போரின் கொடுமையில் -ஆவூரான்

.


பசிக்கு சோறில்லை

பார்க்க ஆளில்லை

குடிக்க கூழில்லை

படிக்க முடியல்லை

வன்னி மண்ணில

வாழ வழியில்லைபோரின் கொடுமையில்-மண்

வீழ்ந்து கிடக்கு

வீடு குளங்களும்

அழிஞ்சு போச்சுபுலம்பெயர்ந்து போனவர்

வந்து போகிறார்-சிலர்

அள்ளிக் கொடுத்துமே

அரவணைக்கிறார்பார்த்துப் பார்த்துமே

பரிதவிக்கிறார்-சிலர்

அரவணைப்பாதாய்

அள்ளிப் புளுகிறார்வெயில் காலமாம்

விடுமுறைக்கு வருகிறார்

காட்சிப் பொருளாக-எமை

கண்டு கழிக்கிறார்அன்னையும் இல்லை

தந்தையும் இல்லை

அனாதை என்ற பெயர்

சூட்டி அழைக்கிறார்போரின் கொடியரை

அணுகி வாழ்வதா

போனவர்களை

நினைத்து அழுவதா

பாம்பின் வாலென்று-எதனை

பார்ப்பது-மீனின்

தலை என்று –எதனை

ஏற்பது-எங்கள்

இழிநிலை எங்கு உரைப்பது.

எவர் வந்து எமக்கு

வாழ்வு தருவரோ.....கவிஞர் ஆவூரான்.

No comments: