மெல்பன் நினைவரங்கில் கருத்துப்பகிர்வு - ரஸஞானி.

.
மறையும்    படைப்பாளிகளின்   ஆளுமை   குறித்த    மதிப்பீடுகளே  காலத்தின்   தேவை

                                    
"காலத்தை    பிரதிபலிப்பவர்கள்  இலக்கியப்படைப்பாளிகள்.    அவர்களின் மறைவு    இழப்பாக  கருதப்படும்பொழுது  அவர்கள்  குறித்த புகழாரங்களுக்குப்பதிலாக    அவர்தம்  படைப்புகளை   மதிப்பீடு  செய்யும் அரங்குகளை   நடத்தி  கலந்துரையாடும்பொழுது  வாழும்  படைப்பாளிகளும்   வாசகர்களும்  பயனடைவார்கள்.   மறைந்த படைப்பாளிகளின்   ஆளுமையை  அவர்களின்  படைப்புகளிலிருந்தே  இனம் காண  முடியும்."
என்று கடந்த  20  ஆம்  திகதி  சனிக்கிழமை  அவுஸ்திரேலியா மெல்பனில் Darebin Inter Cultural Centre இல்  நடந்த -  சிட்னியில் மறைந்த  மூத்த  படைப்பாளிகள்  காவலூர்  ராஜதுரை, எஸ்.பொன்னுத்துரை  ஆகியோருக்காக  நடத்தப்பட்ட  நினவரங்கு நிகழ்ச்சியில்    உரையாற்றியவர்கள்  ஏகமனதாக  கருத்து தெரிவித்தனர்.ஈழத்து  இலக்கிய  வளர்ச்சிக்கு  ஆக்கபூர்வமாக  பங்களித்த  காவலூர் - எஸ்.பொ.   ஆகியோரின்  நினைவரங்கு  மெல்பனில்    சட்டத்தரணியும்    கலை,  இலக்கிய  ஆர்வலருமான  செல்வத்துரை ரவீந்திரன்   தலைமையில்,  கலாநிதி  கௌசல்யா அன்ரனிப்பிள்ளையின்   வரவேற்புரையுடன்  ஆரம்பமானது.
நிகழ்ச்சியில்    மறைந்த  படைப்பாளிகளின்  உருவப்படங்களுக்கு விளக்கேற்றப்பட்டு    மலரஞ்சலியும்  மௌன  அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


நிகழ்ச்சிக்கு   தலைமையேற்ற  சட்டத்தரணி  ரவீந்திரன், இங்கிலாந்திலிருந்து   வருகை   தந்திருந்த  சமூகப்பணியாளர்  திரு. நித்தியானந்தன்,    இலங்கையிலிருந்து  வருகை   தந்திருந்த இலக்கியத்திறனாய்வாளர்    திரு. கே.எஸ்.  சிவகுமாரன்,  இலக்கிய ஆர்வலரும்   கண்டி  அசோக்கா  வித்தியாலய  அதிபர்  நடராஜாவின் துணைவியார்    திருமதி   லலிதா   நடராஜா   ஆகியோர்  விளக்கேற்றினர்.
இலங்கையிலிருந்து   வருகை  தந்திருந்த  ஆசிரியரும்  இலக்கிய ஆர்வலருமான   திருமதி  பவாணி   செபமாலைதாசன்  காவலூரின் சிறுகதைகள்    குறித்த  மதிப்பீட்டுரையை    சமர்ப்பித்தார்.


மெல்பன்   வானமுதம்  வானொலி  ஊடகவியலாளர்  திரு. நவரத்தினம்   அல்லமதேவன்  காவலூரின்  இலங்கை   வானொலி ஊடகப்பணிகளின்  மதிப்பீடுகள்  குறித்து  உரையாற்றினார்.
அவுஸ்திரேலியாவில்    வெளியான  மரபு  இதழில்    எஸ்.பொ.வின் நனவிடை  தோய்தல்   தொடர்   குறித்து  மரபு  ஆசிரியர்   திரு. விமல்   அரவிந்தன்   எழுதியிருந்த  கட்டுரையை    திருமதி  லலிதா நடராஜா  சமர்ப்பித்தார்.
எஸ்.பொ.வின்   படைப்பிலக்கியங்கள்  குறித்த  மதிப்பீட்டுரையை திருமதி   மாலதி   முருகபூபதி    நிகழ்த்தினார்.


இலங்கையிலிருந்து  வருகைதந்திருந்த  இலக்கியத்திறனாய்வாளரும் இலங்கை    ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்    மற்றும்    வீரகேசரி   The Island பத்திரிகைகளின்   முன்னாள்  பத்திரிகையாளருமான  திரு.  கே. எஸ். சிவகுமாரனும்,    இலங்கை   ரூபவாஹினி    கூட்டுத்தாபனத்தின் முன்னாள்  தமிழ்ச்சேவைப்பணிப்பாளரும்  வீரகேசரி  முன்னாள் செய்தி   ஆசிரியரும்  இலக்கிய  விமர்சகருமான  திரு. வன்னியகுலம்  ஆகியோர்  காவலூர்,   எஸ்.பொ.   ஆகியோருடன் தமக்கிருந்த  நட்புறவு  தொடர்பான  மலரும்  நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.


இந்நிகழ்ச்சியின்  இரண்டாவது  அரங்கில்  எழுத்தாளர் முருகபூபதியின்    சொல்ல  மறந்த  கதைகள்  நூலை  திருமதி  ஜெஸி ரவீந்திரன்   வெளியிட்டார்.
இளம்   தலைமுறைப்படைப்பாளி  திரு. ஜே,கே. ஜெயக்குமாரனும் இலக்கிய   ஆர்வலரும்  மனித  உரிமைச்செயற்பாட்டாளருமான திரு.ஜூட் பிரகாஷ்   ஆகியோர்   விமர்சித்தனர்.
இந்நினைவரங்கு -  நூல்  விமர்சன  அரங்கு  நிகழ்ச்சியை   ஒழுங்கு செய்திருந்த    முருகபூபதி  ஏற்புரையும்  நன்றியுரையும்   தெரிவித்தார்.
---0---  
1 comment:

garbage said...

Thank you for includoing my photo and the concise repor8t of the event.k.s.sivakumaran