திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது.

.

திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனையான இயல் விருது.  

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது (2013) இவ்வருடம் திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவருடைய 88வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசுக் கேடயமும், 2500 டொலர் பணப் பரிசும் கொண்டது.  'ஈழத்தமிழ் நவீன இலக்கிய எழுச்சியின் சின்னம்' எனப் போற்றப்படும் இவர் இந்த விருதைப் பெறும் 15வது ஆளுமை ஆவர். முற்போக்கு இயக்கத்தின் முக்கிய பண்புக் கூறுகளான சமூகமயப்பாடு, சனநாயகமயப்பாடு ஆகியவற்றின் பெறுபேறாக எழுச்சி பெற்ற பல படைப்பாளிகளில் டொமினிக் ஜீவா குறிப்பிடத் தகுந்தவர்.

டொமினிக் ஜீவா 1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதிகளுக்கு பிறந்தார். இவரது தந்தையார் ஜோசப் ஒரு கலைப் பிரியர். நாட்டுக் கூத்தில் நாட்டமுடையவர். தாயார் மரியம்மாவோ அருவி வெட்டுக் காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, சக தொழிலாளர்களை மகிழ்வித்தவர். கலையில் ஈடுபாடு கொண்ட தாய் – தந்தையர்க்குப் பிள்ளையாகப் பிறந்த ஜீவா, கலை இலக்கிய ஆளுமையின் ஊற்றுக்கண்ணை பெற்றோரிடமிருந்து பெற்றார். பின்னாளில் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையாளராக மிளிர்வதற்கான பின்புலம் இப்படி அமைந்தது.


பல்வேறு தவிர்க்கமுடியாத காரணங்களால் இவரது கல்வி ஐந்தாம் வகுப்புடன் முற்றுப் பெற்றது. இலங்கையில் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டிருந்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்களை 1948ஆம் ஆண்டு ஜீவா சந்தித்தார். அவரது பொதுவுடமைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அது அவரது சமூக, அரசியல், இலக்கிய செல்நெறியைத் தீர்மானித்த ஒரு மகத்தான சந்திப்பானது. ஜீவானந்தம் மீதான அபிமானம் காரணமாக டொமினிக் என்ற தமது பெயரை 'டொமினிக் ஜீவா' என மாற்றிக் கொண்டார்.

டொமினிக் ஜீவா இன்றி ஈழத்தமிழ் நவீன இலக்கியம் இல்லை என்று சொல்லலாம். கருத்து முரண்பாடுகளைப் புறந்தள்ளி, அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை உற்று நோக்கும் எவரும், இந்த உண்மையை ஒப்புக்கொள்வர். இவர் தமது அயராத உழைப்பின் மூலம் ஒட்டுமொத்த ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்தார். ஒரு முழுநேர இலக்கியக்காரனாகத் தமது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்தார். ஈழத் தமிழருக்கென்றேயான நவீன இலக்கிய மரபு ஒன்று தோன்றிய காலத்திலிருந்து அதன் பிரதம பேச்சாளராகச் செயற்பட்டார். ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான ஆரம்பகால இலக்கிய உறவுப் பாலமாகத் திகழ்ந்தவர். தமது இலக்கியப் பணிகளூடாக, தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் கூடிய, சகஜ நிலைமையை ஏற்படுத்தப் பாடுபட்டவர்.

திரு டொமினிக் ஜீவா இதுவரை 5 சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அதில் ’தண்ணீரும் கண்ணீரும்’ தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசை வென்றது. 5 கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார். இவரைப் பற்றிய பல ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  ‘மல்லிகை’ எனும் இலக்கியச் சிற்றிதழும், ‘மல்லிகைப் பந்தல்’ எனும் பதிப்பகமும், இளவயது முதல் அதீத நம்பிக்கையுடன் அவர் பின்பற்றிய அரசியல் மார்க்கமும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவரது பணிகளுக்கான விதைநிலங்களாக இருந்து வந்துள்ளன. இன்று தனித்துவமான சிந்தனையும், செயல் வலுவும் மிக்க ஒரு புதிய இலக்கியத் தலைமுறை அவற்றின் விளைச்சலாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

பல்வேறு நிலைப்பட்ட அறிஞர்கள், கல்வியாளர்கள், புலமையாளர்கள், படைப்பாளிகள் பலரது
பங்களிப்புகளுடன் வெளிவந்த ‘மல்லிகை’ இதழ்களும், ‘மல்லிகைப் பந்தல்’ வெளியீடுகளும்
இன்று பல்கலைக் கழகப் பட்டமேற் படிப்புக்களுக்கான ஆய்வுக் களங்களாகப் பயன்படுகின்றன;
அறிஞர்களதும் ஆய்வாளர்களதும் தேடுதளமாக விளங்குகின்றன. சிறந்த எழுத்தாளராகவும், சிற்றிதழ் வரலாற்றின் முன்னோடிச் சாதனையாளராகவும் கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்து ஆற்றிய சேவைக்காக திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான இயல் விருது (2013) கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் 17 ஜூலை 2014 அன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வழங்கப்படுகிறது.

 

தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013


கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் இலக்கிய சாதனை இயல் விருது இவ்வருடம் (2013) திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு 28 ஜூன் 2014 அன்று ரொறொன்ரோ ராடிஸன் ஹொட்டலில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.கனடிய எழுத்தாளர் ஷ்யாம் செல்வதுரை விருதை வழங்கினார். இந்த விருது கேடயமும் 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலரான தியடோர் பாஸ்கரன்  இந்த விருதைப் பெறும் 14வது ஆளுமையாவர். இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன்  போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனது ஏற்புரையில் தியடோர் பாஸ்கரன் தமிழ் சினிமா, சூழலியல் போன்ற துறைகள் வளர தமிழில் அதற்கான புதிய கலைச் சொற்கள் உருவாக்குவது அவசியம் என்றார்.

தாரபுரத்தில்பிறந்தசு.தியடோர்பாஸ்கரன்(73) சென்னைகிறித்துவக்கல்லூரியில்முதுகலைப்பட்டம்பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுற்சூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார்.

உயிர்மைபதிப்பகம்இவரதுமூன்றுநூல்களான‘இன்னும்பிறக்காததலைமுறைக்காக(2006)’,தாமரைபூத்ததடாகம்(2008)’வானில்பறக்கும்புள்ளெலாம்(2011)  இவ்ற்றைபதிப்பித்தது.  உல்லாஸ்கரந்தின்The Way of the Tigerஎன்றநூலை‘கானுறைவேங்கை’  ( காலச்சுவடு2006) என்றதலைப்பில்மொழிபெயர்த்திருக்கின்றார்.    உயிர்மை,பசுமைவிகடன்பத்திரிக்கைகளில்இவரதுபத்திவெளியானது.. காட்டுயிர்பற்றிஇவர்எழுதியThe Dance of the Sarus(OUP) 1996இல்வெளிவந்தது.  சென்றஆண்டுபென்குயின்பதிப்பகம்இவரைதொகுப்பாசிரியராக்க்கொண்டுThe Sprint of the Blackbuck  நூலை2009  இல்வெளியிட்ட்து.
தமிழ்நாட்டில்மதிப்புறுகாட்டுயிர்காவலராகபணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கானஉலகநிதியகத்தில்(WWF-India)  அறங்காவலராகஉள்ளார்

 1980இல்வெளிவந்தஇவரதுநூல்Message Bearers (Cre-A)  தமிழ்த்திரைஆய்வில்முன்னோடிபுலமைமுயற்சியாககருதப்படுகின்றது.  தமிழ்சினிமா பற்றிய  The Eye of the Serpent  நூலுக்காகதேசியவிருதானஸ்வர்ணகமல்விருதை  1997இல்பெற்றார். இந்நூலின்மொழிபெயர்ப்பு பாம்பின்கண்  2012இல்வெளிவந்த்து,  இவரது History Through the lens: Perspectives on South Indian Cinema (Orient Blackswan) 2009இல் வெளியானது. தமிழில்சினிமாபற்றிமூன்று நூல்கள்எழுதியுள்ளார்-எம்தமிழர்செய்தபடம்(உயிர்மை2004),மீதிவெள்ளித்திரையில்(காலச்சுவடு2009). சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே(காலச்சுவடு ஜனவரி 2014இல் வெளியாகும்).    2003இல்தேசியதிரைப்படவிருதுகள்தேர்வுக்குழுவில்ஒருநடுவராகஇருந்தார்.  

2000இல்கம்பன்கழகத்தின்கி.வா.ஜாவிருதுபெற்றார்.  2010இல்கட்டுரைபிரிவில்கனடாதமிழ்கலைஇலக்கியதோட்டம்பரிசுபெற்றார்.  2001 இல்ஆன்ஆர்பரில்மிச்சிகன்பல்கலைக்கழகத்தில்தமிழ்சினிமாபற்றிபோதித்தார்.  கீழ்கண்ட இடங்களில் உரைகள் நிகழ்த்தியுள்ளார். ஹைதராபாத் மத்திய,சிகாகோ, பிரின்ஸ்டன், ஆஸ்திரேலியன் நேஷ்னல், லண்டன் பல்கலைக்கழகங்கள், பாரிஸ் ப்ரான்லி ம்யூசியம்.   

பறவைகளைஅவதானிப்பதிலும், நாய்வளர்ப்பிலும்புகைப்படமெடுத்தலிலும்தீவிர ஆர்வம் கொண்டவர்.  இவர்எடுத்தநான்குஇந்தியஇனநாய்கள்படங்கள்அஞ்சல்தலையாகவெளிவந்துள்ளன.

இந்தியஅஞ்சல்பணியில்வேலைசெய்தஇவர், NationalDefence College, Delhi      இல்ஒராண்டுபயிற்சிபெற்றார். அப்போதுரஷியா, மாரிஷியஸ், ஜெர்மனிமுதலியநாடுகளுக்குபயணித்தார். ஜப்பானில்மூத்தஅரசுஅதிகாரிகளுக்கானபயிற்சிபெற்றார். ஐ.நா. சபையில்சார்பில்கென்யாநாட்டில்இரண்டுமாதம்ஆலோசகராகபணியாற்றினார்  போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றிஓய்வுபெற்றபின், மூனறாண்டுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001)  பணியாற்றினார்.  மனைவிதிலகாவுடன்  பெங்களூரில் வசிக்கின்றார்,.இவர்களுக்குஒருமகள்ஒருமகன்உண்டு.

விழாவுக்கு மண்டபம் நிறைய ஆர்வலர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
Nantri http://tamilliterarygarden.com/

No comments: