அன்னமும் அறமும் - அப்துல்காதர் ஷாநவாஸ்

.


இன்னும் குளிர்கிறது அம்மா ஊட்டிய பழஞ்சோறு என்ற கவிதையைப் படித்தவுடன் அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கைகள் நினைவுக்கு வந்தனஅத்துடன் சில நேரங்களில் ‘‘அன்னமுகம்மதுவை’’கீழே சிந்தாமல் சாப்பிடு என்று அந்தக் கைகள் அடித்ததும் நினைவுக்கு வந்ததுஉணவை அன்ன கோசம் என்றும் சொல்கிறார்கள்உணவு உண்டு விட்டு எழுந்திருக்கும்போது பருக்கைகள்’ சிந்தாமல் இருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் சிலருக்கு அனிச்சைச் செயல்ஆனால் உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் உண்ணப்படாமலேயே வீணாகின்றன என்கிறது புள்ளிவிபரங்கள்.

6.7 பில்லியன் மக்கள் தொகை 2050ல் 9 பில்லியனாக மாறும்போது 21-ஆம் நூற்றாண்டின் மிகச் சிக்கலான பிரச்சினையாக உணவுப் பங்கீடு ஆகப் போகிறது என்று எச்சரிக்கிறார்கள்கொஞ்ச காலமாகக் குறைந்துவரும் குழந்தைப் பிறப்பு விகிதம் 2050 க்கு பிறகு இன்னும் குறைய ஆரம்பிக்குமாம்.அது ஓரளவு உணவுப் பங்கீட்டு முறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று எடுத்துக் கொண்டாலும் 2.5 பில்லியன் மக்கள் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடும் நாடுகளில் பிறப்பார்கள் என்றும் அதனால் இது மேலும் சிக்கலாவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
2005-ல் அனைவருக்கும் உணவு என்ற திட்டத்தை 1996-களில் அறிவித்த உலக உணவு நிறுவனம் அதை இதுவரை நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் இன்றைய நிலைவளர்ந்த நாடுகள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கும்வணிக வாய்ப்புகளுக்கும் மற்ற நாடுகளில் தங்களுடைய மிதமிஞ்சிய உற்பத்திப் பொருட்களைத் திணிப்பதற்கும் பயன்படுத்துகின்றன.இந்த சூழ்நிலையில் தட்டில் மிச்சம் வைத்துவிட்டுச் செல்வதைக் கௌரவமாக நினைக்கும் மனிதர்கள் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றனஇங்கிலாந்தில் தினந்தோறும் 4.4 மில்லியன் ஆப்பிள்களைத் தூக்கி எறிகிறார்கள்40 சதவீதம் காய்கறிகள் சமைக்கப்படாமல் குப்பைத் தொட்டிக்குப் போகின்றனஒவ்வொரு நாடும் தோராயமாக இதே மாதிரி புள்ளிவிபரங்களைக் கொண்டுள்ளனசிங்கப்பூரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தினமும் 400 கிலோ மிஞ்சிய உணவுப் பொருட்களும் அங்காடி உணவுக் கடைகளில் 500 கிலோவும் குப்பைத் தொட்டியில் விழுகின்றனசராசரியாக ஒரு நபர் 860 கிராம் குப்பையைப் போடுகிறார்அது வருடத்தில் சுமார் 300கிலோ குப்பையாக உருவெடுக்கிறதுNEA புள்ளி விபரங்களின்படி 58 சதவீதக் குப்பைகள் மறுபயனீடு செய்யப்படுகின்றன2030க்குள் இது 70 சதவீதமாக உயர்த்த திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.
புள்ளிவிபரங்களைத் தருவது இருக்கட்டும்களத்தில் இறங்கி சில செய்திகளின் பின்னணியை BBC ஆராய்ந்த பல விஷயங்களில் குப்பைத் தொட்டிக்குச் செல்லும் உணவுப் பொருட்கள் உயிர்ப்புள்ள சாப்பிடத் தகுந்த உணவுகள்தான் என்று நிரூபிக்க the great british waste menu என்று பெயரிட்ட நிகழ்ச்சியை சென்ற மாதம் ஏற்பாடு செய்ததுஅதில் மிகச் சிறந்த 4 சமையல் நிபுணர்கள் பங்கேற்றனர்லண்டன் கவுன்சிலில் தூக்கி எறியப்பட்ட உணவுப் பொருட்கள்இரண்டு நாட்கள் காலாவதியானவை என்று தூக்கி எறியப்பட்ட காய்கறிகள்சூப்பர் மார்க்கெட்டில் பயன்படுத்த முடியாதவை என்று தூக்கிப் போடப்பட்ட உணவுப் பொருட்கள் இவைகளைத் தரம் வாரியாகப் பிரித்தெடுத்து உணவு சுகாதார பராமரிப்பு நிலையத்துக்குக் கொண்டு சென்று பரிசோதித்து 100 சதவீத கிருமிகள் தொற்று தாக்காத உணவுப் பொருட்கள் என்று முத்திரை இடப்பட்டவுடன் உணவைத் தயாரித்தார்கள்இதில் மீன் வகைகளும் அடக்கம்.உணவு மிகவும் சுவையாக இருந்ததாகஉணவுப் பொருட்கள் எங்கிருந்து வந்தன என்ற விபரங்கள் தெரியாதவர்கள்,தெரிந்தவர்கள் அனைவரும் புகழ்ந்தனர்இப்படி வருடத்திற்கு 2 பில்லியன் உணவுப் பொருட்கள் குப்பைக்குப் போவதைத் தடுத்து ஆப்பிரிக்க தேசங்களுக்கு அனுப்பி வைத்தால் அங்கு பஞ்சம் என்ற வார்த்தையே அழிந்துவரும் என்று முத்தாய்ப்பாக முடித்தார்கள்.
உலகிலேயே அமெரிக்கா மிகப் பெரிய உணவுக் கொடையாளிஆனால் அதில் சில அறங்கள் இருக்கின்றனதன்னிடமுள்ள மிதமிஞ்சிய உணவுகளை ஏழை நாடுகளுக்குத் தருகிறது2002 ல் ஜாம்பியாமரபணு மாற்றப்பட்ட கொடையாகக் கொடுக்கப்பட்ட உணவை மறுத்து திருப்பி அனுப்பியதுஅமெரிக்க அதிகாரி சொன்னார்‘‘பிச்சைக்காரர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை’’ என்று2007 க்கு முன்பு 10 லிருந்து 20சதவீகிதமே தங்கள் வருமானத்தில் உணவுக்காகச் செலவிடப்பட்ட மேலை நாட்டவர் தற்போது கூடுதலாகச் செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்ஆனால் ஏழை நாடுகளில் வருமானத்தில் உணவுக்காக 80 சதவீதம் செலவழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
எக்கானமிஸ்ட் தலையங்கத்தில் ‘‘மலிவான உணவுக் காலங்கள் திரும்ப வருவது இனி சாத்தியமில்லை’’ என்று தலையங்கம் எழுதுகிறதுகோதுமை,மைதாஅரிசி விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்த பின்பு உணவுக்கான போராட்டங்கள் பல ரூபங்களில் கம்போடியாகேமரூன்,எத்தியோப்பியாஹோண்டுராஸ்இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பரவ ஆரம்பித்துவிட்டனஎகிப்தின் போராட்டமே கூட ‘‘நாங்கள் பட்டினி’’ என்ற வாசகத்துடன் மூர்க்கமாக நடந்து முடிந்தது.
.நாசபையின் கணக்குப்படி தினந்தோறும் உணவுப் பற்றாக்குறையால்25,000 பேர் மடிகிறார்கள்854 மில்லியன் மக்கள் அது தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறதுஆனால் அதே நேரத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறதுபெட்ரோல் போடும்போது ‘‘ஷாப்பிங்’’ பண்ணுவதற்கு ஏற்ற கடைகள் சிங்கப்பூரில் வந்துவிட்டன1980களில் பிரிட்டனில் தாட்சர் ஆட்சிக் காலத்தில் வேகமெடுத்த சூப்பர் மார்க்கெட் கலாச்சாரம்மின்சார சாதனங்கள்,துணிகள்பெட்ரோல் என விற்றுக் கொண்டிருந்துவிட்டு இப்போது டிரைகிளீனிங்கண்சோதனைகாரை இன்சூரன்ஸ் பண்ணுவதுவளர்ப்புப் பிராணிகளுக்கு இன்சூரன்ஸ் இப்போது உங்கள் உயிலைக் கூட ஷாப்பிங் மாலில்’’ எழுதிக் கொள்ளலாம்அத்துடன் ‘‘அங்காடி உணவுகள்’’பக்காவாக மடிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளனசாண்ட்விச்சுட்ட தூனா மீன்கள்பொரித்த கிழங்கு வகைகள்கடல் உணவுகாக்டெய்ல் என்று அடுக்கி வைத்திருக்கிறார்கள்நிச்சயமாக ஒரு நாளில் இவை போனியாகாதுநான் அங்குள்ள மேலாளரிடம். "நாளை மிச்சமிருந்தால் ‘‘என்ன செய்வீர்கள்’’ என்று கேட்டேன்தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னார்சில கடைகள்தான் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளன.
என் கடையில் வேலை செய்யும் பெரியவர் சாப்பிட்டு தட்டையை சுத்தமாகக் காலி செய்துவிட்டு ஐந்து விரல்களையும் வாயில் வைத்து சூப்பி எடுப்பது பார்ப்பதற்குக் கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும்.ஆனால் உணவை வீணாக்கக் கூடாது என்பதில் அவருக்குள்ள அறச் சிந்தனை மிகவும் போற்றுதற்குரியது.
இரவு 10 மணிக்கு மேல் போடும் பரோட்டா சில சமயங்களில் மிஞ்சி விடும்அடுத்த நாள் வைத்திருக்கக் கூடாது என்பது என்னுடைய அறம்.பெரியவர் வீட்டில் பெரிய குடும்பம்நான் அவரிடம் பரோட்டா மிஞ்சிப் போன ஒரு நாளில் "பரோட்டா மிஞ்சிவிட்டதுபிள்ளைகளுக்கு எடுத்துச் செல்லுங்கள்" என்றேன்அவர் சொன்னார். "தப்லே அபாங் இன்றைக்கு நான் எடுத்துப் போய்விடுவேன்நாளை அத்தா மீந்துபோன பரோட்டா நிச்சயம் கொண்டு வருவார்கள் என்று அவர்கள் எண்ண இடம் கொடுக்கக்கூடாதுஅத்துடன் உங்கள் கடையில் வேலைபார்க்கும் என் மனதில் இன்று பரோட்டா மிஞ்ச வேண்டும்பிள்ளைகளுக்கு எடுத்துப் போகலாம் என்ற எண்ணம் வர ஆரம்பித்துவிடும்தோம்பில் போட்டு விடுங்கள்சுக்குர் செய்யுங்கள் ’’ என்றார்.
அவருடைய அறம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.
Nanri:uyirmmai.com 

No comments: