சிட்னியில் உலகத் தமிழ் மாநாடு





பார் புகழ் தமிழகத்தின், உலகத் தமிழ்ச் சங்கமும், ஆர்வமோடு தமிழ்வளர்க்கும் ,சிட்னியின் தமிழ் இலக்கியத் தமிழ் மன்றமும் இணைந்து, 2013 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 06 ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 07 ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 08 ஆம் தேதியும் - ஆக மூன்று  நாட்களில் தமிழ் மாநாடு ஒன்றை நடத்த உள்ளது.

உலகத் தமிழர்களை ஒன்று படுத்தி
உலகப் பொதுமறையை மேன்மைப் படுத்தி
உலகோர்க்குத் தமிழ் இலக்கிய நயம் கூற
உன்னத  மாநாடொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்

எந்நாட்டார்க்கும், எம்மொழியார்க்கும், எவ்வினத்தார்க்கும், எம்மதத்தார்க்கும் பயன்படும் வகையில் , வாழ்க்கை நெறிமுறைகளை, நீதிக்கருத்துகளை எடுத்துரைத்த வள்ளுவப் பெருந்தகைக்கு, சிலை ஒன்றும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மாநாட்டில்,
கருத்தரங்கம் அறிவுக்கு விருந்தளிக்கும்
இசையரங்கம் செவிக்கு விருந்தளிக்கும்
நடன அரங்கம் கண்ணிற்கும் காதிற்கும் விருந்தளிக்கும்
பட்டி மன்றம் தமிழர்களைத் தட்டி எழுப்பும்
கவியரங்கம் நயங்கள் பலவற்றைக் கொட்டி முழக்கும்!

மாநாட்டில் 
சான்றோர்களும், ஆன்றோர்களும், பேராசிரியப் பெருமக்களும், கவிஞர்களும், பல்துறை வித்தகர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டு மாநாட்டைச் சிறப்பிக்க உள்ளனர்.

தமிழின் சிறப்பை , தமிழ் இலக்கியங்களின் சிறப்பை, தமிழர்களின் சிறப்பை, தமிழர்களின் பண்பாட்டைப் பறை சாற்றும் அளவில் பொருட்காட்சி ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் தமிழ் நெஞ்சம் கொண்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். அறிவுசார் ஆலோசனைகள் கூறலாம். 
ஆர்வம் கொண்டோர்  நிகழ்ச்சிகளில் பங்கு பெறலாம்.

அனைவரும் வருக! தமிழமுதம் பெறுக!!