நல்ல-படம்ன்னா-என்ன-சார்..-பாலு மகேந்திரா

.
""என் சினிமா பட்டறையில் பலதரப்பட்ட மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களிடம் அவ்வப்போது பலதரப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய தருணங்கள் வரும். சில கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லுவேன். சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் இருக்காது.
அப்படித்தான் அந்த கேள்வியை எதிர்க் கொண்டேன். ""நல்ல படம்ன்னா என்ன சார்..?'' ""உதாரணமாக எந்த படத்தையாவது உங்களால் சொல்ல முடியுமா?'' என்று என்னிடம் கேட்டவன் ஓர் என்ஜீனியரிங் மாணவன். அந்த கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. ""நாளைக்கு சொல்கிறேன்'' என்றேன். அந்த கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. தூக்கம் கலைத்தது. புலம்ப வைத்தது. மறுநாளும் அந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த மாணவன் இருந்தான். பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருந்தது.
""நல்ல சினிமா என்பது அம்மா சமைக்கும் சாப்பாடு போல் இருக்க வேண்டும்'' என்றேன். எத்தனையோ வகையான சாப்பாடு கிடைக்கும்போது, வயிற்றுக்கு நல்லதை செய்யும் அம்மாவின் சாப்பாடுதானே நமக்கு பிடித்தமானது'' என்று பதில் சொன்னேன். எல்லா மனிதர்களிடத்திலும் ஒரு மிருகம் ஒளிந்திருக்கிறது. அந்த மிருகத்தை ஒரு சினிமா சாந்தப்படுத்த வேண்டும். பதிலுக்கு அந்த மிருகத்தை அந்த சினிமா உசுப்பி விடக்கூடாது. சாந்தப்படுத்தும் சினிமாதான் நல்ல சினிமா என்று சொன்னேன்.'' என்கிறார் - பாலுமகேந்திரா

No comments: