தமிழ் சினிமா வாலு






சிம்பு ரசிகர்களுக்கு எப்படியோ 3 வருட தவம் கலைந்து விட்டது. போடா போடி படத்திற்கு பிறகு வெறும் கெஸ்ட் ரோலில் மட்டும் பார்த்து வந்த சிம்புவை முழுப்படத்தில் பார்க்க ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருந்தனர்.
விஸ்வரூபம், தலைவா படங்கள் பல பிரச்சனைகளை கடந்து வெளிவந்தது. இந்த படங்களை விட வாலு என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே பெட்டிக்குள் தூங்கியது. சரி அதெல்லாம் இருக்கட்டும் படம் தான் வந்து விட்டதே. கதையை பார்ப்போம்
கதைக்களம்
தமிழ் சினிமாவின் 80 வருட பாரம்பரியம் கெடாதபடி ஹீரோ இந்த படத்திலும் வேலைக்கு போகாமல் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். அப்பா பேச்சை கேட்பது கிடையாது, ஆனால், அப்பா மகன் மீது பாசத்தை அள்ளி தெளிக்கிறார்.(டி.ஆர் சாரை பார்த்தது போலவே இருக்கும்).
அம்மா பேச்சை கேட்பது இல்லை, தங்கச்சியை சண்டைக்கு இழுப்பது என சிம்பு மிடில் கிளாஸ் பையனாக வலம் வர, வழக்கம் போல் ஹன்சிகாவை பார்த்து முதல் பார்வையில் காதல் தொற்றிக்கொள்ள, விரட்டி விரட்டி காதலிக்கிறார்.
பின் ஒரு கட்டத்தில் ஹன்சிகாவிற்கு சூழ்நிலைக்காரணமாக கட்டப்பஞ்சாயத்து செய்யும் அவருடைய தாய் மாமாவுடன் திருமணம் நிச்சியக்கப்பட்டது சிம்புவிற்கு தெரிய வர, எப்படி இதையும் மீறி ஹன்சிகாவை சிம்பு கரம் பிடித்தார் என்பதை கலகலப்பாக கூறியிருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர்.
படத்தை பற்றிய அலசல்
சிம்பு எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் அதே எனர்ஜி. அவர் வரும் ஓவ்வொரு காட்சிகளிலும் விசில் பறக்கிறது. அதிலும் லவ் பெயிலியர் கிங் என்பதால் சிம்பு பேசும் பல வசனங்கள் இன்றைய இளைஞர்களின் தேசிய கீதம் தான்.
சந்தானம் தான் படத்தின் அடுத்த ஹீரோ என்று சொல்லலாம், அவர் வாய் திறந்தாலே மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிம்புவிற்கு ஏற்ற பக்கா ஜோடி சந்தானம். சந்தானத்திற்கு துணையாக VTV கணேஷ் கரகர குரலால் கலக்கியுள்ளார்.
அவரே அப்படி இருக்கும் போது ரியல் லைப் ஜோடியாக இருந்த ஹன்சிகா சொல்லவா வேண்டும்? செம்ம கெமிஸ்ட்ரி சார். இதையெல்லாம் விட ஆச்சரியம் இசை தமன்? இதுவரை தமன் இசையமைத்த படங்களிலேயே இது தான் பெஸ்ட்.
க்ளாப்ஸ்
படத்தின் வசனம், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் தமன். இத்தனை வருடம் கழித்து வந்தாலும் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தும் காட்சிகள்.
பல்ப்ஸ்
கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி எதற்கு என்று இயக்குனருக்கே தெரியவில்லை போல, படத்தில் வில்லன் என்று ஒருத்தன் இருக்கனும் என்பதற்காக ஒருவரை வைத்துள்ளார்கள் போல.
மொத்தத்தில் ரசிகர்கள் மனதின் ஈர்ப்பு தெரிந்தவர் இந்த ஷார்ப்பு....
ரேட்டிங்- 2.75/5

நன்றி cineulagam




No comments: