விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகம்




(Whittlesea Tamil Association )

மெல்போர்ணில் இயங்கும் சமூக வானொலியான ~~வானமுதம்" தமிழ் ஒலிபரப்புச் சேவையை நடாத்திவரும் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00மணக்கு 
Epping Memorial Hall இல் அமைந்துள்ள
Funtion room இல்  நடைபெற்றது. கடந்த ஆண்டு தலைவராக இருந்த திரு.வில்லியம் இராஜேந்திரம் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. அவர் தனது உரையில் நடந்து முடிந்த ஆண்டில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகள், ‘வானமுதம்’ ஒலிபரப்புச் சேவையின் வளர்ச்சி, வருடாந்தம் நடாத்தும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம், விற்றில்சீ மாநகரசபையுடன் இணைந்து செயற்படவேண்டிய நடவடிக்கைகள், ஈடுபாடுகள் என்பன பற்றி விளக்கமாகக் கூறியிருந்தார்.
மேலும் தனதுரையில் கடந்த ஆண்டு பதவியிலிருந்து அயராது உழைத்த சகல நிர்வாக உறுப்பினர்களுக்கும், வானமுதம் தமிழ் ஒலிபரப்புச்சேவையின் சகல அறிவிப்பாளர்களுக்கும், தேர்தல் அதிகாரியாக செயற்படும் திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், சகல விற்றில்சீ தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சங்கத்தின் அறிக்கை செயலாளரால் வாசிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் குறை நிறைகள் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. வானமுதம் ஒலிபரப்பின் நேயரான திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் தேர்தல் அதிகாரியாகச் செயற்பட்டு புதிய ஆண்டுக்குரிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்து வைத்தார்.



அடுத்த ஆண்டுக்குரிய புதிய நிர்வாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் திரு.வில்லியம் இராஜேந்திரம்.
உபதலைவர் திரு.நவரத்தினம் அல்லமதேவன்.
செயலாளர் திரு.தியாகராஜா சாம்பசிவம்.
பொருளாளர் கலாநிதி திருமதி.கௌசல்யா அன்ரனிப்பிள்ளை
சங்க உறுப்பினர்களாக
திருமதி.நீனா டேரியஸ்
திரு.எட்வேட் அருள்நேசதாசன்
பாடும்மீன் சு.ஸ்ரீசந்தராசா
திரு.எட்வேட் மரியதாசன்
திரு.ஜோசெவ் நிரோஷ்
திரு.ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரஞ்சன்
திரு.பென் பிரதிவிராஜ்
திரு.அன்டன் நியூட்டன் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டுத் மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.வில்லியம் இராஜேந்திரம் வானமுதம் வானொலிச் சேவை, விற்றில்சீ தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிக் கூறியதுடன், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மீண்டும் நடப்பாண்டுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.தியாகராஜா சாம்பசிவம் சங்கத்தினதும், வானொலியினதும் வளர்ச்சியில் தொடர்ந்து அரும்பாடுபட வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். சமூகமளித்திருந்த திரு.சி.சந்திரசேகரம் அவர்கள் விற்றில்சீ மாநகரசபையின் நடவடிக்கைகள் பற்றியும், இளம் சமுதாயத்தினரின் பங்களிப்பினை மாநகரசபை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். திரு.சி.சந்திரசேகரம் அவர்கள் தற்பொழுது மாநகரசபையில்
Community Leadership Net Work குழுவில் தமிழ் குடிமகனாக அங்கத்துவம் வகிக்கின்றார்.
திரு.நிரோஷ் முத்துக்குமார் இணையத்தளம் அமைப்பதன் செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். திரு.எட்வேட் அருள்நேசதாசன் வானமுதத்தின் ஒலிபரப்புச் சேவையை சகல தமிழ் மக்களும் கேட்பதற்கு ஏற்ப அவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தினைத் தெரிவித்திருந்தார். 
திரு.சிவசுப்பிரமணியம் (ரவி) வானமுதத்தின் நேயர் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் நிகழ்ச்சிகள் தரமானதாக ஒலிபரப்பப்படுகின்றது என தனது கருத்தினையும் கூறியிருந்தார். சமூகமளித்திருந்த நேயர்கள், உறுப்பினர்கள், யாவரும் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து அனைவருடைய ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி தமது பங்களிப்பையும் நல்குவதாகக் கூறியிருந்தார்கள்.
அவுஸ்திரேலியாவில் வானமுதத்தின் சேவையைத் தொடர்ந்து வளர்க்கவும், மெல்போர்ணில் தமிழ் பேசும் மக்களின் மொழி, கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கும் விற்றில்சீ தமிழ்ச் சங்கம் வளரவும்,  தொடர்ந்து அதன் பணி மூலம் அனைத்து மக்களும் பயன் பெறவும் வாழ்த்தினார்கள்.
இறுதியாகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சமூகமளித்த அகைவருக்கும் நன்றியுரை கூறினார். ஆண்டுக் கூட்டத்தின் முடிவில் சிற்றுண்டிகள், தேநீர் வழங்கப்பட்டன.
அத்துடன் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினர் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களின் ஆதரவையும் நாடி  நிற்கின்றனர். விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தில் இணைய விரும்புபவர்கள் அதன் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.


P.O.Box 93, Thomastown.Victoria-3074.Australia.
vaanamutham@hotmail.com
விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் இனிதே நிறைவேறியது. வாழ்க தமிழ்.