பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மறைவு

தமிழ்திரையுலகில் எம்.ஜி.ஆர் - சிவாஜி முதல் சிம்பு - தனுஸ் வரை நான்கு தலைமுறை நடிகைகள், நடிகர்களுடன் நடித்துள்ள பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி இன்று (20.02.2012) காலமானார்.

தமிழ், தெலுங்கு என 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். அண்மையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.என். லட்சுமி இன்று தனது 85 ஆவது வயதில் காலமானார்.சென்னை சாலி கிராமத்தில் இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இவரது இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நடைபெறவுள்ளது.

எஸ்.என். லட்சுமியின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவிப்பதுடன் அன்னாரது பூதவுடலுக்கும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்!

No comments: