நீடு வாழி ஜீவா அகவை 87 தாண்டி.........

.

27.06.2013 ,87 அகவையில் புகும் ஜீவாவை தமிழ்முரசு வாழ்த்துகிறது நீடு வாழி ஜீவா
நின்னை 
நினைக்காத நாட்கள் இல்லை
சிரிக்கும் கண்கள்
ஆதூரமாய் பற்றும் கரங்கள்


நேசமான பேச்சு
ஆழத்திலிருந்து பீறிட்டெழும் நட்பு
இவையெல்லாம்
இல்லாத தவிப்பு
நீண்ட நாளாய்


87 அகவையில் புகும் 27.06.2013 ல்
வருவாய் என 
காத்திருந்தோம் நண்பர்கள் 
தமிழ்சங்க வாசலில்
மேமனுடன் வந்தாய்
புளங்காகிதமானோம்.


நண்பர்கள் கே.எஸ்.சிவா, 
திக்குவல்லை, பாலசிங்கம்
ஆப்டீன், சோதிலிங்கம், ஜின்னா
மில்லேர்ஸ் பாலா
இளைய தலைமுறை தேவ முகுந்தன்நாடுதேடி ஓடி வந்த நளாயினி


கணவர் தாமரைச் செல்வன் 
குழந்தைகள்
இன்னும் எத்தனையோ பேர்
வாசலில் வரவேற்றோம்


ஓரிருநாளா
எத்தனை வருட நட்பு
மூத்திர ஓழுங்கையின்
நாற்றத்தை நாண வைத்து
நறுமணம் வீசிய 
மல்லிகை ஒழுங்கையில்
சந்தித்தது முதன் முதலில்
எத்தனை சந்திப்பு
எண்ணவும் முடியுமோ?


கூட்டம் எப்படி நடந்து
யார் யார் பேசினிர்
எதுவும்  தெரியாது.புரியும் உனக்கு 
'கடமையிற் கண்ணாயிருத்தல்'
காத்திருப்பர் வேதனையில் பலர்
கடமை அழைக்க
நடையைக் கட்ட
வேண்டியதாயிற்று


மன்னிப்பு கேட்கவில்லை
கேட்காமலே மன்னிப்பாய்


நீடு வாழி ஜீவா
நின்னை நினைக்காத நாட்கள் இல்லை
சிரிக்கும் கண்கள் .............எம்.கே.முருகானந்தன்
நன்றி suvaithacinema.blogspot

No comments: