.
நமது westmead parramatta நிருபர்
The Hill Holroyd Parramatta Migrant Resource Center குடும்ப வாழ்வை வளம்படுத்த, புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி அவர்களின் பிரச்சினைகளில் பங்கு கொண்டு கை கொடுக்கவே இந் நிகழ்ச்சியை நடத்தியது. அதனால் அன்பு வாழும் இல்லமே “அன்பு வாழும் கூடு” என்பது அதன் தலைப்பாக அமைந்தது.
Conscila.Jerome மிகச் சுருக்கமாக அழகாக வந்தோரை வரவேற்றார்.தமிழருக்கு என்றும் உதவும் (Federal Member Of Parliament) Julie.Owens, ( Executive Director THHPMRC) Melissa.Monteiro தமிழர் பிரதி நிதியான (Holroyd city councilor) வசி(வசீகரன்.ராஜதுரை) ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
படபிடிப்பு : கலை
மண்டபம் நிறைந்த கூட்டம்! குடும்பம் குடும்பமாக,சிறுவர்களுடன் வந்தது தமிழ் குடும்பங்களின் நலனுக்காகவே நடக்கும் நிகழ்ச்சி என்பதை எம்மவர் மனதார வரவேற்பதாகத் தெரிந்தது.
சம்பிருதாயமான பேச்சுக்களின் பின் அருட்தந்தை ஜோன்.ஜெகசோதி அவர்கள் புலம்பெயர்ந்து வந்து புதிய நாட்டில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் பற்றி விளக்கி அதே சமயம் Migrant Resource Center எவ்வாறு உதவுகிறது,மேலும் எவ்வாறு உதவும்,என விளக்கமாகக் கூறினார்.
எமக்கு பிரச்சினைகள் வருமானால் புதிய இடத்திலே கை கொடுக்க; ஆறுதல் தர; நாம் இருக்கிறோம் என மக்களுக்கு அறியத் தரும் ஒரு அறிமுக நிகழ்ச்சியே இது.வந்தோரை வரவேற்போம்,வளமான வாழ்வு வாழ உதவுவோம் என்பதை இனிய தமிழிலே நம்பிக்கை ஊட்டும் படியாகப் பேசினார்.
பேச்சுக்களை அடுத்து சிறிமதி. கார்த்திகா கணேசர் அவர்களின் மணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.மூன்று வேறுபட்ட சுவைகள் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒருங்கே விருந்தாக அமைந்தன.அதிலும் குறிப்பாக தலையில் செம்பு வைத்தபடி தாம்பாளத்தில் நின்றவண்ணம் ஆடிய குச்சுப்புடி நடன வடிவத்தில் அமைந்த கண்ணனின் தாண்டவம் சபையோரை மெய்சிலிர்க்க வைத்தது.
‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
தேனருவித் திரை எழும்பி வான் வெளி ஒழுகும்
செங்கதிரோன் பரி காலும் தேர் காலும் வழுகும்”
என குறத்திகள் நடனம் ஆடியபோது கால்களின் கீழே பரிகள் (குதிரைகள்) கால்கள் வழுக்கி நாம் எல்லாம் விழுவதைப் போல ஒரு பிரமை!
நம்முடய பாரம்பரிய நடனங்களை மாத்திரமல்லாது ஏனைய பண்பாட்டில் உள்ள நடனங்களையும் அழகுகளையும் யுக்திகளையும் பயன்படுத்தி அதனைத் தமிழுக்கும் தமிழருக்கும் செம்மையுற அறிமுகம் செய்யும் கார்த்திகா கணேசர் நிச்சயமாகப் பாராட்டப் படவேண்டியவர்.
படபிடிப்பு : கலை
அடுத்ததாக ராஜயோகனின் பிரபல சகாரா இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி செவிக்கு விருந்தாக அமைந்தது. நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியாக அது இருந்தது.இந்த மண்ணிலே பிறந்து வளர்ந்த பல இளம் கலைஞர்களும் நிகழ்ச்சியில் இனிமையாகப் பாடினார்கள். புதிய மண்ணிலே பிறந்த பயிர்களும் பாரம்பரியத்தின் மரபு குன்றாது வளர்வதைக் கண்டு மகிழ்ந்தோம்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்(ATBC) தயாரிப்பாளரான ஏ.ஜே.ஜெயச்சந்திராவும் கொன்சிலாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.அதே ATBC யில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் கலைத்தம்பதியினர் சோனாவும் பிரின்ஸ் உம் பாடினார்கள்.இவர்களோடு இளங் கலைஞர்களான அபிஷாயினி.பத்மசிறி, ஸ்ரீபைரவி.மனோகரன், கவிதா.போல், பானு போல் ஆகியோர் தம் தேன் குரலால் சபையோரை மகிழ்வித்தனர்.பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தது..அனுபவித்து அவர்கள் அதனைப் பாடிய போது சபையோரும் தேனாற்றில் மூழ்கித் திளைத்தனர். அவர்கள் பாடியதைப் போல ஒளிமயமான எதிர்காலம் அவர்களுக்கு இருப்பது நம் உள்ளத்தில் தெரிகிறது. வளர வாழ்த்துக்கள் கலைஞர்களே! ஆனால் நேரத்தை மனதில் கொண்டு பாடல்களைக் குறைத்திருக்கலாம்.
அடுத்ததாக கொன்சிலா தமிழ் சமூகப் பிரச்சினைகள்,உதவிகள் அனைத்திலும் கைகொடுக்கும் சகாக்களான யசோதா.பத்மநாதன், பவானி லோகன் ஆகியோரை எமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அதைத் தொடர்ந்து யசோ.நாதன் நன்றியுரை வழங்கினார்.அவர் நன்றியுரையின் ஆரம்பமே சமூகத்தில் அவர்கொண்ட அன்பை அக்கறையைக் காட்டியது. இரவு 9.30 மணியாகியும் உணவு பரிமாறப்படாமல் காக்க வைப்பதற்கு தன்னை மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டார்.அவ்வாறு கூறியது அன்றய நிகழ்ச்சி மக்கள் பால் அன்பு கொண்டு கைகொடுக்க உதவும் நிறுவனம் நிஜமாகவே எம்மில் அக்கறை கொண்டோரை எமக்காக உதவ நியமித்துள்ளது என்ற நம்பிக்கையை வளர்ப்பதாக இருந்தது.
அதையடுத்து இரவுணவு பரிமாறப்பட்டு பல்சுவை பழக்கலவையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.கண்ணுக்கும் கருத்துக்கும் மனதுக்கும் அன்பினையும் நம்பிக்கையினையும் மகிழ்ச்சியையும் ஊட்டிச் சென்றது “அன்புவாழும் கூடு”
7 comments:
தமிழருக்கு பல சேவைகள் அரசாங்கத்தினால் தமிழிலேயே வழங்கப் படுகின்றன என்ற செய்தியையும் அறிய முடிந்தது.இவை பற்றி பலருக்குத் தெரியாது.
கொன்சலா அவர்களுடய சேவையையும் திறமையையும் கூட அன்றய நிகழ்வில் காணமுடிந்தது.அன்றய நிகழ்வின் சிறந்த நிர்வாகியாக அவர் மிளிர்ந்தார்.
தமிழருக்கு அவரது சேவை தேவை.தொடரட்டும் அவரது பணி.
சக்தி.
கொன்சலா, யசோதா.பத்மநாதன், பவானி லோகன் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் ஜயம் இல்லை. தமிழர்களுக்கு தங்களால் முடிந்ததை செய்யும் அவர்களின் திறமையை பாராட்டுகிறேன். நல்ல உணவு அருமையான நாட்டிய நிகழ்வு கார்த்திகா பாராட்டுக்கள். இனிமையாக இளம் பிள்ளைகள் தந்த பாடல்கள் நன்று நன்று நன்று. தெளிவான படங்களுடன் நல்ல பதிவை தந்த பத்திரிகைக்கும் நன்றி. வாழ்க உங்கள் சேவை.
செந்தில்நாதன்
இலவச சாப்பாடு நல்ல பொழுதுபோக்கு தொடர்ந்தும் நடத்துங்கோ எங்களையும் மறக்காமல் அழையுங்கோ கட்டாயம் வருவோம்.மறக்காமல் கூப்பிடுங்கோ.
It is a good programme and people are doing good job. Well done. The music group shoul reconsider their singers. The younger generation is doing their best and they need the stage not the ones who sing through their nose. They have to get genuine opinion from other people and kindly give the chances to the people who can sing well. People are there to enjoy the night not to get sick of it and leave the place. I am not trying to hurt any one's feeling here but trying to explain the changes we get when we grow older , our voice changes and we can't sing high pitch songs , so we have to use nasal sound which is not good for stage performance.
[quote]குடும்பம் குடும்பமாக,சிறுவர்களுடன் வந்தது தமிழ் குடும்பங்களின் நலனுக்காகவே நடக்கும் நிகழ்ச்சி என்பதை எம்மவர் மனதார வரவேற்பதாகத் தெரிந்தது[quote]
மண்டபத்தில் கூடி நன்றி சொன்னால் மட்டும் போதாது....கிரிகட் விளையாட்டு மைதானத்திலும் அவுஸ்ரேலியா கொடியை உயர்த்தி பிடித்து நன்றி செலுத்த வேண்டும் அப்பதான் பலருக்கு புரியும்
Thank you for the beautiful comments.
The Hills Holroyd Parramatta Migrant Resource centre seeking your continuous suppot to do more to our Tamil Community.
We are there. we will come to you with our service in future through "Tamil Murasu".
Be with us
Conscila (Mathubala), Yasotha and Bawani
Post a Comment