மறக்க முடியவில்லை...காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா

.



மாமரத்தில் ஊஞ்சலாடியதையும் 
மருதாணி பூசி மகிழ்ந்ததையும் 
மயிலறகுகள் சேகரித்ததையும் 
மடியில் தலை வைத்துறங்கியதையும் 

மறக்க முடியவில்லை தோழி!

கூட்டாஞ்சோறு ஆக்கியதையும் 
கும்மியடித்துக் களித்ததையும் 
கொலு பார்த்து மகிழ்ந்ததையும் 
குயில்பாட்டுக் கேட்டதையும் 

மறக்க முடியவில்லை தோழி!

வெண்ணைதிருடித் தின்றதையும் 
அன்னையிடம் அடி வாங்கியதையும் 
திண்ணைக்கதைப் பேசியதையும் 
வண்ண மலர்கள் சூடியதையும்...

எவ்வாறு நான் மறப்பேன் தோழி?

மீண்டுமொருமுறை பிறக்க வேண்டும் 
வேண்டும்படியெல்லாம் வாழ வேண்டும் 
கண்டவர் கண்பட்டுப் போனாலும் 
நீண்டு நிலைத்திருக்கும் அன்பே..
நம் நட்பு மட்டும்!



மறக்க முடியாத நினைவுகளுடன்...
காரைக்குடி பாத்திமா ஹமீத்  
ஷார்ஜா

No comments: