ஜப்பானை கடுமையாகத் தாக்கியுள்ள ஆழிப்பேரலை!

.


வெள்ளி, மார்ச் 11  ம் திகதி  ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து ஆழிப்பேரலை (சுனாமி) உருவாகியுள்ளது.

8.9 ரிச்டர் அளவில் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஆழிப்பேரலைகள் உருவாகியுள்ளது


.

கட்டிடங்கள், வாகனங்கள், கப்பல்கள் போன்றன அடித்துச் செல்லப்பட்டுள்ளன என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதன. ஆழிப்பேரலை 10 மீற்றர் உயரத்திற்கு மேலெழுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றன.

ஜப்பான் சுனாமிக்கு அங்குள்ள சென்டாய் நகரம் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய துறைமுக நகரான இங்கு 10 லட்சம் பேர் வசித்து வந்தனர்.


அவர்களில் இப்போது எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமானோர் சுனாமிக்கு பலியாகி உள்ளனர்.

பூகம்பம் ஏற்பட்டு அடுத்த சில வினாடிகளிலே இங்கு சுனாமி தாக்கி விட்டது. இதனால் மக்களால் சுதாரித்து தப்பிக்க கூட முடியவில்லை.

இந்த நகரில் பெரும்பாலான வீடுகள் பூகம்பத்தை தாங்கும் திறன் கொண்டதாகவே கட்டி இருந்தனர். ஆனால் பெரும் சக்தியுடன் தாக்கிய சுனாமி அந்த வீடுகளை அப்படியே பெயர்த்து எடுத்து தரைமட்டமாகி விட்டது.

இங்குள்ள பெரும்பாலான வீடுகள் இடிந்து விட்டன. அல்லது வெடித்து நிற்கின்றன. எனவே அந்த வீடுகளில் மறுபடியும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்டாய் நகரமே முற்றிலும் அழிந்து விட்டது போலவே காட்சி அளிக்கிறது.

தெருக்கள் முழுவதும் சுனாமியில் இழுத்து வரப்பட்ட பொருட்கள் சிதறி கிடக்கின்றன. சேறும், சகதியுமாக உள்ளது. எனவே தெருக்களில் நடந்து கூட செல்ல முடியவில்லை. சுனாமி அலை கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளே வந்துள்ளது.

துறைமுகத்தில் இழுத்து அடித்து வரப்பட்ட கண்டெய்னர்கள் கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் வரை உள் பகுதிக்குள் வந்து கிடக்கின்றன.

எங்கு பார்த்தாலும் கார்கள் குவியல், குவியலாக கிடக்கிறது. சுனாமியில் அடித்து செல்லப்பட்டவர்கள் உடல்கள் கடலில் மிதக்கின்றன. பல உடல்கள் கடற்கரையில் குவிந்து கிடக்கின்றன. இவற்றில் 300 உடல்களை மீட்பு படையினர் மீட்டு உள்ளனர்.

வீடுகளை இழந்தவர்கள் சுனாமி பாதிப்பு ஏற்படாத புறநகர் பகுதிகளில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உணவு பொருட்களோ, குடிநீரோ கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை.

தகவல் தொடர்புகளும் இல்லை. இதனால் ஊரில் உள்ள தங்கள் உறவினர்கள் கதி என்ன ஆனது என்று கூட தெரியாமல் தவிக்கின்றனர். மறுபடியும் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.

ஏன் என்றால் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்து விட்டன. வீடுகள் இடியாமல் இருந்தாலும் அங்கு செல்லும்பாதை முழுவதும் இடிபாடுகள் நிறைந்து கிடப்பதால் வீடு களுக்கு செல்ல முடிய வில்லை.

சென்டாய் நகரம் தற்போது மக்கள் வசிப்பதற்கே தகுதியற்ற இடமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் சென்டாய் நகரில் குவிந்துள்ளனர்.

ஆனால் சேதம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளை சரியாக செய்ய முடியவில்லை. மீட்பு பணிக்கு தேவையான எந்திரங்களை கொண்டு செல்லவும் சிரமமாக இருப்பதால் மீட்பு பணி மந்தமாக நடந்து வருகிறது.

வெளி இடங்களில் இருந்து எந்த வாகனமும் ஊருக்குள் வர முடியவில்லை. சாலைகள் முழுவதும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. சுனாமியில் அடித்து வரப்பட்ட கார்களும், இடிபாடுகளும் சாலைகளை அடைத்து கிடக்கின்றன.



No comments: