இலங்கைச் செய்திகள்


தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்

உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்

அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய நிஷா இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு

வித்தியா கொலை வழக்கு : டீ.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவு
த.தே. கூட்டமைப்பு - அமெரிக்க உதவிச் செயலாளர் சந்திப்பு


 ஓமந்தையில் சோதனைச்சாவடி நடவடிக்கைகள் இடை நிறுத்தம்



தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்


24/08/2015 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில், கதிர்காமதம்பி துரைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.



இருவரின் பெயர்கள் இன்று தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்ற தமிழ் அரசுக் கட்சி,
யாழ்ப்பாணத்தில் 5 ஆசனங்களையும், வன்னியில் 4 ஆசனங்களையும் மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும் அம்பாறை மற்றும் திருகோணமலையில் தலா 1 ஆசனத்தையும் பெற்று இருந்தது.

14 ஆசனங்களை தன் வசப்படுத்திய தமிழ் அரசுக் கட்சிக்கு மேலதிகமாக 2 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றுள்ளது. நன்றி வீரகேசரி 



உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்
25/08/2015 பாடசாலைக்கு சென்ற எனது சகோதரன் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு பலஇடங்களிலும் தேடினோம் . இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம் என கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ந.சிவலிங்கம் தமது சகோதரர் தொடர்பான விடயத்தினை கண்ணீர்மல்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தார்.
களு­வாஞ்­சி­குடி மற்றும் வெல்­லாவெளியில் இடம்பெற்ற காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 255 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டன. இதன் போது  பதியப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்கண்ட சாட்சியம் முன்வைக்கப்பட்டது.

குறித்த சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
'நடராஜா செந்தூரன் (19) எனது இளைய சகோதரர் பாடசாலைக்கு செல்லும் போது 2000.11.19 ஆம் திகதியன்று காணமால் போயிருந்தார். 
அருகில் உள்ள கறுவாக்கேணி வித்தியாலயத்திலே கல்வி பயின்று வந்தார். காலை 8 மணிக்கு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு கவலையுற்று பல இடங்களிலும் தேடினோம் பலன் கிடைக்கவில்லை. 
இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம்.
எனது சகோதரனின் சடலத்தினை ஏறாவூர் வைத்தியசாலையில் இருந்தே பெற்றுக் கொண்டோம். இது வரைக்கும் எனது சகோதரன் யாரால் கொல்லப்பட்டார் என அறியமுடியவில்லை. 
அக்காலப்பகுதியில் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்களும் இருந்தன. இதேபோன்று எனது மற்றைய சகோதரர் ந.பரமேஸ்வரன் (29) 2005 காலப்பகுதியில் காணமல் போயிருந்தார். 
மாவடிவேம்பு வந்தாறுமூலைக்கு மேசன் தொழிலுக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரையும் யார் கொலை செய்திருப்பார்கள் என்று அறியமுடியாமல் போய்விட்டது. 
இதேபோன்று எனது மூத்த சகோதரர் ந.விணாயகமூர்த்தி (31) 1985 இல் காணாமல் போனார். கும்புறுமூலை பகுதிக்கு வழக்கம் போல் மீன்வியாபார நடவடிக்கைக்காக சென்ற வேளை காணாமால் போயிருந்தார்.
இவரை அக்காலப் பகுதியில் அங்கிருந்த இராணுவத்தினரே பிடித்து சென்றார்கள் என அப்பகுதி பொது மக்கள் சிலர் தெரிவித்தனர்.  
இது மட்டுமல்லாமல் 1989 ஆம் ஆண்டு எனக்கு 18 வயது இருக்கும் போது இரவு நேரத்தில் வீடு வந்த சிலர் வளவின் கதவினை உடைத்து அம்மாவை அழைத்து தலையில் வெடி வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். 
நானும் எனது சகோதரங்களும் அம்மா இல்லாமல் மிக துன்பப்பட்டு வாழ்ந்தோம். இவ்வாறன நிலையிலேயே எனது சகோதரர் 3 பேர்களையும் எனது சகோதரியின் கணவரையும் இழந்துள்ளோம்." என கவலையுடன் தெரிவித்தார்.  
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 1081 முறைப்பாடுகளில் ஆணைக்குழு சாட்சி விசாரணைகளை மேற்கொணடு வருகிறது.
களு­வாஞ்­சி­க்குடி மற்றும் வெல்­லாவெளியில் இடம்பெற்ற காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 255 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாகவும் இன்று வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்­குழு தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 



அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய நிஷா இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
26/08/2015 இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ள தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரி க்­காவின் பிரதி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இலங்­கையின் பல்­வேறு தரப்­புக்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்றார்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட தென்­னி­லங்கை தரப்­புக்­களை நேற்று சந்­தி­த்து பேச்­சு­வார்த்தை நடத்­திய நிஷா தேஷாய் பிஷ்வால் இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­ களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள் ளார்.

நேற்று அதி­காலை இலங்கை வந்­த­டைந்த நிஷா தேஷாய் பிஷ்வால் முதல் சந்­திப்­பாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவுடன் பேச்சு நடத்­தினார்.
வெளி­வி­வ­கார அமைச்சில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­ப­க் ஷவும் கலந்­து­கொண்டார்.
இதன்­போது புதிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மற்றும் அமெ­ரிக்­கா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உறவு குறித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது.
குறிப்­பாக இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் போர்க் குற்றம் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை தொடர்­பா­கவும் இந்த சந்­திப்­பின்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ரணை அறிக்கை சில தினங்­களில் ஜனா­தி­ப­திக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அந்த விடயம் தொடர்­பா­கவும் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை குறித்தும் அர­சாங்க பிர­தி­நி­தி­களும் அமெ­ரிக்க பிரதி இரா­ஜாங்க செய­லரும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.
இதே­வேளை, நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் பிரதி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேஷாய் பிஷ் வால் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.
இதன்­போது இரு­த­ரப்பு உறவை பலப்­ப­டுத்­து­வது குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ளது. நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்தல் குறித்தும் இந்த சந்­திப்­பின்­போது பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டு ள்­ளது.
இது இவ்­வாறு இருக்க, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் நிஷா பிஷ்­வா­லுக்கும் இடை­யி­லான சந்­திப்பு இன்று காலை கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது.
இதன்­போதும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணையின் அறி க்கை குறித்தும் அர­சியல் தீர்வு செயற்­பாடு தொடர்­பா­கவும் பேசப்­படும் என எதிர்­பார் க்­கப்­ப­டு­கின்­றது.
யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு இதன்­போது அமெ­ரிக்க பிரதி இரா­ஜாங்க செய­லா­ள­ருக்கு தெளி­வு­ப­டுத்­தப்­படும் என் றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இலங்­கையில் எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்தல் நடந்து முடி­வ­டைந்­துள்ள நிலையில் முத­லா­வது வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­யாக தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இல ங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேர ணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடு கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப் பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 





வித்தியா கொலை வழக்கு : டீ.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவு
27/08/2015 பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினதும் டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
குறித்த கொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி







த.தே. கூட்டமைப்பு - அமெரிக்க உதவிச் செயலாளர் சந்திப்பு

26/08/2015 தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது,  தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் கடந்த தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொழும்பில் இன்று சுமார் ஒன்றறை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கை குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   நன்றி வீரகேசரி







ஓமந்தையில் சோதனைச்சாவடி நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

30/08/2015 வடக்­கையும் தெற்­கையும் இணைக்கும் ஏ–9 வீதிச்­சோ­தனை நட­வ­டிக்­கைகள் முழு­மை­யாக நீக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணு­வத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.
1997ஆம் ஆண்டு முதல் செயற்­பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவ­டியின் நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­பட்டு வாக­னங்கள் பிர­தான வீதி வழி­யாக நேர­டி­யாக செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.
கடந்த காலத்தில் ஓமந்­தையில் பிர­தான வீதி ஊடான பாதை மறிக்­கப்­பட்டு, வாக­னங்கள் பதிவு செய்­யப்­பட்ட பின்னர், மாற்று வழி­யூ­டாக இது­வரை பய­ணிக்க அனு­மதி வழங்­கப்­பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி

No comments: