பாகிஸ்தானில் தலிபன்களின்களின் தற்கொலை தாக்குதலில் மாணவர்கள் உட்பட 100 ற்கும் மேற்பட்டோர் பலி
மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு பழிதீர்க்க பாடசாலையில் தலிபான்கள் தாக்குதல்?
பாகிஸ்தானில் தலிபன்களின்களின் தற்கொலை தாக்குதலில் மாணவர்கள் உட்பட 100 ற்கும் மேற்பட்டோர் பலி
16/12/2014 பாகிஸ்தான் - பெஷாவர் நகரிலுள்ள பாடசாலையொன்றில் தலிபான் இயக்கத்தினர் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 80 மாணவர்கள் உட்பட 100ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த தாக்குதலில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பித்தக்கது.
நன்றி வீரகேசரி
மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு பழிதீர்க்க பாடசாலையில் தலிபான்கள் தாக்குதல்?
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இராணுவ பொது பாடசாலை மீது தாக்குதல் நடத்திய தெக்ரீக் – ஈ- தலிபான் போராளிகள், தமது போராளி குழுவிற்கு எதிரான அரசாங்கப் படையினரின் தாக்குதல்களுக்கு பழி தீர்க்கும் முகமாகவே அந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தலிபான் போராளிகள் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற அஹ்மெட் ரஷீட் என்ற கல்வியியலாளர், போராளிகள் அந்தப் பாடசாலையின் மீது தாக்குதலை மேற்கொண்டதற்கு பல காரணங்கள் உள்ளதாகவும், அவற்றில் ஒன்றாக பாகிஸ்தானிய சிறுமிமலாலாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டமை உள்ளதாகவும் கூறுகிறார்.
பாகிஸ்தானில் பெண்களின் கல்வியை வலியுறுத்தி பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக 2012 ஆம் ஆண்டு பாடசாலை பஸ்ஸில் வைத்து மலாலா தலிபான் போராளிகளால் சுடப்பட்டிருந்தார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் உயிர்தப்பிய மலாலாவுக்கு, அவர் பெண்கள் கல்விக்கு ஆற்றிய பணிக்காக அண்மையில் நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மலாலாவை மேற்குலக சாத்தான் படைகளுடன் இணைந்து செயற்படும் ஒருவர் என குற்றம் சாட்டி அவரது ஆதரவாளர்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் பெஷாவர் பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதலால் தான் மனமுடைந்து போயுள்ளதாக மலாலா தெரிவித்தார்.
அப்பாவி சிறுவர்களை அவர்களது பாடசாலையில் வைத்து கொல்வது போன்ற கொடூர செயல் வேறெதுவும் கிடையாது என மலாலா (17 வயது) குறிப்பிட்டிருந்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment