சைவம்
இயக்குனர் விஜய் தன் சிறு வயதில் அவர் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை தன் அம்மாவிடம் கேட்டு அறிந்து அதை திரைக்கதையாக உருவாக்கி நெகிழ்ச்சியுடனும், உணர்வுடனும் படைத்திருக்கும் படம் சைவம்.
கதை என்னவென்றால்
படம் தொடக்கமே அசைவ மார்க்கெட்டில் ஆரம்பித்து ஆடு, கோழி, மீன் என்று எல்லா அயிட்டத்தையும் ஒருவேளை சாப்பாட்டுக்கே வாங்கி வர சொல்கிறார் நாசர்.கிராமத்தில் வாழ்கின்ற நாசர் ஊர் திருவிழாக்காக வெளி ஊரில் வாழும் தன் மகன், மகள் மற்றும் சொந்த பந்தங்கள் எல்லோரும் (அசைவ)குடும்பம் ஒன்று கூடுகிறார்கள். அதே நேரத்தில் அந்த குடும்பத்தில் எல்லோருக்கும் பேபி சாரா தான் செல்ல பிள்ளை.எல்லோரும் ஒன்று சேர குடும்பமே சந்தோஷத்தில் மிதக்கிறது. இந்த தருணத்தில் கோயில் சென்று எல்லோரும் சாமி கும்பிட அர்ச்சனை தட்டு கொடுக்கும் நேரத்தில் பேபி சாராவின் துணியில் தீ பற்றி கொள்கிறது.உடனே அர்ச்சனை தட்டு கீழே தவறி விழ, குடும்பத்துக்கு ஆகாது என்று பூசாரி கூறுகிறார்.இதற்கு என்ன செய்வது என்று நாசர் கேட்க உங்கள் குடும்பத்தில் ஏதாவது நேர்த்தி கடனை செலுத்த மறந்திருப்பீர்கள், அப்படி இருந்தால் உடனே அந்த நேர்த்தி கடனை செலுத்துங்கள் என்று சொல்கிறார் .பூசாரி சொல்வது போல சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய விபத்தில் அந்த குடும்பமே தப்பித்தது, அதற்கு கருப்பன்ன சாமிக்கு சேவல் ஒன்றை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார்கள், ஆனால் இன்று வரை காணிக்கையை செலுத்தவில்லை.வீட்டில் வாழும் பேபி சாராவின் செல்ல கோழியான பாப்பாவை (சேவல் பெயராம் ) கருப்பனருக்கு படைக்க முடிவு செய்கிறார்கள், ஆனால் அங்கு தான் பிரச்சனையே, திடீரென்று அந்த சேவல் மறுநாளே காணாமல் போகிறது, உடனே அந்த சேவலை தேடி குடும்பமே படை எடுக்கிறதுகடைசியில் சேவல் கிடைத்ததா, கருப்பனருக்கு காணிக்கை தந்தார்களே என்பதே இந்த சைவம்.ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் செட்டிநாடு குடும்பமாக இருந்த குடும்பம் எப்படி சைவ பிள்ளையாக மாறுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்.
நடிகர் நடிகைகளின் நடிப்பு
நாசர் நடிப்பை பற்றி ஊர் அறிந்த விஷயம் தான், ஒரு நடிகர் என்பதை ஓரம் கட்டிவிட்டு, அந்த வேடமாகவே மாறும் சக்திக் கொண்டவர் நாசர், இந்த படத்திலும் தனது சக்தியை காண்பித்திருக்கிறார்.வயதான கதாபாத்திரத்திற்காக அவருக்கு போடப்பட்டுள்ள கெட்டப்பையும், மேக்கப்பையும் உண்மையானதாக மாற்றியுள்ளது நாசரின் நடிப்பு.முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் சாரா, நடிப்பில் ரொம்பவே தேர்ச்சி பெற்றிருக்கிறார். அழகிலும், நடிப்பிலும் எல்லோரையும் கவர்கிறார் .காட்சிகளை உணர்ந்து, எக்ஸ்பிரஸன்கள் கொடுத்திருக்கும் இவரை இயக்குநர் விஜய் ரொம்ப நன்றாகவே வேலை வாங்கியுள்ளார்.படத்தில் ஏகப்பட்ட புதுமுகங்கள் தான். இவர்களுக்கு பெரிதாக நடிப்பு வராது என்பதை புரிந்துக்கொண்ட விஜய், அதையே படத்தின் பலமாக்கி, அவர்களுடைய கதாபாத்திரங்களை எதார்த்தமாக நடமாட விட்டிருக்கிறார்.குறிப்பாக சரவணன் என்ற ஒரு சிறுவனின் நடிப்பை பற்றி சொல்லவேண்டும், உண்மையில் இந்த படத்தின் பெரிய வில்லனே இவன் தான். நடிப்பு என்பதை தாண்டி இன்றைய தலைமுறையின் மாடர்ன் பிள்ளையாக மணிக்கு ஒரு முறை நிரூபித்துள்ளான்.நாசர் மகன் பாஷா, நடிப்புக்கு ஒன்றும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து உள்ளார், அவரின் தோற்றமும், துறு துறு நடிப்பும் மக்களை கவரும்.வேலைக்காரனாக நடித்திருக்கும் ஜார்ஜ், அவருடைய மனைவியின் நடிப்பு என கண்டிப்பாக காமெடிக்கு பஞ்சம் இல்லை.
பலம்
படத்தில் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள் என்பது இயக்குநர் விஜய்யின் முதல் வெற்றிதான்.நாசரின் மகன் பாஷா அவருடைய பேரனாக நடித்திருக்கிறார். அவருக்கும் அவருடைய அத்தை மகளுக்கும் இடையே காதல் உருவாகும் காட்சிகளும் நன்று.கதையை பொறுத்த வரை பெரிய அளவில் அழுத்தம் இல்லை என்றாலும் அதை விஜய் மேற்கொண்ட விதமும், காட்சிப்படுத்திய விதமும், திருக்குறளைப் போன்று ரொம்ப அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.ஜி.வி பிரகாஷின் இசையில் அழகோ அழகு பாடல் கண்டிப்பாக அழகு தான் மற்றும் அவருடைய பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.நிரவ்ஷா ஒளிப்பதிவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஒரு ஸ்டைலிஷ் படமாக இருந்தாலும் சரி, இல்லை கிராமத்து படமாக இருந்தாலும் சரி பக்காவாக செய்கிறார், குறிப்பாக சேவலை துரத்தி ஓடும் காட்சியில் செம !
பலவீனம்
காணாமல் போன சேவலை நாசரின் அனுபவமே கண்டுபிடித்திருக்கவேண்டும். அதைச் செய்யாமல் பேரன் சொல்லும்வரை அவருக்குத் தெரியாது என்று காட்டியிருப்பது ரொம்பவே இடிக்குது.குழந்தை சாராவின் நடிப்பு நன்றாக இருந்தாலும் யதார்த்தத்துக்கு மீறிய சில பேச்சுக்கள் கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது .தலைப்புக்கு ஏற்றவாறு அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய அளவுக்கு ஒரு சத்தான சைவ உணவை தான் சமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
மொத்தத்தில் சைவம் - சத்தான விருந்து -
நன்றி cineulagam
No comments:
Post a Comment