அவுஸ்திரேலியாவையே பதறவைத்த பணயக்கைதிகள் விவகாரம் : துப்பாக்கிதாரி உட்பட இருவர் பலி


16/12/2014 அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்­னி நகரின் மார்ட்டின் பிர­தே­சத்தில் உள்ள உண­வ­க­மொன்றில் பிர­வே­சித்த துப்­பாக்­கி­தாரி 16 மணி நேரம் பணயக் கைதி­க­ளாக பிடித்து வைத்­தி­ருந்த உண­வ­கத்தின் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் வாடிக்­கை­யா­ளர்­க­ளையும் அதி­ரடி நட­வ­டிக்கை மூலம் பொலிஸார் மீட்­டனர்.


இதன் போது இருவர் கொல்­லப்­பட்­ட­தா­கவும் மேலும் மூவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் உள்ளூர் தக­வல்­களை ஆதாரம் காட்டி பி.பி.சி.சர்­வ­தேச செய்திச் சேவை செய்தி வெளி­யிட்­டுள்­ளது. உயி­ரி­ழந்­த­வர்­களில் அடை­யாளம் காணப்­பட்ட துப்­பாக்கிதாரி­யான ஈரானை சேர்ந்த அர­சியல் புக­லிடக் கோரிக்­கை­யாளர் மென் ஹாரூன் மொனிஸ் என்ற 49 வயது மதிக்­கத்­தக்க நபரும் அடங்­கு­வ­தாக அந்த செய்­தி­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இலங்கை நேரப்­படி நேற்று இரவு 8.50 மணி­ய­ளவில் ஆரம்­பித்­த­ப­ணயக் கைதி­களை மீட்கும் நடவ்­டிக்கை சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்­துள்­ளது. விஷேட அங்­கி­களை அணிந்த பொலிஸார் துப்­பாக்கி தாக்­கு­த­லுடன் ஒரு­புறம் உண­வ­கத்தில் அதி­ரடி நடவ்­டிக்­கையை ஆரம்­பிக்க மற்­றொரு பொலிஸ் குழு பண­யக்­கை­தி­க­ளையும் காய­ம­டிந்­த­வர்­க­ளையும் மீட்ட்கும் வண்ணம் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் போது குறித்த புக­லிடக் கோரிக்­கை­யா­ள­ரினால் 9 பண­யக்­கை­திகள் அந்த உண­வ­கத்­தினுள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ளனர். பொலி­ஸா­ரினால் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட குரித்த துப்பாக்கிதாரியான புகலிடக் கோரிக்கையாளர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என இந்த சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நன்றி வீரகேசரி 
இந்த சம்­பவம் தனக்கு பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்த அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் டோனி அப்பொட் ஆயு­த­தா­ரி­யொ­ரு­வரால் மக்கள் பணயக் கைதி­க­ளாக பிடித்து வைக்­கப்­பட்­டி­ருப்­பது அர­சியல் உள்­நோக்கம் கொண்ட ஒன்­றென குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.
கன்­பெர்ரா நகரில் இடம்­பெற்ற தேசிய பாது­காப்பு சபை கூட்­டத்­திற்கு தலைமை தாங்­கிய பின் உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அப்பொட் அதற்கு முன்னர் கூறு­கையில்இ அவுஸ்­தி­ரே­லியா அமை­தி­யா­க­வுள்­ளது. எதுவும் இது­வரை மாற்­ற­ம­டை­ய­வில்லை. அதனால் அவுஸ்­தி­ரே­லி­யர்கள் தமது தொழில்­க­ளுக்கு வழமை போல் செல்ல நான் வலி­யு­றுத்­து­கிறேன் என குறிப்­பிட்­டி­ருந்தார்.
அந்த உண­வகம் துப்­பாக்கி தாரியால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு 6 மணித்­தி­யா­லங்­களின் பின்னர் அந்த உண­வகக் கடட்­டத்­தி­லி­ருந்து மூவர் வெளி­யேறி வந்­துள்­ளனர். அதற்கு ஒரு மணித்­தி­யாலம் கழித்து மேலும் இருவர் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளனர். அவர்கள் தப்பி வந்­தார்­களா அல்­லது துப்­பாக்­கி­தா­ரியால் விடு­தலை செய்­யப்­பட்­டார்­களா என்­பது அறி­யப்­ப­ட­வில்லை.
தற்­போது தப்பி வந்­த­வர்­களின் உடல் நலத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் அவர்கள் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­க­ளது உடல் நலம் தொடர்­பான பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டதும் அவர்­க­ளுடன் பொலிஸார் உரையாடவுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பிரதி பொலிஸ் ஆணையாளர் கத்தரின் பேர்ன் தெரிவித்தார்.
நாம் பிரச்சினையை அமைதியான அணுகுமுறையில் தீர்க்க விரும்புகிறோம். அதற்கு சிறிது நேரம் எடுக்கலாம். எனினும் அதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என அவர் கூறினார்.
பொலிஸார் துப்­பாக்­கி­தா­ரி­யுடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதை உறு­திப்­ப­டுத்­திய போன் அந்த துப்­பாக்­கி­தாரி உள்ளூர் ஊட­க­மொன்­றுடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ள­தாக கூறினார்.
இர­வா­கி­யதும் அந்த உண­வ­கத்­தி­லி­ருந்து மின் விளக்­குகள் அணைக்­கப்­பட்­ட­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மேற்­படி உண­வ­கத்தின் ஊழி­யர்கள் என நம்­பப்­படும் மூவர் அந்த உண­வ­கத்தின் கண்­ணாடி ஜன்­ன­லுக்கு உட்­பு­ற­மாக பதற்­றத்­துடன் கறுப்புக் கொடியை தூக்கிப் பிடித்­தி­ருப்­பதை வெளிப்­ப­டுத்தும் காட்சி தொலைக்­காட்சி ஊட­கங்­களின் புகைப்­படக் கரு­வி­களில் பதி­வா­கி­யுள்­ளது.
அந்தக் கொடி­யா­னது மத்­திய கிழக்­கி­லுள்ள ஐ.எஸ். போரா­ளி­களால் பயன்­ப­டுத்­தப்­படும் கொடியை ஒத்­த­தாகும். மேற்­படி உண­வகம் மாநில முத­ல­மைச்­சரின் அலு­வ­லகம் மற்றும் பிர­தான வங்­கி­களின் தலை­மை­ய­கங்­கள்­அ­மைந்­துள்ள மார்டின் பிளேஸில் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
கடந்த செப்­டெம்பர் மாதம் ஈராக்­கி­லுள்ள ஐ.எஸ். போரா­ளி­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு போர் விமா­னங்­களை அவுஸ்­தி­ரே­லியா அனுப்பி வைத்­தி­ருந்­தது. அதே­ச­மயம் அந்த மாதம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் தாக்­குதல் நடத்த சதித்­திட்டம் தீட்­டி­ய­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ரான பாரிய நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.
மேலும் கடந்த ஒக்­டோபர் மாதம் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான புதிய சட்­டங்­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லிய பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. மேற்படி புதிய சட்டங்களானது அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் மோதல்கள் இடம்பெறும் இடங்களுக்கு பயணிப்பதற்கு தடை விதிக்கிறது.

1 comment:

S.Srikantharajah said...


"துப்பாக்கிதாரி உட்பட இருவர் பலி" என்பது தவறான செய்தி அல்லவா? துப்பாக்கிதாரி உட்பட இறந்தவர்கள் மூவர் அல்லவா? வீரகேசரிச் செய்தியை ஆதாரம் காட்டி வேறு நாடுகளில் உள்ளவர்கள் அப்படிப் போடலாம். அவுஸ்திரேலியாவில், அதுவும் சிட்னியில் இருந்து செயற்படுத்தப்படும் தமிழ்முரசில் அப்படி எழுதலாமா?
அன்புடன்