உலகச் செய்திகள்


சிரி­யாவில் படை­யினர் வான் தாக்­குதல் 12 சிறு­வர்கள் உட்­பட 34 பேர் உயி­ரி­ழப்பு

சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்

யேமனில் வான் தாக்­குதல், மோதல்கள் 24 மணி நேரத்தில் 40 பேர் உயி­ரி­ழப்பு

அமெரிக்காவில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் சுட்டுக்கொலை

ஈராக்கில் மனை­விக்கு துரோகம் செய்த கண­வ­னுக்கு தலையை நசுக்கி மர­ண­தண்­டனை நிறை­வேற்றம்





சிரி­யாவில் படை­யினர் வான் தாக்­குதல் 12 சிறு­வர்கள் உட்­பட 34 பேர் உயி­ரி­ழப்பு

24/08/2015 சிரிய டமஸ்கஸ் நக­ருக்கு வெளி­யி­லுள்ள கிளர்ச்­சி­யா­ளர்கள் பலம்­பெற்று விளங்கும் தளங்கள் மீது அர­சாங்கப் படை­யினர் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 12 சிறு­வர்கள், 8 பெண்கள் உட்­பட குறைந்­தது 34 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தது.
அந்­நாட்டின் தலை­ந­க­ருக்கு வட கிழக்­கே­யுள்ள டோமா பிராந்­தி­யத்தில் சிரிய ஜனா­தி­பதி பஷார் அல்–அஸாத்­தின் படை­யினர் பீப்பா குண்­டு­களை வீசி சனிக்­கி­ழமை தாக்­குதல் நடத்­தி­ய­தி­லேயே இந்த உயி­ரி­ழப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன.
மேற்­படி தாக்­கு­தலில் இடிந்து விழுந்த கட்­டட இடி­பா­டு­களின் கீழ் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணி தொடர்ந்து வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
இந்தத் தாக்­கு­தலில் சில குடும்­பங்கள் குடும்ப உறுப்­பி­னர்கள் அனை­வ­ரை­யுமே இழந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் மேற்­படி தாக்­கு­தலில் இடிந்து விழுந்த கட்­ட­ட­மொன்றின் இடி­பா­டு­களின் கீழ் சிக்­கிய நிலையில் உயி­ருடன் மீட்­கப்­பட்ட குழந்­தை­யொன்று தொடர்­பான புகைப்­ப­டங்கள் சர்­வ­தேச ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.

ஆனால் அந்தக் குழந்தை, அதற்கு ஏற்­பட்­டி­ருந்த கடும் காயங்கள் கார­ண­மாக பின்­னர்­ உ­யி­ரி­ழந்­துள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­விக்­கி­றது.
அதே­ச­மயம் டோமா பிராந்­தி­யத்தின் ஒரு பகு­தி­யா­க­வுள்ள கிழக்குக் கோதா பிர­தே­சத்தை இலக்­கு­வைத்து ஞாயிற்­றுக்­கி­ழமை குறைந்­தது 11 வான் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­தாக அந்த நிலையம் கூறு­கி­றது.

கிழக்கு கோதா பிராந்­தி­யத்தில் அர­சாங்கப் படை­யி­ன­ருக்கும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மி­டையே மோதல்கள் இடம்­பெ­று­வது வழ­மை­யா­க­வுள்­ளது.கடந்த 16 ஆம் திகதி டோமா பிராந்­தி­யத்தில் சிரிய அர­சாங்கப் படை­யினர் நடத்­திய வான் தாக்­கு­தல்­களில் 117 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.சிரியாவில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை 240,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்க ளில் அநேகர் பொதுமக்களாவர்.  நன்றி வீரகேசரி 








சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்

25/08/2015 மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் நஷீட்­டிற்கு விதிக்­கப்­பட்ட 13 வருட சிறைத்­தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­ட­தற்கு ஒரு மாதத்­திற்குப் பின்னர் அவர் சிறை திரும்­பி­யுள்­ள­தாக அவ­ரது கட்சி திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது.
மாலை­தீவின் தலை­ந­க­ரி­லுள்ள வீட்­டி­லி­ருந்து நஷீட் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு மாபுஷி தீவி­லுள்ள பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்ட சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட வேளை பொலிஸார் மற்றும் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அவ­ரது மாலை­தீவு ஜன­நா­யகக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கு­மி­டையே மோதல் இடம்­பெற்­றுள்­ளது.

தண்­டனை மாற்­றப்­பட்­டி­ருந்த நிலையில் நஷீட் சிறைச்­சா­லைக்கு திரும்­பவும் அனுப்பி வைக்­கப்­பட்­டமை அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயல் என அந்தக் கட்சி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.
2012ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் நஷீட் ஆட்சி கவிழ்க்­கப்­பட்ட போது ஊழல் குற்­றச்­சாட்டின் கீழ் அவர் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார்.
மாலை­தீவின் ஜன­நா­யக முறையில் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது தலை­வ­ரான நஷீட்­டிற்கு கடந்த மார்ச் மாதம் கடு­மை­யான தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான சட்­டங்­களின் கீழ் 13 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.
இந்­நி­லையில் கடந்த ஜூலை 19 ஆம் திகதி அவ­ரது தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­டது.
ஜனா­தி­பதி அப்­துல்லா யமீனின் ஆட்சியானது நஷீட்டை மௌனமாக்கும் முகமாகவே அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.   நன்றி வீரகேசரி




யேமனில் வான் தாக்­குதல், மோதல்கள் 24 மணி நேரத்தில் 40 பேர் உயி­ரி­ழப்பு
26/08/2015 யேமனின் மத்­திய மாகா­ண­மான பெய்­டாவில் சவூதி அரே­பியா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­யினர் நடத்­திய வான் தாக்­கு­தல்கள் மற்றும் மோதல்­களில் 24 மணி நேர காலத்தில் குறைந்தது 40 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு இரா­ணுவ வட்­டா­ரங்கள் செவ்வாய்க்­கி­ழமை தெரி­வித்­தன.

அர­சாங்க ஆத­ரவுப் படை­யி­ன ரால் அண்­மையில் மீளக் கைப்­பற்­றப்­பட்ட முகேரிஸ் நகரில் இந்த வான் தாக்­கு­தல்­களும் மோதல்­களும் இடம்­பெற்­றுள்­ளன.இந்தத் தாக்­கு­தலில் குறைந்­தது 19 கிளர்ச்­சி­யா­ளர்­களும் 15 அர­சாங்க ஆத­ரவுப் படை­யி­னரும் 6 பொது­மக்­களும் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்­நி­லையில் சவூதி தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­யினர் பெய்டா பிராந்­தியம் மீது தொடர்ந்து தாக்­கு­தல்­களை நடத்தி வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
அதி­க­ளவு மர­ணங்கள் டெலுக்ஸ் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.மேற்­படி தாக்­கு­தல்கள் மற்றும் மோதல்­களில் பலி­யா­ன­வர்­களில் உள்ளூர் கிளர்ச்சிப் படைத் தலைவர் ஒரு­வரும் உள்­ள­டங்­கு­கிறார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை சவூதி தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடுகளின் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 65 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் பலர் பொதுமக்களாவர்.   நன்றி வீரகேசரி






அமெரிக்காவில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் சுட்டுக்கொலை

27/08/2015 அமெ­ரிக்­காவின் வேர்ஜினியா மாகாணத்தில் டபிள்யூ.டி.பி.ஜே.7. தொலைக்­காட்­சியைச் சேர்ந்த செய்­தி­யாளர் இருவர் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அலிசன் பார்க்கர் என்ற (24 வயது) செய்­தி­யா­ளரும் அவ­ரு­டைய ஒளிப்­ப­தி­வாளர் ஆடம் வார்ட் என்­ப­வரும் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக குறித்த தொலைக்­காட்சி நிறு­வனம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

நேரடி ஒளி­ப­ரப்பு நிகழ்ச்­சியில், திடீ­ரென துப்­பாக்கி சுடும் சத்தம் கேட்­டது. இதை­ய­டுத்து அந்தச் செய்­தி­யா­ளரும் அவ­ருக்குப் பேட்டி கொடுத்­துக்­கொண்­டி­ருந்­த­வரும் ஓடினர்.
இது குறித்து காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கி­றது. இது தொடர்­பாக சந்­தே­கிக்­கப்­படும் நபர் தேடப்­பட்டு வரு­கிறார்.

குறித்த சம்­ப­வத்தில் பேட்டி கொடுத்துக் கொண்­டி­ருந்­தவர் உயி­ரா­பத்து இன்றி தப்பி விட்­ட­தாக அந்த தொலைக்­காட்சி நிலையம் தெரி­வித்­துள்­ளது.
நேற்று காலை நடந்த இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்பவம் என்ன கார­ணத்­திற்­காக நடை­பெற்­றது என்­பது தொடர்பில் தெரி­ய­வில்லை என தொலைக்காட்சி நிலையத்தின் பொது
முகாமையாளர் ஜெப்ரி மார்க்ஸ் தெரிவித் துள்ளார்.  நன்றி வீரகேசரி








ஈராக்கில் மனை­விக்கு துரோகம் செய்த கண­வ­னுக்கு தலையை நசுக்கி மர­ண­தண்­டனை நிறை­வேற்றம்

27/08/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தனது மனை­விக்கு துரோகம் செய்து பிறி­தொரு பெண்­ணுடன் இர­க­சிய காதல் தொடர்பை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் தம்மால் பிடிக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

மேற்­படி தீவி­ர­வா­தி­களால் தன்­னி­ன­சேர்­க்­கையில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் 30 பேருக்கும் அதி­க­மா­னோ­ருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை தெரி­வித்­துள்ள நிலை­யி­லேயே இந்தப் புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
ஈராக்­கிய நினெவெஹ் பிராந்­தி­யத்­தி­லேயே இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள பிராந்­தி­யங்­களில் தன்­னி­ன­சேர்க்­கை­யா­ளர்கள், பால்­மாற்ற சிகிச்சை செய்­து­கொண்­ட­வர்கள் மற்றும் காத­லர்கள் ஆகியோர் நடத்­தப்­படும் விதம் குறித்து ஐக்­கிய நாடுகள் சபையில் நடத்­தப்­பட்ட முத­லா­வது கூட்­ டத்தின் போதே அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு தீவி­ர­வா­தி­க ளால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வது அதி­க­ரித்­துள்­ளமை குறித்து விப­ரிக்­கப்­பட்­டது.
இது தொடர்பில் சர்­வ­தேச தன்­னி­ன­சேர்க்­கை­யா­ளர்கள் தொடர்­பான மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் நிறை­வேற்று பணிப்­பாளர் ஜெஸிக்கா ஸ்ரேர்ன் கூறு­கையில், சிரியா மற்றும் ஈராக்கில் தீவி­ர­வா­தி­க ளால் தன்னினசேர்க்கையாளர்களுக்கு கற்களால் எறிந்தும் துப்பாக்கியால் சுட்டும் தலையைத் துண் டித்தும் உயரமான கட்டடங்களிலிருந்து தள்ளியும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறி னார்.   நன்றி வீரகேசரி













No comments: