ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை போட்டிகள் லண்டனில் தொடங்கியது
கிரேக்கத்துக்கு கடன் உதவி வழங்க யூரோ நிதி அமைச்சர்கள் இணக்கம்
அமெரிக்காவில் இரு உலங்குவானூர்திகள் மோதல்: 7 கடற்படையினர் பலி _
ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை போட்டிகள் லண்டனில் தொடங்கியது
Tuesday, 20 செப்டம்பர் 2011
லண்டன்: ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை போட்டிகள் லண்டனில் தொடங்கியது.இதில் கடந்த வாரம் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிவெற்றிகரமாக நடந்துள்ளது.லண்டனில் 30 ஆவது ஒலிம்பிக் போட்டி,வரும் 2012 இல் நடக்கவுள்ளது.இதற்கான புதிய கட்டுமாணப்பணிகள் ஒவ்வொன்றாக முடிந்து வருகின்றன.இவற்றில் சோதனை போட்டிள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு ஒலிம்பிக் தொடங்கிவிட்டது போன்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக லண்டன் ஹார்ஸ் கார்ட் பரேட் என்ற கடற்கரை கரப்பந்தாட்ட மைதானம் தயாரானது.இதில் சர்வதேச அணிகள் பங்கேற்ற கடற்கரைக் கரப்பந்தாட்டச் சோதனை தொடர் சமீபத்தில் நடத்தப்பட்டது.இதில் ஸ்பெயின் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த 24 பெண்கள் அணிகள் பங்கேற்றன.
ஆறு நாட்கள் நடந்த இத் தொடர் போட்டி நடத்தும் நிர்வாகிகளுக்கு 2012 ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக நல்லஉதவியாக அமைந்தது.இதேநேரத்தில் லண்டனில் நடந்த கலவரம் காரணமாக அவ்வப்போது பொலிஸார் ரோந்து வாகனங்களில் "சைரன்' எழுப்பிய ஒலி ஹெலிகொப்டர் சப்தங்களால் தொல்லை இருந்தது அப்படி இருந்தும் சராசரியாக 1,500 பேர் போட்டியை கண்டுகளித்தனர்.
தவிர இம்முறை ஒலிம்பிக் தொடரின் போது இந்த போட்டிக்கு அதிக பார்வையாளர்களை கொண்டு வருவதில் நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர்.எப்படியும் 15,000 பேர் வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இதில் வீராங்கனைகள் அணிந்து விளையாடும் உடைகள் சர்ச்சைக் குரியதாக இருந்தாலும் இதுதான் பார்வையாளர்களை ஈர்க்கிறது.சர்வதேச கரப்பந்தாட்ட கூட்டமைப்பின் இயக்குநர் ஆங்கிலோ ஸ்கியோ கூறுகையில்; வீராங்கனைகள் அவர்களாகத்தான் பிகினி உடையை தேர்வு செய்கின்றனர்.அவர்கள் விரும்பினால் முழு நீளக் காற்சட்டை அணியலாம்.சில இஸ்லாமிய நாடுகள் முழுநீள ஆடைகள் அணிந்து விளையாடுகின்றனர்.ஆனால் இந்தவிளையாட்டினை பொறுத்தவரையில் பிகினி தான் சிறந்த ஆடை என்றார்.
வெற்றி மகிழ்ச்சி
இத் தொடர் குறித்து இங்கிலாந்து கடற்கரைக் கரப்பந்தாட்ட அணியின் டெனிஸ் ஜோன்ஸ் லூசி பவுல்டன் மகிழ்ச்சி தெரிவித்தார். சர்வதேச தரவரிசையில் 9 ஆவது இடத்தில்இருக்கும் இந்த ஜோடி சோதனை போட்டியில் பெய்ஜிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சீன ஜோடியை வீழ்த்தினர்.
இது குறித்து டெனிஸ் ஜோன்ஸ் கூறுகையில்;
இதுவரை விளையாடிய தொடர்களில் இதுதான் சிறப்பானதாக இருந்தது.பின் வெண்கலப் பதக்கத்தை கோட்டை விட்டாலும் இத்தொடர் அதிக உற்சாகம் தந்தது என்றார்.மற்றொரு வீராங்கனை லூசி கூறுகையில்;
போட்டிக்கு அதிக ரசிகர்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.இவர்கள் கொடுத்த ஆதரவினால் தான் இந்தளவுக்கு வெற்றி பெற முடிந்தது.அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் போது முழுத்திறமையை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
நன்றி தினக்குரல்
கிரேக்கத்துக்கு கடன் உதவி வழங்க யூரோ நிதி அமைச்சர்கள் இணக்கம்
- Wednesday, 22 February 2012
பாரிய கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கும் கிரேக்கத்துக்கு 130 பில்லியன் யூரோ கடன் வழங்குவதற்கு யூரோ வலய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் கிரேக்கத்துக்கு இரண்டாவது கடன் ஒதுக்கீட்டினை வழங்குவதற்கே யூரோ வலய நிதிஅமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.
பிரசெல்ஸில் யூரோ வலய நிதி அமைச்சர்களுக்கிடையில் 13 மணித்தியாலங்கள் இடம்பெற்ற பேச்சுகளை தொடர்ந்தே 130 பில்லியன் யூரோவை கடனாக வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
முதிர்ச்சி அடைந்த கடன்களை கிரேக்கம் திருப்பி ஒப்படைக்கும்போது ஏற்படும் பற்றாக்குறையினை தவிர்த்துக் கொள்வதற்காகவே கிரேக்க அரசுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது.
இதற்குப் பதிலாக 2020 இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 வீதத்திற்கும் அதிகரிக்காதளவிற்கு கிரேக்கம் தமது கடன் மட்டத்தினை பாதுகாக்கவேண்டிய தேவை உள்ளது.
இந்நிலையில் யூரோ வலய நிதி அமைச்
சர்களால் கைச்சாத்திடப்பட்டிருக்கும் கடன்உடன்படிக்கையானது செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டிருப்பதுடன் கிரேக்கத்தின் கடன் நெருக்கடியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்குமெனவும் யூரோ வலயத்தில் கிரேக்கத்தின் எதிர்காலத்தினை உறுதிப்படுத்துமெனவும் யூரோ வலய நிதிஅமைச்சர் குழுவின் தலைவர் லக்ஸம்பேர்க் பிரதமர் ஜீன் கிளௌட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

| ||||||||
கடற்படையின் பறக்கும் பிரிவைச் சேர்ந்த கோப்ரா மற்றும் ஹ்யூ ரக உலங்கு வானூர்திகள் ஜுமா நகரின் அருகில் இராணுவப் பயிற்சியை மேற்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நடந்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்தது. இவ்விபத்து ஜுமா பயிற்சி வளாகத்திலிருந்து தொலைதூரத்தில் நடந்துள்ள அதேவேளை விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை பல வழிகளில் இடம்பெறுகிறது. கடந்த செப்டெம்பரில் கலிபோர்னியாவில் ஓர் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் இரு கடற்படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ___ n |
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment