அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்துஅவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புடையதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிட்னி பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 21 வயதான தக்சன் செல்வராஜா என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரின் வீசா இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளருக்கு தற்காலி வீசா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டக் காரணத்தினால் வீசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது  நன்றி வீரகேசரி 
.