உலகச் செய்திகள்


விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்ட விமான விபத்து

போகோ ஹராம் போராளிகளிடமிருந்து தப்பி வந்த 63 பெண்கள், சிறுமிகள்

விமான பாகங்களை ஏற்றிச்சென்ற புகையிரதம் தடம் புரண்டு அனர்த்தம்

சோமாலிய பாராளுமன்றத்துக்கு அருகில் தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்:4 பேர் பலி

மெக்ஸிக்கோ, கெளதமாலாவை உலுக்கிய 6.9 ரிச்டர் பூமியதிர்ச்சி; இருவர் உயிரிழப்பு

பலஸ்தீன காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் 25 பேர் பலி - பலியானவர்களில் 5 சிறுவர்கள் உள்ளடக்கம்



============================================================


விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்ட விமான விபத்து

07/07/2014  ஸ்பெய்னின் பாசிலோனா விமான நிலையத்தில், இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெறவிருந்த பாரிய விமான விபத்தொன்று விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்டுள்ளது.
போயிங் 767 ரக விமானம் ஒன்றும், A 340 என்ற விமானமும் ஒரே ஓடு தளத்தில் மோதி விபத்து சம்பவிக்க இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவிலிருந்து வந்த விமானம் பாசிலோனா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட அதே ஓடு தளத்தில் மற்றுமொரு விமானம் பறப்பதற்குத் தயாரானது.
  
இந்நிலையில் மற்றுமொரு விமானம் நகர்வதை அவதானித்த குறித்த ஓடுதளத்தில் தரையிறங்க இருந்த ரஷ்ய விமானத்தின் விமானி சாதுரியமாக செயற்பட்டு விமானத்தை வேறு திசைக்குத் திருப்பி குறித்த விமானம் பயணித்த பின்னர் தனது விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
நன்றி வீரகேசரி






போகோ ஹராம் போராளிகளிடமிருந்து தப்பி வந்த 63 பெண்கள், சிறுமிகள்

07/07/2014   நைஜீரிய போகோ ஹராம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களில் 63 பெண்களும் சிறுமிகளும் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
கடந்த மாதம் வடகிழக்கு பொர்னோ மாநிலத்திலுள்ள டாம்போவா நகரில் கடத்திச் செல்லப்பட்ட 68 பேரில் மேற்படி 63 பேரும் உள்ளடங்கியுள்ளனர். 
டம்போவா நகருக்கு அண்மையிலுள்ள இராணுவத் தளமொன்றை தாக்குவதற்கு போராளிகள் சென்ற வேளையிலேயே இந்தப் பெண்களும் சிறுமிகளும் தப்பிச் சென்றுள்ளனர். 
அதேசமயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் 50 க்கும் மேற்பட்ட கிள்ச்சியாளர்களை தாம் கொன்றுள்ளதாக நைஜீரிய இராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பொர்னோ மாநிலத்திலுள்ள சிபொக் நகரிலிருந்து தம்மால் கடத்தப்பட்ட 200 க்கு மேற்பட்ட பாடசாலை சிறுமிகளை போகோ ஹாராம் போராளிகள் தொடர்ந்து பயணக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
அந்த சிறுமிகளை விடுவிப்பதற்கு பதிலாக சிறையிலடைக்கப்பட்டுள்ள தமது போராளிக்குழு உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என போகோ ஹராமால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை நைஜீரிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அந்தப் போராளி குழுவிற்கு பெண் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கைம்பெண்களையும் விதவைகளையும் அணுகி போகோ ஹராம் உறுப்பினர்களை அவர்களுக்கு திருமணம் செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி









விமான பாகங்களை ஏற்றிச்சென்ற புகையிரதம் தடம் புரண்டு அனர்த்தம்

07/07/2014   அமெரிக்க மொன்டானா மாநிலத்தில் 3 போயிங் 737 விமானங்களின் பாகங்களை ஏற்றிச்சென்ற புகையிரதமொன்று தடம் புரண்டுள்ளது.
தடம்புரண்ட 19 புகையிரத பெட்டிகளில் 3 பெட்டிகள் விமான பாகங்கள் சகிதம் கிளார்க் போர்க் ஆற்றுக்குள் விழுந்துள்ளன.
அந்தப்புகையிரத பெட்டிகளை மீட்கும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது எவரும் காயமடையவில்லை. மேற்படி புகையிரதம் தடம்புரண்ட சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நன்றி வீரகேசரி








சோமாலிய பாராளுமன்றத்துக்கு அருகில் தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்:4 பேர் பலி

07/07/2014  சோமா­லிய தலை­நகர் மொகா­டி­ஷுவி­லுள்ள பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்திற்கு அருகில் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற தற்கொலைக் கார் குண்டுத் தாக்­கு­தலில்  4 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
மேற்­படி, தற்­கொலைக் கார் குண்டுத் தாக்­கு­த­லா­னது அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தின் பிர­தான வாயி­லுக்கு வெளியே இடம்­பெற்­றுள்ளது.
பாரா­ளு­மன்ற காவ­லர்கள்காரைச்செலுத்தி வந்த தற்­கொலைக்குண்­டுதாரி மீது துப்­பாக்கிப் பிர­யோகத்தை மேற்கொண்டதையடுத்தேஅவர்குண்டை வெடிக்க வைத்­துள்ளார்.
இந்தத் தாக்­கு­தலை தாமே நடாத்­தி­ய­தாக அல்-ஷபாப் போரா­ளிகள் உரிமை கோரி­யுள்ளனர்.
2011 ஆம் ஆண்டில் தலை­நகர் மொகா­டி­ஷுவின் கட்­டுப்­பாட்டை இழந்த அல்- ஷபாப் போராளிக் குழு பல குண்டுத் தாக்­கு­தல்­களை அங்கு நடத்தி வரு­கி­றது.
அல்-கொய்­தா­வுடன் தொடர்பைக் கொண்­டுள்ள இந்தக் குழு, இஸ்­லா­மிய புனித ரமழான் மாத காலத்தில் மேலும் தாக்­கு­தல்­களை நடத்­தப்­போ­வ­தாக சூளு­ரைத்­துள்­ளது.கடந்த வார ஆரம்­பத்தில் முன்­னணி பாராளு­மன்ற உறுப்­பி­னரான அஹ்மெட் மொஹமட் ஹாயத் மொகா­டிஷு நகரில் வைத்து சுட்டுக் கொல்­லப்­பட்டார்.
அந்தத் தாக்­கு­த­லுக்கு அல் - ஷபாப் போராளிக்குழு உரிமை கோரியிருந்தது. அந்த ப்போராளி குழு சோமாலியாவில் இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்க போராடி வருகிறது.
நன்றி வீரகேசரி








மெக்ஸிக்கோ, கெளதமாலாவை உலுக்கிய 6.9 ரிச்டர் பூமியதிர்ச்சி; இருவர் உயிரிழப்பு

09/07/2014  தென் மெக்­ஸிக்கோ மற்றும் கெள­த­மா­லாவை 6.9 ரிச்டர் அள­வான பல­மான பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்­கி­யதில் இருவர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 40 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
மெக்­ஸிக்­கோவின் புயர்டோ மடெரோ நக­ரி­லி­ருந்து இரு கிலோ­மீற்றர் தொலை­விலும் கெள­த­மாலா நக­ரி­லி­ருந்து 200 கிலோ­மீற்றர் தொலை­விலும் 60 கிலோ­மீற்றர் ஆழத்தில் தாக்­கிய மேற்­படி பூமி­ய­திர்ச்­சியைத் தொடர்ந்து சிறிய அள­வான 10 பூமி­ய­திர்ச்­சிகள் அந்த பிராந்­தி­யத்தை தாக்­கி­யுள்­ளன.
எனினும்இ இந்த பூமி­ய­திர்ச்­சியைத் தொடர்ந்து சுனாமி எச்­ச­ரிக்கை எதுவும் பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை. மெக்­ஸிக்­கோவில் கெள­த­மாலா எல்­லைக்கு அண்­மை­யி­லுள்ள ஹுயி
க்ஸ்ட்லா நகரில் பூமி­ய­திர்ச்­சியால் வீடொன்று இடிந்து விழுந்­ததில் இடி­பா­டு­களின் கீழ் சிக்கி 51 வயது நப­ரொ­ருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.
அதே­ச­மயம் கெள­த­மா­லாவில் மேற்கு சான் மார்கஸ் நக­ரி­லுள்ள மருத்­து­வ­ம­னையில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்­ததில் புதி­தாக பிறந்த குழந்­தை­யொன்று உயி­ரி­ழந்­துள்­ளது.
அதே­ச­மயம் வயோ­திபப் பெண்­ணொ­ருவர் மார­டைப்­புக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் அவ­ரது மர­ணத்­திற்கும் பூமி­ய­திர்ச்­சிக்கும் தொடர்­புள்­ளதா என்­பது அறி­யப்ப­ட­வில்லை எனவும் கெள­த­மாலா ஜனா­தி­பதி ஒட்டோ பெரெஸ் தெரி­வித்தார்.
கெள­த­மா­லாவில் 70 இற்கு மேற்­பட்ட வீடுகள் இடிந்து விழுந்­துள்­ளன. இந்த பூமி­ய­திர்ச்சி கார­ண­மாக மண்­ச­ரி­வுகள் ஏற்­பட்­டதால் சில வீதிகள் மூடப்­பட்­டுள்­ளன. மெக்­ஸிக்­கோவில் கட்­ட­டங்­களும், நெடுஞ்­சா­லை­களும் மலைப் பிராந்திய வீதிகளும் சேதமடைந்துள்ளன.
தபசுலா விமான நிலையத்தின் கூரையில் சேதம் ஏற்பட்டுள்ள போதும், விமானப் போக்குவரத்துகள் வழமைபோல் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
நன்றி வீரகேசரி









பலஸ்தீன காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் 25 பேர் பலி - பலியானவர்களில் 5 சிறுவர்கள் உள்ளடக்கம்

10/07/2014  பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இன்று வியாழக்கிழமை  இஸ்ரேலால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக  இஸ்ரேலால் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட  பதில் தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் தொகை 76 ஆக உயர்ந்துள்ளது.  
காஸாவின் பெயிட் லஹியா நகரில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய எறிகணை தாக்குதல் ஒன்றில் 5 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான்.
அதே சமயம் கான்யுனிஸ் பிரதேசத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் கோப்பி நிலையமொன்றில் ஆர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்துக்கிடையிலான உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளை தொலைக்காட்சியில் கண்டு களித்துக்கொண்டிருக்கையில் 8பேர் பலியானதுடன் 15  பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து இஸ்ரேலிய போர்விமானங்கள் இரு வீடுகள் மீது நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் 4 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதனுடன் பிறிதொரு தாக்குதலில் 19 வயது இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான்.
அதேசமயம் மேற்கு காஸாவில் காரொன்றின் மீது  இஸ்ரேலிய  ஏவுகணைகள்  விழுந்து வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நன்றி வீரகேசரி








No comments: