16/12/2014 அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மார்ட்டின் பிரதேசத்தில் உள்ள உணவகமொன்றில் பிரவேசித்த துப்பாக்கிதாரி 16 மணி நேரம் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த உணவகத்தின் உத்தியோகத்தர்களையும் வாடிக்கையாளர்களையும் அதிரடி நடவடிக்கை மூலம் பொலிஸார் மீட்டனர்.
இதன் போது இருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் தகவல்களை ஆதாரம் காட்டி பி.பி.சி.சர்வதேச செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட துப்பாக்கிதாரியான ஈரானை சேர்ந்த அரசியல் புகலிடக் கோரிக்கையாளர் மென் ஹாரூன் மொனிஸ் என்ற 49 வயது மதிக்கத்தக்க நபரும் அடங்குவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று இரவு 8.50 மணியளவில் ஆரம்பித்தபணயக் கைதிகளை மீட்கும் நடவ்டிக்கை சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்துள்ளது. விஷேட அங்கிகளை அணிந்த பொலிஸார் துப்பாக்கி தாக்குதலுடன் ஒருபுறம் உணவகத்தில் அதிரடி நடவ்டிக்கையை ஆரம்பிக்க மற்றொரு பொலிஸ் குழு பணயக்கைதிகளையும் காயமடிந்தவர்களையும் மீட்ட்கும் வண்ணம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த புகலிடக் கோரிக்கையாளரினால் 9 பணயக்கைதிகள் அந்த உணவகத்தினுள் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர். பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட குரித்த துப்பாக்கிதாரியான புகலிடக் கோரிக்கையாளர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என இந்த சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நன்றி வீரகேசரி
இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட் ஆயுததாரியொருவரால் மக்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒன்றென குற்றஞ்சாட்டியுள்ளார்.
கன்பெர்ரா நகரில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அப்பொட் அதற்கு முன்னர் கூறுகையில்இ அவுஸ்திரேலியா அமைதியாகவுள்ளது. எதுவும் இதுவரை மாற்றமடையவில்லை. அதனால் அவுஸ்திரேலியர்கள் தமது தொழில்களுக்கு வழமை போல் செல்ல நான் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த உணவகம் துப்பாக்கி தாரியால் ஆக்கிரமிக்கப்பட்டு 6 மணித்தியாலங்களின் பின்னர் அந்த உணவகக் கடட்டத்திலிருந்து மூவர் வெளியேறி வந்துள்ளனர். அதற்கு ஒரு மணித்தியாலம் கழித்து மேலும் இருவர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் தப்பி வந்தார்களா அல்லது துப்பாக்கிதாரியால் விடுதலை செய்யப்பட்டார்களா என்பது அறியப்படவில்லை.
தற்போது தப்பி வந்தவர்களின் உடல் நலத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களது உடல் நலம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதும் அவர்களுடன் பொலிஸார் உரையாடவுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பிரதி பொலிஸ் ஆணையாளர் கத்தரின் பேர்ன் தெரிவித்தார்.
நாம் பிரச்சினையை அமைதியான அணுகுமுறையில் தீர்க்க விரும்புகிறோம். அதற்கு சிறிது நேரம் எடுக்கலாம். எனினும் அதற்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என அவர் கூறினார்.
பொலிஸார் துப்பாக்கிதாரியுடன் தொடர்பை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதிப்படுத்திய போன் அந்த துப்பாக்கிதாரி உள்ளூர் ஊடகமொன்றுடன் தொடர்பை ஏற்படுத்தி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறினார்.
பொலிஸார் துப்பாக்கிதாரியுடன் தொடர்பை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதிப்படுத்திய போன் அந்த துப்பாக்கிதாரி உள்ளூர் ஊடகமொன்றுடன் தொடர்பை ஏற்படுத்தி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறினார்.
இரவாகியதும் அந்த உணவகத்திலிருந்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி உணவகத்தின் ஊழியர்கள் என நம்பப்படும் மூவர் அந்த உணவகத்தின் கண்ணாடி ஜன்னலுக்கு உட்புறமாக பதற்றத்துடன் கறுப்புக் கொடியை தூக்கிப் பிடித்திருப்பதை வெளிப்படுத்தும் காட்சி தொலைக்காட்சி ஊடகங்களின் புகைப்படக் கருவிகளில் பதிவாகியுள்ளது.
அந்தக் கொடியானது மத்திய கிழக்கிலுள்ள ஐ.எஸ். போராளிகளால் பயன்படுத்தப்படும் கொடியை ஒத்ததாகும். மேற்படி உணவகம் மாநில முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் பிரதான வங்கிகளின் தலைமையகங்கள்அமைந்துள்ள மார்டின் பிளேஸில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டெம்பர் மாதம் ஈராக்கிலுள்ள ஐ.எஸ். போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கு போர் விமானங்களை அவுஸ்திரேலியா அனுப்பி வைத்திருந்தது. அதேசமயம் அந்த மாதம் அவுஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும் கடந்த ஒக்டோபர் மாதம் தீவிரவாதத்துக்கு எதிரான புதிய சட்டங்களுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. மேற்படி புதிய சட்டங்களானது அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் மோதல்கள் இடம்பெறும் இடங்களுக்கு பயணிப்பதற்கு தடை விதிக்கிறது.
1 comment:
"துப்பாக்கிதாரி உட்பட இருவர் பலி" என்பது தவறான செய்தி அல்லவா? துப்பாக்கிதாரி உட்பட இறந்தவர்கள் மூவர் அல்லவா? வீரகேசரிச் செய்தியை ஆதாரம் காட்டி வேறு நாடுகளில் உள்ளவர்கள் அப்படிப் போடலாம். அவுஸ்திரேலியாவில், அதுவும் சிட்னியில் இருந்து செயற்படுத்தப்படும் தமிழ்முரசில் அப்படி எழுதலாமா?
அன்புடன்
Post a Comment