சிட்னியில் நடந்த நா.மகேசனின் நூல் வெளியீடு



. நமது   ஹோம்புஷ் நிருபர்
                                 

வானொலிமாமா என அன்போடு அழைக்கப்படும் நா.மகேசன் அவர்களின் இரண்டு நூல்களான கேதீசர் முதுமொழி வெண்பா, மற்றும் குறளில் குறும்பு ஆகியன சென்ற சனிக்கிழமை 25.02.2012 அன்று மாலை 6.00 மணிக்கு ஸ்ரத் பீல்டில் அமைந்திருக்கும் யுனைட்டிங் சேர்ச் மண்டபத்தில் அவுஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவில் இடம்பெற்றது.







அவுஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல வாரங்களாக திருக்குறள் விளக்கு என்ற நிகழ்வில் ஒலித்தவற்றை தொகுத்து  இ ரு புத்தகங்களாக வெளியிட்டார் நா.மகேசன் அவர்கள்.            அவுஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திரு ஈழலிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.பொ, திரு.ம.தனபாலசிங்கம், திரு.திருநந்தகுமார், சவுந்தரி கணேசன் ஆகியோர் உரையாற்றினார்கள் பதிலுரை திரு.நா.மகேசன் அவர்களால் வழங்கப்பட்டது.





தலைவர் தனது உரையின்போது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அதில் ஒலிபரப்பாகிய நிகழ்சிகளைப் பதிவு செய்து வெளியிடப்படும் இரண்டாவது புத்தகமாக இது உள்ளது. இது ஒலிப்பரப்படும் நிகழ்சிகள் தரமானவை ஆவணப்படுதப்பட வேண்டிவை அறிவு பூவமானவை என்பதற்கு ஆதாரமாக அமைகின்றது.
10 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபம் இதனை ஒரு சாதனையாகவே கருதுகின்றது என்று குறிப்பிட்டார்.
நிகழ்வு இனிதாக நிறைவேறியது.
.



 படப்பிடிப்பு சோதிராஜா 







1 comment:

Anonymous said...

மகேசன் ஐயா அவர்களுடைய தமிழ் - சமயப்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். விழா எடுத்த அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தாருக்கு பாராட்டுக்கள்...ஹோம்புஷ் நிருபர் தமிழைப் பிழையற எழுத வேண்டுதல்கள். நன்றி.