தீவிர சிகிச்சைப் பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன்

.

TMSதிரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

___________________________________________________________________________________________________________