கறுப்பு ஜுலை மாதத்தில் இரத்த தானம்

.
இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது. அந்த வகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் இறுதி நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும், அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் நடைபெறும் “இரத்த தானம்”, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.30 மணிவரை Mt Waverly, Blackburn வீதியில் Pinewood Shopping centre,இல் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்தவங்கி ஊடாக இரத்ததானம் வழங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது”. இப்புனிதகொடைக்கு உதவ முன்வரும் கொடையாளிகள் தயவுசெய்து உங்கள் பெயர்களை முன்கூட்டியே 0414 185 348 அல்லது 0413 506 183 எனும் இலக்கத்திலும் தொடர்பு கொண்டு பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தனிப்பட்ட முறையிலும் இந்நிகழ்வுகளைப் பற்றி தெரிந்த உங்கள் உறவுகளிற்கு தெரியப்படுத்தி கறுப்பு ஜுலை நினைவாக நடைபெறும் 15வது இரத்த தானம்(6th August) நிகழ்விலும் பங்கெடுத்து கொள்ளுவதோடு, தாயகத்து தமிழ் மக்களின் தற்போதைய துயர்நிலை அறிந்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முன்னெடுத்திருக்கும் மனிதாபிமான சேவைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி தாராளமனதுடன் நிதிப் பங்களிப்பால் துயர் துடைக்க முன்வருமாறு பணிவன்புடன் அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.

தொடரும் எம் உறவுகளின் அவலநிலையை வெளிப்படுத்தியும், புலம்பெயர்ந்த அவுஸ்திரேலிய மண்ணிற்கு எமது அன்பை வெளிப்படுத்தியும் குருதிக்கொடை கொடுப்போம்!!!

“எம் குருதியால் நனைந்த கறுப்பு ஜுலையை குருதிக்கொடையினால் நினைவு கொள்வோம்”

கடந்த 22 வருடங்களாக இடம்பெற்ற மனிதாபிமான சேவைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து அன்பளிப்பாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றனர். நன்றி.

No comments: