.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
அனுபவப்பகிர்வு - தமிழ்க்கவிதை இலக்கியம்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான மூன்றாவது அனுபவப்பகிர்வு எதிர்வரும்
24 -5-2014 ஆம்
திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையில்
மெல்பனில் - பிரஸ்டன்
Darebin Intercultural
Centre மண்டபத்தில்
( 59 A, Roseberry Avenue, Preston -3072) நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பு
மற்றும் கவிதை இலக்கிய
அனுபவப்பகிர்வு முதலான நிகழ்ச்சிகள்
நடைபெறும். இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு கவிஞர்களையும்
இலக்கிய ஆர்வலர்களையும் அன்புடன்
அழைக்கின்றோம்.
"தமிழில் கவிதை
இலக்கியம்" என்ற தலைப்பிலான இந்த அமர்வில் பின்வரும் விடயங்களை உள்ளடக்குவதற்கு
முயற்சி எடுக்கப்படுகின்றது.
1) கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளில் ஏதேனும் ஒன்றை
வாசித்தல் (5 நிமிடங்களுக்கு மேற்படாமல்)
2) "என்மனதில்
மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கவிதை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்க் கவிதையைப் படித்துக்காட்டுதலும்,
அதற்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ளலும்.
(10 நிமிடங்களுக்கு மேற்படாமல்)
3) சங்க காலம் முதல் இன்றுவரை கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்.
(அ) பாடு பொருளில் (ஆ) உள்ளீட்டில் (இ) வடிவத்தில்
இந்தத் தலைப்பில் குறிப்புரையும்,
கலந்துரையாடலும் இடம்பெறும்.
மேற்குறிப்பிட்டவாறு கவிதை வாசிக்கவோ
- படிக்கவோ, அல்லது குறிப்புரை தரவோ
விரும்புபவர்களும், மேலதிக விபரங்கள் தேவைப்படுவோரும்,
எதிர்வரும் 10.05.2014 ஆம் திகதிக்கிடையில்
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்களைத் தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.
தொலைபேசி
இலக்கங்கள்: (03)
9465 1319 - 0478 06 03 66
மின்னஞ்சல்: srisuppiah@hotmail.com
நிகழ்ச்சியின்
இறுதியில் கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும்.
செயலாளர்
அவுஸ்திரேலியா தமிழ்
இலக்கிய கலைச்சங்கம்
மின்னஞ்சல்:
atlas2001@live.com
No comments:
Post a Comment