ஈழத்தமிழ்மகன் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா- 2013

.

ஈழத்தில் பிறந்து தமிழ்தொண்டாற்றிய வண. பிதா. தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு (July 4-7, 2013) கொண்டாடப்படுகிறது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையும் கனேடியத் தமிழர் பேரவையும் இணைந்துTORONTO, CANADA வில் நடத்தும் தமிழ் விழா, ஈழத்தமிழ் மகன், தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்து தமிழ்த்தொண்டாற்றிய ஈழத்தமிழ் மகனுடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது மிகவும் சிறப்பானதாகும். எல்லைகள், மதம் எல்லாவற்றையும் கடந்து தமிழ் எங்களை இணைக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

பக்தியின் மொழி தமிழ்

"If Latin is the Language of Law and of Medicine 
French the Language of the Diplomacy 
German the Language of Science 
And English the Language of Commerce 
Then Tamil is the Language of Bhakti 
The devotion to the sacred and the holy."  
-Rev. Fr. Thaninayakam –

தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில்,ஊர்காவற்துறையில் கரம்பன்  என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசுசிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு ஆவணி 2, 2013  இல் பிறந்தார்.  


தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம்என்ற தனது முன்னோர்களின்  தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார். 

அடிகளாரது தந்தை நாகநாதன்மற்றும் அவரது தந்தைவழிப்  பரம்பரையினர் யாழ்ப்பாண வைபவமாலையிலும், கையிலாயமாலையிலும்  குறிப்பிடப்படும் நெடுந்தீவைச் சேர்ந்த இருமரபுந்துய்யதனிநாயக முதலி வழிவந்தவர்கள். 
"…இறைவனிகர் செல்வன் எழில்செறிசே யூரன்
நிறைபொறுமை நீதியக லாதான் - நறைகமழும்
பூங்காவி மார்பன் புகழுளவெள் ளாமரசன்
நீங்காத கீர்த்தி நிலையாளன் - பாங்காய்
இனியொருவர் ஒவ்வா இருகுலமுந் துய்யன்
தனிநா யகனெனும்போர் தாங்கு - முனியவனை
மற்றுமுள பற்று நகர்வளமை சூழ்ந்திடுதென்
பற்று நெடுந்தீவு பரிக்கவைத்துச்  சுற்றுபுகழ்…" 

இன்றைக்கு தொன்மையும்வளமும்வனப்பும் இணைந்த ஒரு மொழியைப் பேசுபவர்களாக நாம் இருக்கிறோம். தோண்டத் தோண்ட திகட்டாத தேன்சுவையைக் கொட்டித்தரும் தொன்மை தமிழுக்கு உண்டு. தமிழுடன் தோன்றிய பல மொழிகள் அழிந்துபோனாலும் நவீனத்தைக் குழைத்து இற்றை வரைக்கும் இளமையாய் வாழ்ந்துவருவது அதன் சிறப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் தமிழ் மொழியின் சிறப்புக்கு வளம் சேர்த்த ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்களின் ஒப்பற்ற உழைப்பாலும்அர்ப்பணிப்பாலுமே தமிழ் மொழி தொன்மையும் நவீனமும் ஒருங்கே அமைந்ததாய் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் தமிழ்மொழியின் பெருமையை உலகளாவிய ரீதியில் பறைசாற்றிய ஒருவர் அருட்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார். தமிழை உலகமெலாம் பரவும்வகை செய்து ஈழத்தமிழினத்துக்கே பெருமை சேர்த்தவர் தனிநாயக அடிகள்.

சேவியர் தனிநாயகம் அடிகளார் 1913ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி ஊர்காவற்றுறையிலே பிறந்தார்இவரின் இயற்பெயர் சேவியர் ஸ்ரனிஸ்லோஸ்.இவர் தனது ஆரம்பக் கல்வியை காவலூர் புனித அந்தோனியார் கல்லூரியிலும்,இடைநிலைக்கல்வியை சம்பத்திரிசியார் கல்லூரியிலும் (1920 - 1922) கற்றார்.பின்னர் கத்தோலிக்க குருவாக விரும்பி கொழும்பு புனித பேர்னாட் குருமடத்தில் இணைந்து (1934) மெய்யியல் துறையில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்தொடர்ந்து உரோமை வத்திக்கான் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.ஐரோப்பாவில் இருந்தபோதே ஆங்கிலத்துடன் லத்தீன்இத்தாலியபிரெஞ்சு,ஜேர்மனியஸ்பானியபோர்த்துக்கேய மொழிகளில் புலமை பெற்றவராக விளங்கினார். 

தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் புனித தெரேசா உயர்நிலைப்பள்ளியில் துணைத் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.இலங்கையில் கற்றபோதும் தமிழ் பயிலும் வாய்ப்பு இலங்கையில் அவருக்கு வாய்க்கப்பெறவில்லைவடக்கன்குளத்தில் இருந்தபோதே பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். 1945இல் தமிழ்நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து'தமிழ்ப்பாடல்களில் இயற்கைஎன்ற பெயரில் கட்டுரை சமர்ப்பித்து முதுமானிப் பட்டம் பெற்றார்.

தமிழ் மொழிக்கான ஆய்வுகள் அதிகமில்லாத அந்த நாட்களில் தமிழ் மொழிக்கான ஆய்வு அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆர்வம் கொண்டு தனிநாயக அடிகள் உழைத்து வந்தார்ஜப்பான்சிலிபிரேசில்பெருமெக்சிக்கோஅமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மொழியியல் ஆய்வு தொடர்பாகப் பயணித்தார்தமது பயணத்தின் போது ஐரோப்பிய நூலகங்களில் உள்ள பழந்தமிழ் நூல்களைக் கண்டறிந்தார்.இவற்றில் கார்த்தீயா (1556), தம்பிரான் வணக்கம் (1578), கிறித்தியானி வணக்கம்(1579), ஆன்டம் டி புரொசென்கா என்பவரால் தொகுக்கப்பட்ட முதலாவது தமிழ்-போர்த்துக்கீச அகராதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏனைய மொழிகளுக்காக நடைபெறும் ஆய்வுகளைக் கண்டு தமிழுக்கும் இவ்வாறான ஆய்வுகள் தேவை எனக் கூறினார்தமிழ் குறித்த செய்திகளை ஆங்கிலத்தில் வெளிக்கொணர்ந்தாற் தான் தமிழின் பெருமையை எனைய சமூகத்தவர் உணர்ந்துகொள்வார்கள் என்பதற்காய் Tamil Culture என்ற சஞ்சிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 

பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1961 இல் மலேசியா சென்று மலேயாப் பல்கலைக்கழகத்தில் 1969வரை இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்மலேசியாவில் பணி புரியும் காலத்தில் புதுடெல்கியில் வ.சுப்பிரமணியத்துடனும் இன்னும் இருபத்தாறு அறிஞர்களுடனும் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை தோற்றுவித்தார்இந்நிறுவனம்உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும்வளப்படுத்தவும் தமிழாராய்ச்சி மாநாடொன்றினை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது. அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தனிநாயக அடிகள் நடத்தினார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் வெளியிட்டார்சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

1970இல் மூன்றாவது தமிழாராய்ச்சி மாநாடு பாரிசிலும், 1974 இல் நான்காவது தம்ழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலும் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாரய்ச்சி மாநாட்டினையொட்டி யாழ் நகரமே விழாக்கோலம் பூண்டது. இது சிங்கள அரசுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாநாட்டின் இறுதி நாளில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் 10 தமிழர்கள் பலியானார்கள். ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இதுபெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அடிகளார் 'தமிழ்த் தூது', 'உலகப் பயணங்களின் பட்டறிவு', 'ஒன்றே உலகம்'அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார்.அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய உரை திருவள்ளுவர் என்னும் பெயரில் நூலாகியுள்ளது. 

அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் காபொஇரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து என்ற நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றார்அதன்பின்பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30மணியளவில் உயிர் நீத்தார்.

1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுஇவரின் இறப்புக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கலாநிதி பட்டம் வழங்கிக் சிறப்பித்தது.தனது சேவையால் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த தனி நாயக அடிகளார் பிறந்த நூறாவது ஆண்டு இந்த வருடமாகும்.

The roving Ambassador of Tamil

Today, Tamil is one of the few Indian languages taught in many universities of the
world. Scholars, who are not of Tamil origin, have undertaken Tamil research.
International conferences on Tamil studies are conducted frequently in many
countries. Tamil festivals are celebrated in many parts. All this was possible, thanks
to the strenuous efforts by one individual: Xavier S. Thaninayagam, a catholic priest
from Jaffna, who was professor and head of Indian Studies, University of Malaysia,
from 1961 to 1969.  Scholars, who are not of Tamil origin, have undertaken Tamil research.

International conferences on Tamil studies are conducted frequently in many
countries. Tamil festivals are celebrated in many parts. All this was possible, thanks
to the strenuous efforts by one individual: Xavier S. Thaninayagam, a catholic priest
from Jaffna, who was professor and head of Indian Studies, University of Malaysia,
from 1961 to 1969

Nantri:viyaasan.blogspot

No comments: