இலங்கைச் செய்திகள்



தடை தாண்டும் நவிப்பிள்ளை

பாப்பரசர் மன்னிப்பு கோரவேண்டும்:பொதுபல சேனா

தடைக்கான ஆதாரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன : சர்வதேச மன்னிப்புச் சபை

==================================================================

தடை தாண்டும் நவிப்பிள்ளை

12/05/2014   இலங்­கையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள சர்­வ­தேச விசா­ர­ணைக்குத் தேவை­யான நிதியைப் பெற்றுக் கொள்­வதில் ஐ.நா.மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை வெற்றி பெற்­றுள்­ள­தாக, ஆங்­கில வார­ இதழ் ஒன்று தெரி­வித்­துள்­ளது.
இலங்கையில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்­துக்குள் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்­துள்ள நிலையில், போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.
இந்­த­வாரம், இந்த முயற்­சி­களில் மற்­றொ­ரு­படி முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது.
ஐ.நா.மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை, இந்த விசா­ர­ணை­க­ளுக்குத் தேவை­யான நிதியை, தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வ­ளித்த நாடு­க­ளிடம் இருந்து பெற்­றுக்­கொள்­வதில் வெற்றி பெற்­றுள்ளார்.
இந்­த­நி­லையில், இம்­மாத இறு­தியில், இந்த விசா­ர­ணைக்­கு­ழுவை அமைப்­பது குறித்து, இலங்கை அர­சாங்­கத்­துக்கு அவர் ஜெனி­வாவில் உள்ள வதி­விடப் பிர­தி­நிதி மூலம் தெரி­யப்­ப­டுத்­த­வுள்ளார்.
அதை­ய­டுத்து, அனைத்­து­லக விசா­ரணைப் பொறி­மு­றையின் உருவாக்கம் மற்றும் அதற்கான நிபந்தனைகள் பகிரங்கப்படுத்தப் படவுள்ளதாகவும் அந்த ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி 




பாப்பரசர் மன்னிப்பு கோரவேண்டும்:பொதுபல சேனா

13/05/2014   பாப்பரசர் புனித பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பௌத்த அமைப்புகளான பொதுபல சேனாவும், ராவணா சக்தி அமைப்பும் இலங்கையில் மத நல்லிணக்கம் இல்லையென பாப்பரசர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிக்கையில்,
பாப்பரசர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மத நல்லிணக்கம் இலங்கையில் இல்லையெனத் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும்.
அதன் பின்னர்தான் இங்கு வரவேண்டும்.
எமது நாட்டில் மதங்களுக்கிடையே மோதல்கள் கிடையாது.
பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர்.
மதங்களிடையே மோதல்கள் கிடையாது. ஒரு சில அடிப்படைவாத மதச் சக்திகளின் நடவடிக்கைகள் காரணமாகவே சிறு சிறு பிரச்சினைகள் தலைதூக்குகின்றனவே தவிர, முழு நாட்டிலும் மத நல்லிணக்கம் காணப்படுகிறது.
எனவே, இங்கு மத நல்லிணக்கம் இல்லையென்று கூறிய கருத்துகளுக்கு பாப்பரசர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ராவணா சக்தி
பாப்பரசர் உலகம் மதிக்கும் ஒரு மதத்தலைவர். அவர் இங்கு வரலாம். ஆனால், எமது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. எமது நாடு தொடர்பில் கருத்துகளையும் வெளியிடக்கூடாது. இங்கு வரலாம், போகலாம். ஆனால், இலங்கையில் எந்தெந்த பிரதேசத்திற்கு பாப்பரசர் போக வேண்டும். யார் யாரை சந்திக்க வேண்டுமென்பதை அனைத்தையும் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இலங்கை தொடர்பிலான பிழையான கருத்துகளுக்கு அவர் இரையாகி விடுவாரென்றும் இராவணா சக்தியின் தலைவர் இத்தேகந்தே தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி 











தடைக்கான ஆதாரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை



14/05/2014    தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று இலங்கை அரசு தனி நபர்களையும் புலம்பெயர் அமைப்புக்களையும் தடை செய்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.
அத்தகைய ஆதாரங்களை இலங்கை அரசிடம் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கின்றது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான  தூதுவர் டேவிட் டலி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் தடைப்பட்டியல் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
அமைப்பு ஒன்றைத் தடை செய்வது என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் பாரதூரமான விவகாரம். இலங்கை அரசு வெளியிட்டுள்ள தடைப் பட்டியலை ஏற்பதற்கு தேவையான ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
இலங்கை அரசு அதனை வெளிப்படுத்தினால் மட்டுமே நிலைமைகளை ஆராய முடியும். முடிவெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  
நன்றி வீரகேசரி 







இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன : சர்வதேச மன்னிப்புச் சபை

14/05/2014  இலங்கை உள்ளிட்ட ஆசிய பிராந்திய வலய நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் சித்திரவதை சம்பவங்கள் வழமையானவையாக மாற்றமடைந்துள்ளதாகவும், இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
ஆசிய நாடுகள் சித்திரவதைகளை ஒழிப்பது தொடர்பில் வெறுமனே வாய் மொழி மூல வாக்குறுதிகளை அளிப்பதனை நிறுத்திக் கொண்டு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பினை வழங்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் ரிச்சர்ட் பெர்னாட் (சுiஉhயசன டீநnநெவவ) தெரிவித்துள்ளார்.
சித்திரவதைகளை தடுக்கும் விசேட பிரச்சார நடவடிக்கையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி 











No comments: