அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற தேசிய தமிழின அழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள்


"வன்னிப் பேரவலத்தின் நினைவுகளை " மே மாதம் 18ம் திகதி புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கடந்த 2009ம் ஆண்டு மேமாதத்தில் நிகழ்ந்த பேரழிவை நினைவுகூரும் 4ம் ஆண்டு நிகழ்வுகள் நடைபெற்றன. அந்தவகையில் இந்நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை (18–05-2012) அவுஸ்திரேலிய மெல்பேண் நகரில் அவுஸ்திரேலியாவின் தமிழர் அமைப்புக்கள் சார்பில் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவால் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மரணித்துப்போன எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்தி குரலடங்கிப்போயுள்ள தாயக மக்களின் குரலாக, பல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் கடும் குளிர் மழையிலும் பெருமளவில் திரண்டு வந்து, இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.