கம்பன் கழகத்தின் 2014ம் ஆண்டிற்கான இசை வேள்வி 24 05 14

.

அன்பான தமிழ் முரசு வாசகர்களே! 
வணக்கம்,
உங்கள் நாள் நலமே மலர்க. 

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் நிறைவான  2008ம், 2010ம், 2012ம் இசை வேள்விகளின் தொடர்ச்சியாக,
2014ம் ஆண்டிற்கான இசை வேள்வி நிகழ்வை சிறப்பாக அரங்கேற்றவிருக்கின்றோம். 
வீணா-வேணு கான இசைச் சங்கமமாக அமையவிருக்கும் இந்த யாகத்தில்,
புகழ் பூத்த வீணை வித்துவான் திரு. இராஜேஷ் வைத்தியா அவர்கள்,
இளம் புல்லாங்குழல் வித்தகி 'வாரிஜாஶ்ரீ வேணுகோபால் அவர்களோடு இணைந்து இசையால் எமை மயக்கவிருக்கின்றார்.
இக் கச்சேரிக்கு அணிசெய் இசைக் கலைஞர்களாக தென்னிந்திய மற்றும் சிட்னிக் கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.  

இவ்வினிய இசை வேள்வி எதிர்வரும் மே மாதம் 24ம் திகதியன்று (சனிக்கிழமை) அரங்கேறவுள்ளது. 
சிட்னி வாழ் கலா இரசிகர்கள் அனைவரையும் அலை போல திரண்டு வந்து,
இசையரங்கைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

என்றும் ஆதரவு நல்கி நிற்கும் தமிழ் முரசு அன்பர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள்.

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-

நிகழ்வின் விபரங்கள்  மேற்காணும்  பிரசுரத்திலுள்ளது.

நுளைவுச்சீட்டுக்களைப் பின்வரும் வியாபார ஸ்தாபனங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

Spice Land (Flemington) - 9746 2720 
Pyramids (Flemington) - 9764 4433 
Spice Corner (Pendle Hill) - 9636 9644 


No comments: