற்கான குறுந்திரைப்படவிழாகள் நடத்தப்பட வேண்டும், அத்தோடு நடைபெறும் சர்வதேச குறுந்திரைப்பட விழாகளில் ஈழத்து தமிழ்ச் சூழலில் உருவாக்கப்படும் குறுந்திரைப்படங்களை திரையிட வேண்டும். அந்தவகையில் இப்போட்டியில் விருதுகள் பெற்ற குறுந்திரைப்படங்களை தமிழத்து பார்வையாளர்களுக்கு திரையிட விழாவிற்கு சிறப்பு அதிதிகளாக கலந்துக் கொண்ட தமிழ ஒவியர் மருது அவர்களும்; கவிதா பாரதி அவர்களும் தம்முடன் எடுத்து சென்றுள்ளார்கள் என்பதை அறிகிறோம். அவ்வாறு தமிழகத்தில் அக்குறுந்திரைப்படங்கள்; காட்சிப்படுத்தப்படும் பொழுது, ஈழத்து தமிழ்ச் சூழலில்; குறுந்திரைப்படத்துறைச் சிறப்பாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை பரவலாக அறியக் கூடிதாக இருக்கும்.
மேமன்கவி
nantri http://varmah.blogspot.com.au/

No comments:
Post a Comment